நண்பர்களே, நீண்ட நாள் இடைவேளையின் பின்னர் பதிவுலகில் உங்களினைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். சில பல காரணங்களினால் பதிவுலகில் நீண்ட நாட்களாக பதிவிடமுடியவில்லை. வாய்ப்புக்கள் கிடைக்கின்றபோது பதிவுகளினூடாக உங்களினைச் சந்திக்க எண்ணியுள்ளேன்.
அந்தவகையில், " உயிரினங்களின் இதயம் " தொடர்பான சுவையான தகவல்களினை இந்தப் பதிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
நீலத்திமிங்கிலங்களின் இதயத்தின் நிறை அரைத் தொன்னுக்கும் அதிகமாகும்.
ஒட்டகச்சிவிங்கிகள் அதனது பலமிக்க இதயத்திலேயே தங்கியுள்ளன, அவற்றின் இதயத்தின் நிறை 12கிலோவிலும் அதிகமாகும். ஒட்டகச்சிவிங்கிகள் அதனது நீண்ட கழுத்திலிருந்து அதனது தலையினை நோக்கி சுவாசிப்பதற்கு போராடுகின்றது.
உணவுவேளைகளின்போது மலைப்பாம்புகளின் இதயமானது பெரியதாக வளர்ச்சியடைகின்றன.
நீலத்திமிங்கிலங்களின் இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 06 முறையாகும்.
ஒரு சராசரி மனிதனின் இதயமானது வருடாந்தம் 35மில்லியன் தடவைகள் துடிக்கின்றன.
ஒக்டோபஸ் 03 இதயங்களைக் கொண்ட உயிரினமாகும்.
பாலூட்டிகளில், அதனது உருவத்துடன் ஒப்பிடுகின்றபோது மிகப்பெரிய இதயத்தினைக் கொண்ட உயிரினம் நாய் ஆகும்.
விலங்குகளில் மிகச்சிறிய இதயத்தினைக் கொண்ட உயிரினம் சிங்கம் ஆகும்.
தவளைகளினதும், பல்லிகளினதும் இதயமானது 03 சோணை அறைகளினைக் கொண்டிருக்கின்ற அதேவேளை பறவைகளினதும், பாலூட்டிகளினதும் இதயமானது 04 சோணை அறைகளினைக் கொண்டிருக்கின்றன.
***
1 comment:
நன்றி பகிர்வுக்கு.
Post a Comment