Tuesday, July 3, 2012

ஒலிம்பிக் ஹொக்கியில் சாதனை படைத்த இந்திய அணி….


ஹொக்கி என்றால் அதன் மறுபெயர் இந்தியாதான் என்றொரு காலமிருந்தது. ஆம்…. இந்தியா இதுவரை ஆடவர் ஹொக்கியில் 8 தங்கப்பதக்கங்கள், 1 வெள்ளிப்பதக்கம், 2 வெண்கலப்பதக்கங்கள் உள்ளடங்களாக மொத்தமாக 11 பதக்கங்களினை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒலிம்பிக் ஹொக்கியில் தொடர்ச்சியாக அதிக தடவை(06) தங்கப்பதக்கம் வென்ற நாடு இந்தியாதான். 


ஒலிம்பிக்கில் இந்திய ஹொக்கி அணி தங்கப்பதக்கம் வென்ற ஆண்டுகள்
Ø  1928 ஆம்ஸ்ரடாம்
Ø  1932 லொஸ் ஏஞ்சல்
Ø  1936 பேர்லின்
Ø  1948 லண்டன்
Ø  1952 ஹெல்சிங்கி
Ø  1956 மெல்பேர்ன்
Ø  1964 டோக்கியோ
Ø  1980 - மொஸ்கோ

ஒலிம்பிக்கில் இந்திய ஹொக்கி அணி வெள்ளிப்பதக்கம் வென்ற ஆண்டு
Ø  1960 ரோம் (பாகிஸ்தான் தங்கப்பதக்கம்)

ஒலிம்பிக்கில் இந்திய ஹொக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்ற ஆண்டுகள்
Ø  1968 மெக்சிக்கோ (பாகிஸ்தான் தங்கப்பதக்கம்)
Ø  1972 மூனிச் (மேற்கு ஜேர்மனி தங்கப்பதக்கம்)

அறிந்து கொள்வோம்......

Ø  ஒலிம்பிக் விளையாட்டில் ஆடவருக்கான ஹொக்கி முதன்முதலில் அறிமுகமாகியது 1908ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற போட்டியிலாகும். இதன் இறுதிப்போட்டியில் மோதிய இங்கிலாந்து அணி, அயர்லாந்து அணியினை 08 01 என்ற கோல் அடிப்படையில் வீழ்த்தி ஹொக்கியில் முதல் தங்கப்பதக்கத்தினை வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Ø  1912, 1924ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக்போட்டிகளில் ஹொக்கி விளையாட்டானது சேர்த்துக்கொள்ளப்படவில்லை.


இந்தியா, 32 ஆண்டுகளின்பின் ஒலிம்பிக் ஹொக்கியில்  சாதனை படைக்குமா?.....


******************************************************

"கிரிக்கெட்டில் 199".....!!!

இதுவரை நடைபெற்றுள்ள டெஸ்ட் போட்டிகளில், டெஸ்ட் இன்னிங்ஸ்சில் ஆட்டமிழக்காமல் 199 ஓட்டங்களை பெற்ற சோகமான சாதனைக்குரியவராக தற்போதைய இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் அன்டி பிளவர்[சிம்பாப்வே] திகழ்ந்தார்.


இந்தப் பட்டியலில் இறுதியாக இணைந்துகொண்டவர் இலங்கை அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார ஆவார். இலங்கை மண்ணில் நடைபெறுகின்ற இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் 1வது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸ்சில் குமார் சங்கக்கார 199 ஓட்டங்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதனுடன் தொடர்புடைய முந்தைய என் பதிவு.........

***
Blog Widget by LinkWithin