
ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 16ம் திகதியானது உலக உணவு தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.
உலகளாவியரீதியில் இன்று கட்டுக்கடங்காத உணவு விலைகள்,அதிகரித்த சக்தி பாவனை, நீர் அருமை ஆகியவற்றின் காரணமாக உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் தொகையினர் பசிக் கொடுமைக்கு ஆளாக நேரிடுமென அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
தற்சமயம் இன்று உலகினை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்ற பொருளாதார நெருக்கடிகள் , காலநிலை மாற்றம் , சக்தி மற்றும் நீர் அருமை ஆகிய விடயங்களில் உலகத் தலைவர்கள் காலபேதம் பாராமல் பணியாற்ற வேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது.
உலக சனத்தொகையானது 2.5 பில்லியனிருந்து 9.2 பில்லியனாக 2050ம் ஆண்டளவில் மாற்றமடையலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகத்தில் உணவுக்கான கேள்வியானது மேலும் மேலும் அதிகரிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்வுகூறலின் பிரகாரம் காலநிலை மாற்றங்களின் பிரகாரம் உலகளாவியரீதியில் 40 மில்லியனிலிருந்து 170 மில்லியனாக போசணைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகையானது அதிகரிக்கலாம் என்கின்றது.
ஏழ்மை நாடுகளானது விவசாயத்தில் அதிகமாக முதலீடுகளை மேற்கொள்வதுடன் பெண்களையும், சிற்றளவு உற்பத்தியாளர்களையும் அதிகளவில் கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகள் நெருக்கடிக்குள்ளாகின்ற மக்களுக்காக சமூக பாதுகாப்பு அளவீடுகளை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக காசுக் கொடுப்பனவுகள் மற்றும் வேலைவாய்ப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
செல்வந்த நாடுகள் , அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளில் நீண்ட கால நோக்கில் விவசாயத்துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதுடன் காலநிலை மாற்ற ஒப்புவமைகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.
உலக உணவு நெருக்கடி தொடர்பான புள்ளிவிபரங்கள்
• உலக சனத்தொகையில் இன்று 6 பேரில் ஒருவர் பசியால் வாடுகின்றனர். இது அண்ணளவாக 1 பில்லியன் மக்கள் தொகை ஆகும்.
• உலகளவில் அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளில் நிகழ்கின்ற 50% - 60 % எல்லா குழந்தைப் பருவ மரணங்களும் பசியுடன் தொடர்புபடுகின்றன.
• ஏழை மக்கள் தமது வருமானத்தில் 80%க்கும் அதிகமான தொகையினை நிலைகுலையச் செய்கின்ற விலைகளினால் உணவுகளிலேயே செலவிடுகின்றனர்.
• விவசாயத் துறையில் வெளிநாட்டு அபிவிருத்தி உதவிகள் செலவிடப்படுவதானது 1980களில் 25% ஆக இருந்தது , இன்று அது 3% ஆகக் குறைவடைந்துவிட்டது.
(தரவுகள்-Oxfam)
உலகளாவிய பசிச் சுட்டெண் (Global Hunger Index)
உலகளாவியரீதியில் அதிகளவில் பசிக்கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கின்ற நாடுகளாக புருண்டி,சாட், கொங்கோ குடியரசு, எதித்ரியா, எதியோப்பியா, சியராலியோன், , உட்பட 29நாடுகள் விளங்குகின்றன. மேற்கூறிய அனைத்து நாடுகளும் பாரியளவில் உள் நாட்டு நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
+++
2 comments:
நல்ல பதிவு... தொடருங்கள்
கங்ராட்ஸ் பாஸ்...!
Post a Comment