கிரிக்கெட்டில் சில சுவையான சாதனை தகவல்கள் தொடர்பான பதிவு-2 உங்கள் முன்னால் இதோ:
1)டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரே நாளில் இரு தடவைகள் முழுமையாக ஆட்டமிழந்த ஒரேஒரு அணி என்ற பெருமைக்குரியது இந்தியா
2)அறிமுக டெஸ்ட் போட்டி ஒன்றில் பூச்சியம் (Duck) மற்றும் சதம் பெற்ற பெருமைக்குரிய ஒரேஒரு இந்திய வீரர் குண்டப்பா விஸ்வநாத்( G.R.Viswanath )
3) டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரே நாளில் முச்சதம் பெற்ற பெருமைக்குரிய ஒரேஒரு வீரர் டொன் பிரட்மன் -அவுஸ்திரேலியா Vs இங்கிலாந்து
4) இலங்கை அணியின் சார்பில் அறிமுக டெஸ்ட் போட்டி ஒன்றில் சதம் பெற்ற பெருமைக்குரிய வீரர்கள் பிரெண்டன் குறுப்பு மற்றும் ரொமெஸ் களுவிதாரண. இதில் சிறப்பம்சம் யாதெனில் இருவரும் விக்கெட் காப்பாளர்கள்.
5)தமது அணியின் 1வது மற்றும் 100வது டெஸ்ட் போட்டி விளையாடிய பெருமைக்குரிய ஒரேஒரு வீரர் அர்ஜூன ரணதுங்க.
6)டெஸ்ட் போட்டி ஒன்றில் முச்சதம் பெற்ற முதல் வீரர் என்ற பெருமைக்குரிய வீரர் அண்டி சந்தம் -இங்கிலாந்து
7) உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் அதிவேக சதம் பெற்ற பெருமைக்குரிய வீரர்- மத்திவ் ஹெய்டன் - 66பந்துகள் (Aus Vs SA-2007)
***
1 comment:
ந்ல்ல தகவல்கள்
Post a Comment