கிரிக்கெட்டில் சில சுவையான சாதனை தகவல்கள் தொடர்பான பதிவு-4 உங்கள்முன்னால் இதோ:
1)உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் முதல் உத்தியோகபூர்வ பந்தினை வீசியவர் என்ற பெருமைக்குரியவர் இந்திய அணி வீரர் -மதன் லால் 1975 ஜுன் 07ல் இங்கிலாந்து அணிக்கெதிராக.
2) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தலா இரண்டு ஹெட்ரிக் சாதனைகளை நிகழ்த்திய பெருமைக்குரிய வீரர்கள் வசிம் அக்ரம்(பாகிஸ்தான்) மற்றும் சமிந்த வாஸ்(இலங்கை)
3) தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற சாதனைக்குரிய வீரர் A.G. ஷிபர் பீல்ட் ( அவுஸ்திரேலியா Vs இங்கிலாந்து -1934)
4) சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டியிலேயே அறிமுகமான போது வயது 16ஆண்டுகள் 205நாட்கள்.
5) தென்னாபிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 1000 ஓட்டங்களை விரைவாக பெற்ற சாதனைக்குரிய வீரர் கிரேம் ஸ்மித் (17 டெஸ்ட்களில்)
6) Googly பந்துவீச்சினை கண்டுபிடித்த பெருமைக்குரியவர் Bernard Bosanquet (இங்கிலாந்து)
7) டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 டெஸ்ட் சதங்களை பெருமைக்குரியவர் ஜக் கலிஸ் (தென்னாபிரிக்கா)
***
No comments:
Post a Comment