பறவைகளினைப் பற்றிய சுவாரஷ்சியமான தகவல்களினைக் கொண்ட பதிவு.........
பறவைகளில் மிகப்பெரிய முட்டையிடும் பறவை தீக்கோழி ஆகும்.
பறவைகளில் தன் உடலமைப்புடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய முட்டையிடும் பறவை கிவி பறவை. கிவி பறவையின் முட்டையானது அதனது உடம்புடன் ஒப்பிடும்போது 1/3 பங்காகும்.
பறவைகளின் முட்டைகளில், தீக்கோழியின் முட்டையானது மிகக் கெட்டியான ஓட்டினைக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக இதனை அவிப்பதற்கு 2 மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றதாம்.
பறவைகளில் மிகச்சிறிய முட்டையிடும் பறவை ஹம்மிங்பேர்ட் பறவை. இதன் முட்டையின் நீளம் 0.39 அங்குலம் & நிறை 0.0132 oz
Royal Albatross' பறவைகள் அடைகாத்து அதன் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியாவதற்கு 79 நாட்கள் தேவைப்படுகின்றது.
Albatross பறவைகள் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவைதான் முட்டையிடுகின்றதாம்.
பூமியிலிருந்து முற்றாக அழிவடைந்துபோன மடகாஸ்கரின் யானைப் பறவையானது 27பவுண்டுகளுக்கும் அதிகமான நிறையில் முட்டையிட்டதாம்.
முட்டையிடும் ஒரு சராசரி பெட்டைக்கோழியானது வருடாந்தம் 257 முட்டைகளினை இடுகின்றதாம்.
சாதாரணமாக ஒரு முட்டையின் நிறையில் 12சதவீத வகிபாகத்தினை முட்டையின் மேல் ஓடானது பெறுகின்றது.
***
2 comments:
நல்ல பகிர்வு! நன்றி!
உங்கள் கருத்துரைகளுக்கு மிக்க நன்றிகள்.........
Post a Comment