சுவாரஷ்சியமான சில தகவல்கள்
உங்களுக்காக.......
Ø உலகில், கண்டங்களுக்கிடையிலான மிகக்குறைந்த நேர
அளவினைக்கொண்ட வணிக விமானப் பறப்பு இடம்பெறுவது ஐரோப்பாவின் ஜிப்ரொல்ருர் மற்றும்
ஆபிரிக்காவின் ரான்ஜிர் இடையிலாகும். 34 மைல்கள் தூரம், 20 நிமிட நேர விமானப்
பறப்பு.
Ø உலகில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள கிரிக்கெட்
விளையாட்டு மைதானமானது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் சைல் நகரில்
அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 2444 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது.
Ø புவியின்
உபகோளாகிய சந்திரன் வருடாந்தம் 1.5 அங்குலங்கள் புவியிருந்து
விலகிக்செல்கின்றதாம்.
Ø ஒலியானது வளியில்
செக்கனுக்கு 331 மீற்றர்கள்(740 mph) பயணம் செய்யும்.
ஆனால், 20ºC அறை வெப்ப நிலையில் ஒலியானது செக்கனுக்கு 343 மீற்றர்கள்(767 mph) பயணம் செய்யும்.
Ø ஹங்கேரி நாட்டின்
தலைநகரமாக புடாபெஸ்ட் விளங்குகின்றது. உண்மையில் புடா மற்றும் பெஸ்ட் ஆகிய இரண்டு
நகரங்களின் கூட்டிணைவே இவையாகும்.ஆரம்பத்தில் ஒன்றாகக் காணப்பட்ட நகரினை டன்யூப் நதியானது இரண்டாக
பிரித்துவிட்டது.
குறிப்பு - வொல்கா நதியினை அடுத்து ஐரோப்பாவின் இரண்டாவது மிகப்பெரிய நதி டன்யூப் ஆகும். வியன்னா,
பெல்கிரேட், புடாபெஸ்ட் ஆகிய நகரங்கள் டன்யூப் நதிக்கரையிலே அமைந்துள்ளன.
அமெரிக்காவின் பிரதான மாநிலங்களில் ஒன்றாக புளோரிடா
விளங்குகின்றது. ஸ்பெய்னிடமிருந்து, 1819ம் ஆண்டு புளோரிடா மாநிலத்தை 5மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்கா கொள்வனவு செய்தது.
***
4 comments:
நன்றி சகோ
சுவாரஸ்யமாகவும், வியப்பாகவும் இருந்தது... நன்றி நண்பா...
பகிர்வுக்கு நன்றி நண்பா!
நன்றிகள் சகோ....
Post a Comment