இந்த தொடர்பாடல் தொழில்நுட்பமானது தீராத நோய்களின் கொடுமைகளினால் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படுவதனை குறிப்பிடலாம். நோயாளர்களின் கையடக்கத் தொலைபேசிக்கு அவர்களுக்கு அடுத்து நிர்ணயிக்கப்பட்ட மருத்துவருடனான சந்திப்பு அல்லது சோதனை அல்லது அவர்கள் எடுக்க வேண்டிய மருந்துகள் தொடர்பாக நினைவுபடுத்த ஒரு SMS தகவலினை அனுப்புவதானது சிறந்ததொரு நடவடிக்கை என்கின்றார் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் சிறுவர் மையத்தின் Delphine Robotham.
Robotham மேலும் தெரிவிக்கையில் ஆய்வுகளின் பிரகாரம் அரைப்பங்கான நோயாளர்கள் அவர்கள் நாளந்தம் எடுக்க வேண்டிய ஒழுங்குமுறையான மருந்துகளினை எடுக்கத் தவறுகின்றனர் என்கின்றார். மருந்தினை உள்ளெடுக்க சில பங்கினர் மறப்பதற்கான பிரதான காரணமாக கவனமின்மை ஆகும். ஆகவே அவர்களுக்கு நினைவுறுத்த ஒரு தகவலானது தேவைப்படுகின்றது.
இன்று பல்வேறு வகையான ஆய்வுகளில் SMS பயன்பாட்டினை பயன்படுத்துவதனை Robotham அவர்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றார்.
உதாரணமாக , நீரிழிவு நோயின் பாதிப்பினைக் கொண்ட குழந்தைகளுக்கு அவர்களின் குருதியில் வெல்லத்தின் அளவினைக் சோதிக்கும் சோதனையானது மேம்பட்டுக் காணப்படுகின்றதாம். இந்தக் குழந்தைகள் அவர்களின் குருதியில் வெல்லத்தின் அளவினைக் சோதிக்கும் சோதனை முடிவுகள் தொடர்பில் அவர்களின் மருத்துவர்களின் நிலையத்துடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
பிறிதொரு ஆய்வில், ஈரல் மாற்றீடு செய்யப்பட்டவர்கள் அதன் பின்னரான மருத்துவ முறைகளில் கவனம் செலுத்துவதானது மேம்பட்டுள்ளது.
தீராத நோயின் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளவர்கள் நாளாந்தம் மருத்துவமானது தேவைப்படுகின்றது. அதாவது எச்.ஐ.வி, அஸ்த்மா, காச நோய், அல்லது நீரிழிவு போன்ற நோய்கள் தொடர்பிலான நாளாந்த சோதனைகள் செய்வர்களுக்கு SMS சிகிச்சையானது சிறந்ததாகும் என்கின்றார் Robotham.
சர்வதேச ஹொக்கி சம்மேளத்தின் ஏற்பாட்டில் 12 நாடுகள் பங்குபற்றுகின்ற 12 வது உலகக் கிண்ண ஹொக்கிசுற்றுப் போட்டி இந்தியாவில் வருகின்ற பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.
1வது உலகக் கிண்ண ஹொக்கிசுற்றுப் போட்டியானது 1971ம் ஆண்டு ஸ்பெயின், பார்சிலோனாவில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தினை தனதாக்கிக் கொண்டது. 1வது உலகக் கிண்ண ஹொக்கிசுற்றுப் போட்டியே குறைந்த நாடுகள்(10) பங்குபற்றிய சுற்றுப்போட்டியாகும். 10வது உலகக் கிண்ண ஹொக்கிசுற்றுப் போட்டியே அதிக நாடுகள்(16) பங்குபற்றிய சுற்றுப்போட்டியாகும்.
உலகக் கிண்ண ஹொக்கிசுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணி அதிகமாக 4 தடவைகள் கிண்ணத்தினை(1971, 1978, 1982, 1994) வெற்றி கொண்டுள்ளது.மேலும் 2 தடவைகள் 2ம் இடத்தையும்(1975, 1990) , ஒரு தடவை 4ம் இடத்தையும் (1973) தனதாக்கிக் கொண்டுள்ளது.
நெதர்லாந்து அணி 3 தடவைகள் கிண்ணத்தினை (1973, 1990, 1998)வெற்றி கொண்டுள்ளது.மேலும் 2 தடவைகள் 2ம் இடத்தையும்(1978, 1994) , ஒரு தடவை 3ம் இடத்தையும்(2002) மற்றும் ஒரு தடவை 4ம் இடத்தையும்(1982) தனதாக்கிக் கொண்டுள்ளது.
இந்தியா(1975) மற்றும் அவுஸ்ரேலியா(1986) அணிகள் தலா ஒரு தடவை கிண்ணத்தினை வெற்றி கொண்டுள்ளன.
ஜேர்மனி அணி மூன்று தடவை 3ம் இடத்தையும்(1973, 1975, 1986) மற்றும்நான்கு தடவை 4ம் இடத்தையும்(1978, 1990, 1994, 1998) தனதாக்கிக் கொண்டுள்ளது.
