77000 வருடங்களுக்கு முன்னால் குகையில் வாழ்ந்த மனிதர்கள்
பயன்படுத்திய படுக்கையை ஆராய்ச்சியாளர்கள் தென்னாபிரிக்காவிலுள்ள ஜொஹன்னஸ்பேர்க்
என்ற இடத்தில் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த படுக்கை மரக்கிளைகளினாலும்,
இலைகளினாலும் செய்யப்பட்டுள்ளது. இதிலுள்ள சிறப்பியல்பு என்னவென்றால் குகை வாழ்
மனிதர்கள் படுக்கையைச் செய்யப் பயன்படுத்திய கிளைகளும், இலைகளும் எல்லாவிதமான
பூச்சிகளையும் நுளம்புகளையும் துரத்தக்கூடிய மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது. இன்றைக்கு
மனிதன் நுளம்புத்தொல்லையிலிருந்து விடுபட்டு உறங்க எவ்வளவு பாடுபடுகின்றான். ஆனால்
குகையில் வாழ்ந்த ஆதிவாசிகள் மருத்துவ குணம் கொண்ட கிளைகளையும், இலைகளையும் தனது படுக்கையாக்கி
நிம்மதியாக உறங்கினான் என்றால் ஆச்சரியமாக
உள்ளதல்லவா?...
♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪
செப்டெம்பர் 2ம்
திகதி ~ சர்வதேச தேங்காய் தினம்.
இந்தோனேசியாவின்
ஜகார்த்தாவினை தலைமையகமாகக் கொண்ட ஆசிய
பசுபிக் தெங்கு அமையத்தின் அமைச்சர்களிடையே 1998ம் ஆண்டு வியட்னாம் நாட்டில்
நடைபெற்ற மாநாட்டில் செப்டெம்பர் மாதம் 2ம்
திகதி சர்வதேச தேங்காய் தினமாக பிரகடனம்
செய்யப்பட்டது.
வறுமை குறைப்பில்
உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே
மேலதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்காகக் கொண்டு இத்தினமானது பிரகடனம்
செய்யப்பட்டது.
தேங்காயானது
மக்களுக்கு போசணை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பினை வழங்குவதுடன், வாழ்வாதாரப்
பாதுகாப்பு, ஏற்றுமதி வருவாய் ஆகியவற்றிலும் பங்களிப்பு வழங்குகின்றது.
“கற்பக தரு”
என்றழைக்கப்படுகின்ற தென்னை மரங்களால் நாம் பல்வேறு வகையான நன்மைகளினைப்
பெற்றுக்கொள்கின்றோம்.
"தெங்கு
கைத்தொழிலில் பரந்துபட்டளவிலான வளர்ச்சியுடன் நிலைத்துநிற்கும் அபிவிருத்தியினை
ஏற்படுத்துதல்" என்பதே 2012ம்
வருடத்திற்கான தொனிப்பொருளாகும்.
சில
சுவாரஷ்சியமான தகவல்கள்....
Ø தேங்காயின்
இரசாயனவியல் பெயர் கொகோஸ் நுசிஃபெரா.
Ø உலக மக்களில்
மூன்றில் ஒரு பங்கினர் தமது உணவுத் தேவைக்கும், பொருளாதாரத்திற்கும் தேங்காயிலேயே
தங்கியுள்ளனர்.
Ø சர்வதேச தெங்கு
ஆராய்ச்சி மையம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் அமைந்துள்ளது.
Ø உலகளவில் 11.8மில்லியன்
ஹெக்டெயர் பரப்பளவில் 92 நாடுகள் தெங்கு உற்பத்தியில் ஈடுபடுகின்றன. உணவு விவசாய
அமையத்தின் 2009ம் ஆண்டு அறிக்கையில் பிரகாரம் உலகளவிலான தேங்காய் உற்பத்தி 61.7
மில்லியன்.
Ø தெங்கு
உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் முதல் 10 நாடுகள் ~ இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இந்தியா, இலங்கை,
பிரேசில், தாய்லாந்து, வியட்னாம், மெக்ஸிக்கோ, பபுவா நியூ கினியா, மலேசியா.
Ø தேங்காய் எண்ணெய்
உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் முதல் 10 நாடுகள் ~ பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இந்தியா,
வியட்னாம், மெக்ஸிக்கோ, பபுவா நியூ கினியா, தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐவரி
கோஸ்ட்.
♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪♫♪
6 comments:
முதலாவது : வியப்பாக உள்ளது...
தேங்காய் : சுவாரஸ்யமான தகவல்கள்...
நீரழிவு நோயை அதிகப்படுத்துவதிலும் முதலிடம் தேங்காய்...
நல்ல பகிர்வு,, வாழ்த்துக்கள்..
தொடர்ந்து இன்னும் பல அறிய தகவல்களை தாருங்கள்,,,
ஆச்சிரியமான தகவல் நண்பரே! தொடர்ந்து கலக்குங்கள்! :)
வணக்கம்,
உங்கள் வலைத்தளத்தை பார்த்தேன். பல சுவாரஷ்ய தகவல்களை தொகுத்துள்ளீர்கள். உங்கள் அறிவியல் பதிவுகளை கீழே உங்கள் தொடுப்புடன் எமது தளத்தில் இணைப்பதற்கு ஆர்வமாக உள்ளோம்.
அல்லது; பனர் ஸ்யாரிங்கிற்கும் விரும்புகிறோம்.
விருப்பம் இருப்பின் தொடர்புகொள்ளுங்கள்.
நன்றி :)
edu.tamilclone.com
நல்ல தகவல்
nagu
www.tngovernmentjobs.in
நன்றிகள் நண்பர்களே....
Post a Comment