Tuesday, June 29, 2010

உடற் பருமனிலிருந்து போராட உதவும் "செத்தல் மிளகாய்"




ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் பிரகாரம், செத்தல் மிளகாயிலுள்ள "கெப்சசெய்ன்" என்கின்ற இரசாயமானது உடம்பில் ஏராளமான நன்மைபயக்கும் புரத மாற்றங்களினை ஏற்படுத்தி உடற்பருமனைக் குறைக்க உதவுவதாக கண்டறிந்துள்ளனர்.


ஜொங் வொன் யுன் மற்றும் அவரது குழுவினர் உடற் பருமனாவது உலகில் மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தலாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பிரச்சினைகளுடன் தொடர்புபடுவதாக வகைப்படுத்தியுள்ளனர். ஆய்வுகூட முடிவுகளின் பிரகாரம், "கெப்சசெய்ன்" இரசாயனமானது, கலோரியினை உள்ளெடுப்பதனை குறைக்கின்றது, கொழுப்பு திசுக்களினை சுருக்குகின்றது, இரத்தத்தில் கொழுப்பின் மட்டத்தினை குறைந்தளவில் பேண உதவுகின்றது. இதன்காரணமாக உடற்பருமனைக் குறைக்க உதவுகின்றது.


இந்த ஆய்வுக்காக விஞ்ஞானிகள் ஆய்வுகூட எலிகள் மீது "கெப்சசெய்ன்" இரசாயனத்தினை செலுத்தியும், "கெப்சசெய்ன்" இரசாயனத்தினை செலுத்தாமலும் ஆய்வினை மேற்கொண்டனர். "கெப்சசெய்ன்" இரசாயனம் செலுத்தப்பட்ட எலிகள், அதன் உடல் நிறையில் 8 சதவீதத்தினை இழந்துள்ளதுடன், கொழுப்பில் காணப்படுகின்ற ஆகக் குறைந்தது முக்கியமான 20 புரதங்களின் அளவுகளில் மாற்றங்களை காட்டியது. இந்த புரதங்கள் கொழுப்பினை கரைப்பதற்காக பணிபுரிகின்றது.


இந்த மாற்றங்கள் மூலம் உடற்பருமனிலிருந்து போராட "கெப்சசெய்ன்" உதவுவதன் காரணத்தினால் புதிய செயற்பாடுகளுக்கு இது உந்துசக்தியாக விளங்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

நீங்கள் உடற்பருமனா என்ன முடிவெடுத்துள்ளீர்கள்???...........


***

Sunday, June 27, 2010

பறவைகள்... விந்தைகள்!

பறவைகளினைப் பற்றிய சுவாரஷ்சியமான தகவல்களினைக் கொண்ட பதிவு.........

 பறவைகளில் மிகப்பெரிய முட்டையிடும் பறவை தீக்கோழி ஆகும்.









 பறவைகளில் தன் உடலமைப்புடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய முட்டையிடும் பறவை கிவி பறவை. கிவி பறவையின் முட்டையானது அதனது உடம்புடன் ஒப்பிடும்போது 1/3 பங்காகும்.

 பறவைகளின் முட்டைகளில், தீக்கோழியின் முட்டையானது மிகக் கெட்டியான ஓட்டினைக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக இதனை அவிப்பதற்கு 2 மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றதாம்.

 பறவைகளில் மிகச்சிறிய முட்டையிடும் பறவை ஹம்மிங்பேர்ட் பறவை. இதன் முட்டையின் நீளம் 0.39 அங்குலம் & நிறை 0.0132 oz

 Royal Albatross' பறவைகள் அடைகாத்து அதன் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியாவதற்கு 79 நாட்கள் தேவைப்படுகின்றது.


 Albatross பறவைகள் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவைதான் முட்டையிடுகின்றதாம்.




 பூமியிலிருந்து முற்றாக அழிவடைந்துபோன மடகாஸ்கரின் யானைப் பறவையானது 27பவுண்டுகளுக்கும் அதிகமான நிறையில் முட்டையிட்டதாம்.

 முட்டையிடும் ஒரு சராசரி பெட்டைக்கோழியானது வருடாந்தம் 257 முட்டைகளினை இடுகின்றதாம்.

 சாதாரணமாக ஒரு முட்டையின் நிறையில் 12சதவீத வகிபாகத்தினை முட்டையின் மேல் ஓடானது பெறுகின்றது.


