ஒலிம்பிக்
போட்டிகளில் முக்கியத்துவமான விளையாட்டாக மதிக்கப்படுகின்ற நிகழ்வாக "மரதன்" ஓட்டப்போட்டிகள்
விளங்குகின்றன. அந்தவகையில் 2004ம் ஆண்டு, ஒலிம்பிக் போட்டிகளின் பிறப்பிடமான
ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பரபரப்பினை ஏற்படுத்திய நிகழ்வொன்று
இடம்பெற்றது.
மதுபோதையில்வந்த சமூகவிரோதியால்
தடுத்துநிறுத்தப்படும்
வன்டெர்லெய் டீ லிமா
ஆம்....
ஒலிம்பிக் போட்டிகளில் நிறைவு அம்சமாக மரதன் ஓட்டப்போட்டிகள் நடாத்தப்படுகின்றன.
வழமைபோன்று 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் நிகழ்விலும் மரதன் ஓட்டப்போட்டி நிறைவு
அம்சமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது போட்டியின் நிறைவுத்தூரத்திற்கு 4 மைல்கள்
மட்டுமே எஞ்சியிருந்தபோது முதலாவதாக ஓடிவந்துகொண்டிருந்த பிரேசில் நாட்டின் வன்டெர்லெய்
டீ லிமா சற்றும் எதிர்பாராதவிதமாக, அயர்லாந்து நாட்டினைச் சேர்ந்த முன்னாள்
பாதிரியார் கொர்னீலியுஸ் ஹொரன் அவர்களினால் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தப்படுகின்றார்.
இதனால் நிலைகுலைந்த வன்டெர்லெய் டீ லிமாவினை பின்தள்ளி இத்தாலி நாட்டினைச் சேர்ந்த
ஸ்ரிப்னோ பல்டினி(2hr 10:54Secs), தங்கப்பதக்கத்தினை தட்டிச்செல்ல, வெள்ளிப்பதக்கத்தினை
ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த மெவ்ரஹ்ரொம் கெப்லிசிக்ஹி(2hr 11:29Secs) தட்டிச்செல்ல வன்டெர்லெய் டீ லிமா(2hr 12:11Secs) வெண்கலப்பதக்கத்தினையே பெறமுடிந்தமை
குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பிட்ட மரதன்
ஓட்டப்போட்டியில் 20km,25km,30km,35km ஆகிய தூரங்களில்
வன்டெர்லெய் டீ லிமாவே முன்னிலையில் ஓடிக்கொண்டிருந்தமை
நினைவில்கொள்ளத்தக்கதாகும்.
ஆனாலும் இவரின்
உயரிய தன்மைக்கும், நேர்மைத் தன்மைக்கும் மதிப்பளித்து சர்வதேச ஒலிம்பிக்
சம்மேளனத்தின் உயரிய விருதாகிய "பியர் டீ கூபடின்" பதக்கத்தினை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் வழங்கி
கெளரவமளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
***
3 comments:
அறியாத தகவல்கள்...
உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
அருமையான தகவல் கலக்குங்க :)
நன்றிகள் நண்பர்களே.....
Post a Comment