அவுஸ்ரேலிய அணி அதிக பட்சமாக 5 தடவைகள் 3ம் இடத்தை (1978, 1982, 1990, 1994, 1998) தனதாக்கிக் கொண்டுள்ளது.
சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் அதிக தடவை கிண்ணத்தினை வெற்றி கொண்ட அணியாக நெதர்லாந்து அணி 2தடவைகள் கிண்ணத்தினை (1973, 1998)வெற்றி கொண்டுள்ளது.
ஆசியா மற்றும் ஐரோப்பா கண்ட நாடுகள் தலா 5 தடவைகள் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன. ஓசியானியா கண்ட நாடுகள் ஒரு தடவையே சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.
ஆபிரிக்கா மற்றும் அமெரிக்க கண்ட நாடுகள் ஒரு தடவையேனும் சாம்பியன் பட்டம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆபிரிக்கா கண்டத்தில் கென்யா ஒரு தடவை 4ம் இடத்தையும்(1971) , அமெரிக்க கண்டத்தில் ஆர்ஜென்ரினா ஒரு தடவை 6ம் இடத்தையும்(1986) பெற்றமையே அதிகபட்சமான வெற்றியாகும்.
ஒலிம்பிக்கில் ஹொக்கி விளையாட்டில் 8 தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ள இந்திய அணியானது உலகக் கிண்ண ஹொக்கிசுற்றுப் போட்டியில் இதுவரை ஒரு தடவையே சாம்பியன் பட்டத்தினை தனதாக்கிக் கொண்டுள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு கொடுக்கின்ற முன்னுரிமையானது ஹொக்கி உட்பட ஏனைய விளையாட்டுக்கு கொடுப்பதில்லை என பரவலாக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஹொக்கி விளையாட்டில் இந்திய அணி வெற்றிக் கொடி கட்டிய காலங்கள் மீண்டும் வருமென்பது தற்சமயம் கனவாகவே தென்படுகின்றதெனலாம்? இந்திய மண்ணில் நடைபெறுகின்ற இச்சுற்றுப் போட்டியில் இந்திய அணி சாதிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்...............
உலகக் கிண்ண ஹொக்கிசுற்றுப் போட்டியில் இதுவரை சாம்பியன் பட்டம் பெற்ற நாடுகள் தொடர்பான விபரம்
·1வது உலகக் கிண்ண ஹொக்கிசுற்றுப் போட்டி ஸ்பெயின், பார்சிலோனாவில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தான் அணி, இந்திய அணியை 2-1 என மேலதிக நேரத்தில் வீழ்த்தி சாம்பியனானது.(1971)
·2வது உலகக் கிண்ண ஹொக்கிசுற்றுப் போட்டி நெதர்லாந்து, அம்ஸ்ரெல்வீனில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியது. இதில் நெதர்லாந்து அணி, இந்திய அணியை 4-2 (2-2) என தண்டனை உதையில் வீழ்த்தி சாம்பியனானது.(1973)
·3வது உலகக் கிண்ண ஹொக்கிசுற்றுப் போட்டி மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 2-1 என வீழ்த்தி சாம்பியனானது.(1975)
·4வது உலகக் கிண்ண ஹொக்கிசுற்றுப் போட்டி ஆர்ஜென்ரினா,புவனோ அயர்ஸ்சில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தான் அணி, நெதர்லாந்து அணியை 3-2 என வீழ்த்தி சாம்பியனானது.(1978)
·5வது உலகக் கிண்ண ஹொக்கிசுற்றுப் போட்டி இந்தியா, மும்பாயில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் மே.ஜேர்மனி மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தான் அணி, மே.ஜேர்மனி அணியை 3-1 என வீழ்த்தி சாம்பியனானது.(1982)
·6வது உலகக் கிண்ண ஹொக்கிசுற்றுப் போட்டி இங்கிலாந்து, லண்டனில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது. இதில் அவுஸ்ரேலியா அணி, இங்கிலாந்து அணியை 2-1 என வீழ்த்தி சாம்பியனானது.(1986)
·7வது உலகக் கிண்ண ஹொக்கிசுற்றுப் போட்டி பாகிஸ்தான், லாகூரில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் நெதர்லாந்து அணி, பாகிஸ்தான் அணியை 3-1 என வீழ்த்தி சாம்பியனானது.(1990)
·8வது உலகக் கிண்ண ஹொக்கிசுற்றுப் போட்டி அவுஸ்ரேலியா, சிட்னியில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தான் அணி, நெதர்லாந்து அணியை தண்டனை உதை மூலம்4-3 (1-1) என வீழ்த்தி சாம்பியனானது.(1994)
·9வது உலகக் கிண்ண ஹொக்கிசுற்றுப் போட்டி நெதர்லாந்து, உட்ரெஹ்ட்ரில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதியது. இதில் நெதர்லாந்து அணி, ஸ்பெயின் அணியை 3-2 என மேலதிக நேரத்தில் வீழ்த்தி சாம்பியனானது.(1998)
·10வது உலகக் கிண்ண ஹொக்கிசுற்றுப் போட்டி மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஜேர்மனி மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதியது. இதில் ஜேர்மனி அணி, அவுஸ்ரேலியா அணியை 2-1 என வீழ்த்தி சாம்பியனானது.(2004)
·11வது உலகக் கிண்ண ஹொக்கிசுற்றுப் போட்டி ஜேர்மனி, மொன்சின்கிளட்வச்சில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஜேர்மனி மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதியது. இதில் ஜேர்மனி அணி, அவுஸ்ரேலியா அணியை 4-3 என வீழ்த்தி சாம்பியனானது.(2008)
உலகில் அண்மைக்கால ஏற்பட்டுவருகின்ற உணவுத் தட்டுப்பாட்டுக்கு வளர்முக நாடுகள் விவசாய விளைபொருட்களினைப் பயன்படுத்தி தாவர எண்ணெய் உற்பத்தியினை மேற்கொண்டதும் ஒரு காரணமென பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது. ஆம், இந்தப் புதிய தாவர எண்ணெய் கண்டுபிடிப்பானது உலகினை புதியதொரு மாற்றத்துக்கு இட்டுச் செல்ல உதவுமா ?...................
