Sunday, August 29, 2010

"கிரிக்கெட்டில் 199".....!!!

இது என்னுடைய 199வது பதிவாகும். இந்த 199வது பதிவினை சிறப்பிக்குமுகமாக "கிரிக்கெட்டில் 199" என்கின்ற பதிவினை உங்கள் முன் பகிர்கின்றேன்.

டெஸ்ட் போட்டிகளில் 199 ஓட்டங்களில் ஆட்டமிழந்தவர்கள்

இதுவரை நடைபெற்றுள்ள டெஸ்ட் போட்டிகளில், டெஸ்ட் இன்னிங்ஸ்சில் 199 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து இரட்டைச் சதத்தினை ஒரேயொரு ஓட்டத்தினால் தவறவிட்டவர்கள் வருமாறு....

 முடாசர் நசார்(பாகிஸ்தான் Vs இந்தியா), பைசலாபாத், 1984/85

 முஹமட் அசாருதீன்(இந்தியா Vs இலங்கை), கான்பூர், 1986/87

 MTG எலியட் (ஆஸி Vs இங்கிலாந்து), லீட்ஸ், 1997/98

 சனத் ஜயசூரிய(இலங்கை Vs இந்தியா), கொழும்பு(SSC), 1997/98

 ஸ்ரிவ் வோ(ஆஸி Vs மே.தீவுகள்), பிரிஜ்டவுன், 1999/00

 யூனிஸ் கான்(பாகிஸ்தான் Vs இந்தியா), லாகூர், 2005/06
[199வது ஓட்டத்தில் ரன் அவுட்டான ஒரே வீரர்]

 இயன் பெல்(இங்கிலாந்து Vs தென்னாபிரிக்கா), லோட்ஸ், 2008/09

===================================

இதுவரை நடைபெற்றுள்ள டெஸ்ட் போட்டிகளில், டெஸ்ட் இன்னிங்ஸ்சில் ஆட்டமிழக்காமல் 199 ஓட்டங்களை பெற்ற ஒரேயொருவர் என்ற சாதனைக்குரியவர் தற்போதைய இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் அன்டி பிளவர்[சிம்பாப்வே] மாத்திரமே.


 அன்டி பிளவர் (சிம்பாப்வே Vs தென்னாபிரிக்கா), ஹராரே, 2001/02

***

No comments:

Blog Widget by LinkWithin