
ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாகி விட்டார். அதனால் அவர் கடவுளிடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைக்கின்றார். தான் நோயின் பிடியிலிருந்து விடுபட்டு பழையபடி சுகதேகியாக வாழ்வு பெற்றால், தனது வீட்டினை விற்று அதில் வரும் முழுப்பணத்தினையும் காணிக்கையாக செலுத்துவேன் என்று கடவுளிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைக்கின்றார். சில நாட்களுக்குப் பின்னர் அவர் பூரண சுகமடைந்துவிட்டார். அப்போது அவர் கடவுள் முன்வைத்த கோரிக்கையினை ஞாபகப்படுத்தி பார்க்கின்றார். அவ்ருக்கு தனது கோரிக்கையினை நிறைவேற்ற மனமில்லை ஆனாலும் அவருக்கு ஒரு எண்ணம் தோன்றுகின்றது. அவர் பத்திரிகையில் பின்வருமாறு விளம்பரப்படுத்துகின்றார். “வீடு விற்பனைக்கு உண்டு, அதன் விலை 1 டொலர், ஆனால் ஒரு நிபந்தனை வீடு கொள்வனவு செய்வதாயின் எனது நாயினை 1 மில்லியன் டொலருக்கு கொள்வனவு செய்ய வேண்டும்.” அதன் பிரகாரம் ஒருவர் அந்த வீட்டினைக் கொள்வனவு செய்கின்றார். அவர் கடவுளிடம் வேண்டியபடி 1டொலரினை கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தி, 1 மில்லியன் டொலரினை தன்வசம் வைத்துக்கொண்டு தன்னைக் குணமாக்கிய கடவுளினை மனதில் நினைத்துக்கொள்கின்றார்.
இந்த சிறுகதைபோல தான் இன்றைய உலகம் பயணிக்கின்றது எனலாமா நண்பர்களே ???.................
(படித்ததில் பிடித்தது)
***
4 comments:
சிந்திக்கத் தெரிந்த மனிதன் இப்படியெல்லாம் ஏமாற்றுவான்!
அது சரி!
நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்? நம்மவர்களைத்தானே!
ஒரு ரூவாய் க்கு அரிசி கொடுத்து , நாற்பதாயிரம் கோடி அடிச்சதயா சொல்றீங்க ?
குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்
நண்பர்களே நன்றிகள்
Post a Comment