2003 மே 21ம் திகதி கொன்கோர்ட் (Concorde) விமானமானது தனது இறுதிப்பறப்பினை நியூயோர்க் நகரத்திலிருந்து பாரிஸ் நகரத்தை நோக்கி 2500km/h(1553mph) க்கும் அதிகமான வேகத்தில் 4 மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்தினை எடுத்துக்கொண்டது. 27வருடங்களாக வான்பரப்பில் பறப்பினை மேற்கொண்ட இந்த அழகிய Franco - British பறவை என வர்ணிக்கப்படும் இந்த கொன்கோர்ட்டானது நீண்டதூர விமானப்போக்குவரத்து உயர்சந்தையில் நிரந்தரமாக கூடு கட்டத் தவறிவிட்டது.
கொன்கோர்ட் விமானம்
கொன்கோர்ட் அறிமுகமாகிய காலகட்டத்தில் ஒலித்தடைகளை 1224 km/h(761mph) அல்லது Mach1(Mach என்பது ஒலி அளவை ஆகும்) வேகத்தில் தகர்த்துக்கொண்டு பயணித்து நவீனத்தின் ஒரு ஆற்றல்மிக்க சின்னமாக விளங்கியது. கொன்கோர்ட்டானது அதனுடைய நாட்களில் புரட்சிக்குரியதாக விளங்கியது ஆனால் அக்காலகட்டத்தில் கிடைக்கப்பெற்ற தொழில்நுட்பங்களில் தங்கியிருந்தது. இது பாரம் கூடியதாகவும், சத்தத்தை அதிகம் வெளிப்படுத்துவதாகவும் அதாவது நவநாகரிகத்திலிருந்து விலகிச்செல்வது போன்று இருந்தது. 1970களில் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடிகள் அதனுடைய இலக்குகளை வரையறுத்தது. ஒலியைக்காட்டிலும் விரைவான பறப்புக்கள் (Supersonic Flight) இலாபமற்றதாக கருதி விமானகம்பனிகள் முடிவுசெய்ததுடன், விமான உற்பத்தியாளர்கள் அதை கைவிட்டார்கள்.
எயார்பஸ்-A380 விமானம்
ஒலி வேகத்தைக் காட்டிலும் குறைவான வேகமுடைய (Subsonic) எயார்பஸ்கள் (Airbuses) மற்றும் போயிங் (Boeings) ஆகியன (இரண்டினதும் பறப்பு வேகம் 1000km/h / 621 mph இலும் குறைவாகும்)உலக வான்பரப்புகளில் தமது சேவையை ஆரம்பித்தன.கடந்த 30 ஆண்டுகளாக சுப்பர்சொனிக் பறப்புக்கள் கண்டிப்பான இராணுவ நடவடிக்கைகளிலேயே தொடர்புபட்டிருந்தன.தாக்குதல் விமானங்கள் சுப்பர்சொனிக்கிலிருந்து ஹைபர்சொனிக்கு(Supersonic to Hypersonic) ஏற்றம் பெற்றன. Hypersonic என்பது ஒலியைக் காட்டிலும் 5 மடங்கு வேகம் - அதாவது Mach 5 .
போயிங் விமானம்
NASA வினுடைய மனிதனற்ற பிரதிகலமானது Mach 9.6 / 11250km/h(6990mph) வேகத்தில் 2004 நவம்பர் மாதம்,பயணித்து முழுமையான சாதனையை படைத்தது.
வர்த்தக விமானப்போக்குவரத்தில் Hypersonic தடைகளை(6000km/h / 3728mph) வேகத்தில் தகர்த்துக்கொண்டு பயணம் செய்வது தற்போது ஐரோப்பிய விமான உற்பத்தியாளர்களிடையே மிகத்தீவிரமான ஆராய்ச்சி செயற்களமாக உள்ளது.
இது பெருமளவில் விஞ்ஞான புனைகதையாக இருக்கலாமா?, ஆனால் பொறியியலாளர்கள் இதுதான் தமது Concorde grandchildren திட்டத்தை ஆரம்பிக்க சரியான தருணம் என நம்புகின்றார்கள். இந்த விமானமானது 300 பயணிகள் மற்றும் மொத்தமாக 400 தொன்களையும் சுமக்கக்கூடியதாகவும் வடிவமைக்கப்படவுள்ளது.
