வருடாந்தம்
ஜூலை மாதம் 29ம் திகதி சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்படுகின்றது. கடந்த நூறாண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையானது
97% இனால் வீழ்ச்சியடைந்துள்ளது.
உலக வனவிலங்குகள் நிதியத்தின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் உலகிலுள்ள புலிகள் எண்ணிக்கை
3200 மட்டுமே ஆகும்.
புலிகளுக்கு மனிதர்களைத் தவிர வேறு எதிரிகள்
கிடையாது. உலகில் தற்சமயம் 6 வகையான புலி
இனங்களே எஞ்சியுள்ளதாம். மேலும் 3 இனங்கள் அழிவடைந்துவிட்டதாம்.
மனிதச் செயற்பாடுகளின் காரணமாக குறிப்பாக வேட்டையாடுதல்,
வாழிடங்களினை அழித்தல் போன்றவற்றால் புலிகள் உலகில் அருகிவருகின்ற விலங்கினங்களில்
ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு புலிகளைப் பாதுகாப்பதனை நோக்கமாகக்
கொண்டு சர்வதேச புலி தினமானது கொண்டாடப்படுகின்றது.
அந்தவகையில்,
புலிகள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் சில…..!
# ஆசியாவினைப்
பூர்வீகமாகக் கொண்ட புலிகளின் விஞ்ஞானப் பெயர் பாந்தெரா டைகிரிஸ்(Panthera Tigris)
# தரைவாழ் மாமிசப்
பட்சிகளில் துருவக் கரடிகள், பிறவுண் கரடிகளை அடுத்து மிகப் பெரிய விலங்கினம் புலிகள்
ஆகும்.
# புலிகள் நன்றாக
நீந்தக்கூடியவையாகும். இவைகளால் 6 கிலோமீற்றர்
தூரம்வரை நீந்த முடியுமாம்.
# புலிகளின் கர்ஜனை
பலமானதாகும், இவற்றின் கர்ஜனை ஒலி 2 கிலோமீற்றருக்கு அப்பாலும் கேட்கக்கூடியதாகும்.
இவை பொதுவாக தனது சொந்த வாழிடப் பிரதேசத்தின் பாதுகாப்புக்காகவும், தனது துணையினை இனப்பெருக்கத்திற்காக
அழைக்கவுமே கர்ஜிக்கின்றனவாம்.
# ஒவ்வொரு புலியினதும்
உடம்பிலுள்ள வரிகள், ஏனைய புலிகளின் வரிகளை ஒத்ததன்றாகும். அவை ஒவ்வொன்றும் வித்தியாசமானவையாகும்.
# புலிகளின்
பற்கள் மனிதர்களின் பற்களினை விடவும் 10 மடங்கு பெரியவையாகும்.
# புலிகள் ஏனைய
விலங்குகளைப் போன்றல்லாமல் தனியாகவே வேட்டையாடச் செல்கின்றன. புலிகள் பொதுவாக இரவு
நேரத்திலேயே வேட்டையாடுகின்றன. புலிகளின் வேட்டை முயற்சிகளில் 90% ஆனவை தோல்வியிலேயே முடிகின்றதாம்.
சில வேளைகளில் புலிகள் வேட்டைக்காக ஓரிரவில் 10
– 20 கிலோமீற்றர்
தூரம்வரையும் பயணம் செய்கின்றனவாம். புலிகள்
தனது இரையினை பின்புறமாகவோ அல்லது பக்கவாட்டாகவோ மாத்திரமே வேட்டையாடுகின்றனவாம், அவை
ஒருபோதும் முன்புறமாகச் சென்று வேட்டையாடுவதில்லையாம். புலிகள் ஓரிரவில் 20 – 35 கிலோகிராம் இறைச்சியினை உட்கொண்டாலும், அவை பொதுவாக ஓர் நாளில்
15 – 18 கிலோகிராம் இறைச்சியினையே உட்கொள்கின்றனவாம். சிலவேளைகளில் புலிகள் தனது இரையினை
முழுமையாக தின்றுமுடிப்பதற்கு 2 – 3 நாட்களினை எடுத்துக்கொள்கின்றதாம்.
# புலிகள் மணிக்கு 40
மைல்கள்
வேகத்தில் ஓடக்கூடியவையாகும், அத்துடன் ஒரே பாய்ச்சலில் 16 அடிக்கு அப்பால் காற்றில் பயணிக்கக்கூடியவையாகும்.
# புலி இனங்களில்
சைபீரியன் புலிகளே மிகப்பெரிய புலியினமாகும், அத்துடன் சுமாத்ரா புலிகளே உலகில் மிகச்சிறிய
புலியினமாகும். உலகில் அதிக எண்ணிக்கையில் வங்காளப் புலிகளும் (2500), குறைந்த எண்ணிக்கை தென் சீனப்
புலிகளும் காணப்படுகின்றனவாம் (60 - 80).
# இந்தியா, மியன்மார்,
பங்களாதேஷ், தென் கொரியா, வியட்னாம், மலேசியா ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு புலி ஆகும்.
# உலகில்
அதிகம் பேருக்கு பிடித்தமான விலங்கினம் புலியாகும் என்கின்ற ஓர் கருத்துக்கணிப்பு .
ஓகே…
என்னைப்போல யார்யாருக்கெல்லாம் புலி பிடிக்கும்.
***