Friday, March 5, 2010

உலகினை தாக்கிய அதிசக்தி வாய்ந்த பூகம்பங்கள்





கடந்த 27ம் திகதி தென் அமெரிக்காவின் சிலி நாட்டினை 8.8 ரிச்டர் அளவில் தாக்கிய அதிசக்திவாய்ந்த பூகம்பத்தின் காரணமாக 700க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். சிலி நாட்டினை தாக்கிய பூகம்பத்தின் காரணமாக 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சிலி, ஜப்பான், ஹவாய் தீவுகள், ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகளினை பூகம்பத்தினை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமிப் பேரலைகள் தாக்கி சேதங்களை ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.



இந்தப் பூகம்ப மையமானது சிலியின் தலைநகர் சண்டியாகோவிலிருந்து 350 கிலோமீற்றர் தொலைவில் பசுபிக்பெருங்கடலில் மையம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சிலியில் ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த பூகம்பத்தின் காரணமாக பூமியின் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை கடந்த ஜனவரி மாதம் ஹெய்ட்டி நாட்டினை 7.0 ரிச்டர் அளவில் தாக்கிய பூகம்பத்தின் காரணமாக 250,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டமையும் இங்கே நினைவுகூரத்தக்கதாகும்.

உலகினை தாக்கிய அதிசக்தி வாய்ந்த [ரிச்டர் அளவின் பிரகாரம்] பூகம்பங்கள் தொடர்பான விபரங்கள் வருமாறு..........
1) மே22, 1960ம் ஆண்டு சிலி நாட்டின், வல்டிவா பிராந்தியத்தினை தாக்கிய 9.5 ரிச்டர் அளவிலான பூகம்பம்

2) டிசம்பர்26, 2004ம் ஆண்டு இந்துசமுத்திர பிராந்தியத்தினை தாக்கிய சுனாமி பேரலைக்கு காரணமான இந்தோனேசியாவின் வடசுமாத்திராவின் ஆழ்கடலில் ஏற்பட்ட 9.3 ரிச்டர் அளவிலான பூகம்பம்

3) மார்ச் 27, 1964ம் ஆண்டு அமெரிக்காவின் அலெஸ்காவினை தாக்கிய 9.2 ரிச்டர் அளவிலான பூகம்பம்

4) நவம்பர்4, 1952ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் கம்சட்காவினை தாக்கிய 9.0 ரிச்டர் அளவிலான பூகம்பம்

5) ஜனவரி26, 1700ம் ஆண்டு சஸ்கடியா வலயத்தினை தாக்கிய ~9.0 ரிச்டர் அளவிலான பூகம்பம்

6) ஜனவரி31, 1906ம் ஆண்டு கொலம்பியா-ஈக்குவடோரினை 8.8 ரிச்டர் அளவிலான பூகம்பம்

7) பெப்ரவரி 27,2010ம் ஆண்டு சிலியினை தாக்கிய 8.8 ரிச்டர் அளவிலான பூகம்பம்

8) பெப்ரவரி 4,1965ம் ஆண்டு அமெரிக்காவின் அலெஸ்கா, ரட் தீவுகளினை தாக்கிய 8.7 ரிச்டர் அளவிலான பூகம்பம்

9) நவம்பர்25, 1833ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமாத்திராவினை தாக்கிய 8.8-9.2 ரிச்டர் அளவிலான பூகம்பம்

10) நவம்பர்1, 1833ம் ஆண்டு போர்த்துக்கல் ராஜ்ஜியத்தின் லிஸ்பனை தாக்கிய ~8.7 ரிச்டர் அளவிலான பூகம்பம்


பூகம்பங்கள் தொடர்பான என்னுடைய முந்தைய பதிவு -உலகினை உலுக்கிய பூமியதிர்ச்சிகள்

***

No comments:

Blog Widget by LinkWithin