***

Thursday, June 24, 2010

உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் பெறப்பட்ட பிரமாண்டமான வெற்றிகள்




தென்னாபிரிக்க மண்ணில் தற்சமயம் 19வது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் கடந்த 21ம் திகதி நடைபெற்ற G குழுவிற்கான போட்டியில் போர்த்துக்கல் நாடானது வட கொரியா அணியினை 7-0 என அபாரமாக வீழ்த்தி உலகக் கிண்ணத்தில் பெறப்பட்ட மிகப் பிரமாண்டமான வெற்றிகளில் ஒன்றாக பதிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அந்தவகையில் உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் பெற்றப்பட்ட பிரமாண்டமான முதல் 10வெற்றிகள்..........

#10. துருக்கி(7கோல்கள்) V தென்கொரியா(0)

1954ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் துருக்கி அணியானது தென்கொரியா அணியினை 7–0 என வீழ்த்தியது.

1954ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியிலேயே தென் கொரியா முதன்முதலில் பங்குபற்றியது.

#09. உருகுவே(7கோல்கள்) V ஸ்கொட்லாந்து(0)

1954ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் உருகுவே அணியானது ஸ்கொட்லாந்து அணியினை 7–0 என வீழ்த்தியது.

#08. போலந்து(7கோல்கள்) V ஹெய்ட்டி(0)

1974ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் போலந்து அணியானது ஹெய்ட்டி அணியினை 7–0 என வீழ்த்தியது.

1974ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் தனது ஆரம்பப் போட்டியில் இத்தாலி அணியுடான போட்டியில் முன்னிலை வகித்த ஹெய்ட்டி அணியானது இறுதியில் 3-1 என தோல்வியடைந்தமை நினைவுகூரத்தக்க விடயமாகும்.

#07. போர்த்துக்கல்(7கோல்கள்) V வட கொரியா(0)

தற்சமயம் தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவருகின்ற 19வது உலகக் கிண்ணத் தொடரில் (2010) போர்த்துக்கல் அணியானது வட கொரியா அணியினை 7–0 என வீழ்த்தியது.

தனது ஆரம்ப குழுப் போட்டியில் பிரேசில் அணியிடம் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் போராடி தோற்ற வடகொரியா, போர்த்துக்கல் அணிக்கு சவாலாக விளங்குமென்று அனைவராலும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இடைவேளைக்கு முன்னர் 1 கோலினை மாத்திரமே பெற்ற போர்த்துக்கல் அணி இடைவேளைக்கு பின்னர் 6 கோல்களினை அபாரமாகப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிரமாண்டமான வெற்றி பெறப்பட்ட இந்தப் போட்டியில் மாத்திரமே எந்தவொரு வீரரும் ஹெட் - ரிக் கோல்களினைப் பெறவில்லை குறிப்பிடத்தக்கதாகும்.


#06. சுவீடன்(8கோல்கள்) V கியூபா(0)

1938ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் சுவீடன் அணியானது கியூபா அணியினை 8–0 என வீழ்த்தியது.


#05. உருகுவே(8கோல்கள்) V பொலிவியா(0)

1950ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் உருகுவே அணியானது பொலிவியா அணியினை 8–0 என வீழ்த்தியது.

#04. ஜேர்மனி(8கோல்கள்) V சவுதி அரேபியா(0)

2002ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் ஜேர்மனி அணியானது சவுதி அரேபியா அணியினை 8–0 என வீழ்த்தியது

#03. ஹங்கேரி(9கோல்கள்) V தென்கொரியா(0)

1954ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் ஹங்கேரி அணியானது தென்கொரியா அணியினை 9–0 என வீழ்த்தியது.

தென் கொரியா 7-0 என இதற்கு முந்தைய தனது போட்டியில், துருக்கி அணியிடம் தோல்வியினை தழுவியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


#02. யுகோஸ்லாவியா(9கோல்கள்) V சயர்(0)

1974ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் யுகோஸ்லாவியா அணியானது சயர் [தற்சமயம் கொங்கோ ஜனநாயக குடியரசு] அணியினை 9–0 என வீழ்த்தியது.

இந்த உலகக் கிண்ணமே சயர் அணியின் முதலாவதும் இறுதியுமான உலகக் கிண்ணமாகும்.



#01. ஹங்கேரி(10கோல்கள்) V எல் சல்வடோர்(1)

1982ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் ஹங்கேரி அணியானது எல் சல்வடோர் அணியினை 10–1 என வீழ்த்தியமை உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் மிகச் சிறந்த அதிக கோல்களினால் பெறப்பட்ட வெற்றியாக கருதப்படுகின்றது.

இங்கே சுவாரஷ்சிய விடயமென்னவென்றால் முதல் சுற்றில் ஹங்கேரி அணியானது, பெல்ஜியம் அணியுடனான இறுதி குழுப்போட்டியினை வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டதனால் ஹங்கேரி அணியானது முதல் சுற்றுடன் வெளியேறியது.


***
Blog Widget by LinkWithin