Friday, July 17, 2009
அடுத்த முழு சூரிய கிரகணம் எப்போது ஏற்படும் தெரியுமா?
உலகம் முழுவதும் எதிர்வரும் 22ஆம் திகதி சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னா அருகிலுள்ள "தரிகனா" என்ற ஊரே முழுச் சூரிய கிரகணத்தை தெளிவாகவும், துல்லியமாகவும் அவதானிப்பதற்கு மிகப் பொருத்தமான இடம் என்று தெரியவந்துள்ளது.இதை நாசா விஞ்ஞானிகளும் அறிவித்துள்ளனர்.
கடந்த 1991ஆம் ஆண்டு முழுமையான சூரிய கிரகணம் ஏற்பட்டது.அதன்பிறகு 18 ஆண்டுகள் கழித்து தற்போது முழு சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது.
இனி இத்தகைய முழு சூரிய கிரகணம் எப்போது ஏற்படும் தெரியுமா? நமக்கெல்லாம் இதனை பார்வையிட சந்தர்ப்பங்கள் கிடையாது எனலாம். அதாவது 2132 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 13ஆம் திகதிதான் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
***
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!
super article
http://panguvanigamtips.blogspot.com/
நல்ல தகவல். நன்றி
Post a Comment