- ஒரு டெஸ்ட் போட்டியில் அதிகமான ஓட்டமற்ற ஓவர்களினை தொடர்ச்சியாக வீசிய வீரர் என்ற பெருமைக்குரியவர் இந்திய அணியின் இடதுமுறை மெதுவேக பந்துவீச்சாளர் பாபு நட்கர்னி. 1963-64 பருவகாலத்தில் மெட்ராஸ்சில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் பாபு நட்கர்னி 21 ஓட்டமற்ற ஓவர்களினை தொடர்ச்சியாக வீசி சாதனை புரிந்தார்.
- · டெஸ்ட் போட்டியில் இரட்டைச்சதம்(201* Vs பங்களாதேஸ்-2006) பெற்றாலும் உடனடியாக அடுத்து நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளிலிருந்து கழற்றிவிடப்பட்ட ஒரே அவுஸ்ரேலிய வீரர் ஜேசன் ஜிலேஸ்பி.
- உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அறிமுகப்போட்டியில் மிகச்சிறந்த பந்துவீச்சுப் பெறுதியினைக் கொண்டிருப்பவர் என்ற பெருமைக்குரியவர் மேற்கிந்திய தீவுகளின் வின்சன் டேவிஸ் (7/15 Vs அவுஸ்ரேலியா-1983)
- · இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் சௌதேர்டன் என்கின்ற வீரர் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய போது அவரின் வயது 49 வருடங்களும் 119 நாட்களுமாகும். இவரே டெஸ்ட் போட்டியில் அறிமுகம் பெற்ற அதிக வயது வீரர் ஆவார்.1877 மார்ச் 15-19 வரை மெல்பேர்னில் நடைபெற்ற முதலாவது உத்தியோகபூர்வ டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- · அவுஸ்ரேலியாவின் ஆறு பிரதான கிரிக்கெட் மைதானங்களில் சர்வதேச ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் சதம் பெற்ற ஒரே வீரர் அவுஸ்ரேலிய அணியின் மார்க் வோ.
- · ஒரு விளையாட்டு வீரராகவும் அதே நேரம் அணியின் பயிற்றுவிப்பாளராகவுமிருந்து ஒருநாள் கிரிக்கெட்டில் உலகக் கிண்ணத்தை வென்ற அணியிலிருந்தவர் என்ற பெருமைக்குரியவர் அவுஸ்ரேலியாவின் ஜெப் மார்ஸ். 1987 உலகக் கிண்ண சம்பியன் அவுஸ்ரேலியா அணியில் ஒரு வீரராக விளையாடிய ஜெப் மார்ஸ் 1999 உலகக் கிண்ண சம்பியன் அவுஸ்ரேலியா அணியில் பயிற்றுவிப்பாளராகவுமிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Friday, November 20, 2009
கிரிக்கெட் சுவையான தகவல்கள் #07
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நண்பர்கள் கவனத்திற்கு
தமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....
ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
காணொளி தேடல் | வலைப்பூக்கள்
Post a Comment