அமெரிக்காவின் தோமஸ் ஜெபர்சன் பல்கலைக்கழகத்தின் , ஜெபர்சன் மருத்துவக் கல்லூரியின் உயிரியல் தொழில்நுட்ப பிரிவின் உதவி பேராசிரியர் Vyacheslav Andrianov மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், ஏனைய விவசாய பயிர்களினை விடவும் புகையிலையின் மூலம் அதிக வினைத்திறனான தாவர எண்ணெய்யினை உருவாக்க முடியுமென கண்டறிந்துள்ளார்.
எவ்வாறாயினும், அதிகப்படியான எண்ணெய்யானது விதைகளிலேயே காணப்படுகின்றது. புகையிலை விதைகளானது, ஒவ்வொரு உலர் நிறையில் 40 சதவீதமான எண்ணெய்யினை சேர்த்துள்ளன.
ஆனாலும் விதைகள் மூலம் பெறப்பட்ட எண்ணெய்யானது , டீசல் இயந்திரங்களுக்கான எண்ணெய்யாக பயன்படுத்தி சோதிக்கப்பட்டது.புகையிலை தாவரங்களானது சாதாரணமான அளவிலேயே விதைகளினை விளைச்சலாகப் தரக்கூடியது.அதாவது ஏக்கருக்கு 600 கிலோகிராம் அளவிலான விதைகளினை மட்டுமேயாகும்.
Dr. Andrianovமற்றும் அவரது குழுவினர் புகையிலை தாவரங்களிலிருந்து,அதாவது அவற்றின் இலைகள் எண்ணெய் வெளியிடுவதனை கண்டறிவதற்கான வழிகள் தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளனர்.
“தாவர எண்ணெய் பெறுவதற்கு புகையிலையானது பொருத்தமானதாகும், ஏனெனில் இவை உணவுற்பத்திக்கு பயன்படுத்தப்படாதலாகும்.” என்கின்றார் Dr. Andrianov.
“புகையிலை தாவர இலைகள் அதிகமான எண்ணெய்யினைப் பெறுவதற்கான வழிவகைகளினை கண்டறிந்துள்ளோம்”. மேலும் சிறு எடுத்துக்காட்டாக, மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களிலிருந்து 20-போல்ட்க்கும் (20-fold )அதிகமான எண்ணெய்யினை இலைகளிருந்து பெறலாம். என்கின்றார் Dr. Andrianov.
வழமையில் புகையிலை தாவர இலைகளானது உலர் நிறையில் 1.7 % தொடக்கம் 4% வரை எண்ணெய்யினைக் கொண்டுள்ளது.
தாவரங்களானதுDiacyglycerol Acytransferase (DGAT) ஜீன் அல்லது LEAFY COTYLEDON 2 (LEC2) ஜீனினை இயக்கத்துக்காக கொண்டுள்ளன.
DGAT ஜீன்மாற்றத்தினால், இலைகளின் உலர் நிறையில் 5.8 சதவீதமான எண்ணெயினைப் பெறலாம். இது சாதாரணமாக உற்பத்தி செய்யப்படுகின்ற எண்ணெய்யில் 2 போல்ட் (two-fold) ஆகும்.
LEC2ஜீன்மாற்றத்தினால், இலைகளின் உலர் நிறையில் 6.8 சதவீதமான எண்ணெயினைப் பெறலாம்.
இந்த தரவுகளின் பிரகாரம் , புகையிலையானது பொருத்தமான , உறுதியானதொரு “சக்தி தாவரம்” ஆக பிரதி நிதித்துவப்படுத்தவதற்கான ஒரு அடித்தளமாக விளங்குகின்றது. மேலும் தாவர எண்ணெய் உற்பத்திக்கு ஒரு பிரதானமானதாகவும் புகையிலை விளங்கலாம் என்கின்றார் Dr. Andrianov.
மாற்று எரிபொருளுக்கு உலகம் தயாராகிவிட்டதா ? அப்படியாயின் உலகம்உங்கள்கரங்களில்மாற்றத்துக்காக ...............