இது Lapcat ( Long Term Advanced Propulsion Concepts and Tchnologies)செயற்றிட்டம் எனப்படுகின்றது. இந்த செயற்றிட்டத்தை ESTEC (European Space Research and Technology Centre)மற்றும் ESA ( The Engireening Branch of the European Space Agency) ஆகியன இணைந்து ஒழுங்கமைக்கின்றன.
திரவ ஐதரசன் இயந்திரங்களானது (Liquid Hydrogen Engines) பாரம்பரியமான ஜெட் (Traditional Kerosene Turbo-Jets) முறையிலிருந்து முழுவதும் வித்தியாசமானது. இச்செய்முறையானது Lapcat செயற்றிட்டத்தில் உள்ளக்கப்பட்டுள்ளது.
திரவ ஐதரசன் எரிபொருளானது மிக உயர்ந்தளவான சக்தி வினைத்திறனாகும், பாரம் குறைந்தது, காபன் வெளியேற்றங்கள் (Carbon Emissions) இல்லை, சூழலுக்கு குறைந்தளவான சேதம்,ஆகியவற்றுடன் இயந்திரத்தினை குளிர்மைப்படுத்தும் ஒரு மிதமான தட்பநிலையை உண்டுபண்ணும் மூலமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஏவுகணை நிலையமைத்தல் மற்றும் விண்வெளி இயந்திர உற்பத்தி தொழிற்துறைகள் ஆகிய மிகமுன்னேற்றமடைந்த உயர் செயற்பாட்டு தொழில்நுட்பங்களுக்கு இந்த உயர்வான எரிபொருளை பயன்படுத்தும்முகமாக நீண்டகாலத்துக்கு அபிவிருத்தி செய்யப்படுகின்றது. எவ்வாறாயினும் இதனுடைய உயர் கொழுந்துவிட்டெரிதல் (High Flammability) மிகமுக்கியமானதொரு பிரச்சினையாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
Lapcat செயற்றிட்டத்தில் 6 நாடுகளுடன் (பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, பிரிட்டன்) 14 பங்காளிகளும் அடங்குகின்றனர்.
இதில் பிரிட்டிஸ் கம்பனியான Reaction Engines ஒரு பிரதான செயற்றிட்ட பங்காளர்.
Scimitar என்ற பெயரின் கீழ் ஒரு ஆராய்ச்சி பிரதிகலத்தை அபிவிருத்தி செய்துகொண்டிருக்கின்றது. இந்த இயந்திரமானது Turbo-Jet தொழிற்பாடுகளையும் Ramjet தொழிற்பாடுகளையும் குறிப்பிடத்தக்கது.
Artist rendering of the A2 (Source: Reaction Engines Limited)
செயற்றிட்ட பொறியியலாளர்கள் இன்றைய தலைமுறையின் வானூர்தி கலையியலில் Hypersonic விமானங்கள் "A2" என்ற மகுடத்தினை தாங்கிவருவதை மிக நெருக்கமாக பார்க்கின்றார்கள்.இந்த வானூர்தியானது 140m க்கு அதிகமான நீளமுடையதாகவும் (Airbus A380 ஆனது 73m நீளமானது),பாரம் குறைந்த வானூர்தி கட்டுமாணம், 7.5m விட்டம்,மத்தியில் Delta சிறகுகள்,ஒவ்வொன்றும் 02 இயந்திரங்களை சுமந்து செல்லும்முகமாகவும் வடிவமைக்கப்படவுள்ளது, மேலும் ஐதரசன் வானூர்தி கட்டுமாண கொள்ளவிகள் ஆகியவற்றினையும் உள்ளடக்கவுள்ளன.
(Source: Reaction Engines Limited)
A380 விமானம் மற்றும் A2 விமானம் வடிவமைப்பில் ஒரு ஒப்பீடுஇந்த அதிவேக விமானப்பயணம் 2023 ஆம் ஆண்டளவில் சாத்தியமாகும் என பொறியியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். நடைமுறை வணிக வகுப்பு பயணச்சீட்டில் உங்கள் பயணம் சாத்தியமாகும் .
அதிகவேகத்துக்கு உதாரணமாக Brussels To Sydney நகரங்களுக்கிடையில் 4மணி நேரப்பறப்பு சாத்தியமாகுமாம்.