பிறவுண் நிற பண்டா
இரண்டு மாதங்கள் வயதுடைய அரியவகை பிறவுண் (Brown) நிற பண்டா இனமானது வடமேற்கு சீனாவில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வழமையில் பண்டா இனமானது கறுப்பு நிறமானவை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த பண்டா குட்டியானது இதுவரை கண் திறக்காமலும், நடக்க முடியாமலும் காணப்படுகின்றதாம்.
இந்த பிறவுண் நிற பண்டாவின் தாயானது வழமையான நிறத்திலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சீனாவில் கண்டறியப்பட்ட 5வது பிறவுண் நிற பண்டா ஆகும் என சிங்குவா நெட்டானது கடந்த 11ம் திகதி அறிவித்தது.
ஏன் சில பண்டா இனங்கள் பிறவுண் நிறத்தில் காணப்படுகின்றnன ? என்பதற்கான காரணத்தினை விஞ்ஞானிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சீனாவின் சரித்திரத்தில் முதலாவது பிறவுண் நிற பண்டாவானது 1985ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது “டாண்டன்” என அழைக்கப்பட்டது. டாண்டன் கண்டுபிடிக்கப்பட்ட போது நோய்வாய்ப்பட்டதாகவே கண்டுபிடிக்கப்பட்டது. இது பண்டா ஆய்வு மையத்தால் பொறுப்பேற்கப்பட்டது. பின்னர் இது மூன்று குட்டிகளை பிரசவித்தது,ஆனாலும் அவை பின்னர் இளமையிலேயே இறந்துவிட்டனவாம்.
***
No comments:
Post a Comment