Thursday, July 9, 2009

கிரிக்கெட்- சில சுவையான தகவல்கள்

(இந்த பதிவை தனது youthful.vikatan.com இல் 'குட் ப்ளாக்ஸ்' பகுதியில் வெளியிட்ட விகடனுக்கு நன்றி.)
கிரிக்கெட்டில் சில சுவையான சாதனை தகவல்கள் உங்கள் முன்னால் இதோ:


1) டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய முதல் இந்திய வீரர் K.S.Ranjitsinjhi, இவர் இங்கிலாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 1896 - 1902 ஆம் ஆண்டு வரை விளையாடினார்.

2)Gul Mohammad, Amir Elahi , Abdul Kardar ஆகிய மூன்று வீரர்களும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சார்பில் விளையாடியுள்ளனர். எப்படி சாத்தியம்? ஆம்,இந்தியா சுதந்திரம் அடைய முன்னரும், பின்னரும் விளையாடியுள்ளனர்.

3) Don Bradman 90(Nineties)ஓட்டங்களில் ஒருபோதும் ஆட்டமிழக்கவில்லை, 89 ஓட்டங்களில் அவர் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.








4)கிரிக்கெட்டின் தாயகமான லோட்ஸ் ( Lord’s) மைதானத்தில் இரட்டைசதம் பெற்ற முதல் ஆசிய வீரர்-பாகிஸ்தான் முன்னாள் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் Mohsin Khan

5 ) டெஸ்ட் கிரிக்கெட்டில் தமது முதல் வெற்றியை பதிவு செய்துகொள்ள இந்தியா 19 வருடங்களையும், 230 நாட்களையும் எடுத்துக்கொண்டது.







6) M.A.K.Pataudi இந்திய அணி சார்பாக 46 டெஸ்ட்களில் விளையாடியுள்ளர்,இதில் 40 டெஸ்ட் போட்டிகளில் அணி தலைவராக விளங்கினார்.

7)டெஸ்ட் போட்டிகளில் முதல் பிடியெடுப்பை எடுத்துக்கொண்ட வீரர் Allen Hill-இங்கிலாந்து

****

3 comments:

shabi said...

ஏன் உங்க பதிவுக்கு யாரும் பின்னூட்டம் இடுவதில்லை

shabi said...

உங்கள் பதிவுகளை இப்போதுதான் படிக்கிறேன்னு நினைக்கிறேன்

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நாம எல்லாம் பிரபல்யமில்லையே, முயற்சி செய்கின்றேன். நன்றிகள்

Blog Widget by LinkWithin