Friday, November 15, 2013

399வது பதிவு ⇨ பொதுநலவாய மாநாடு (CHOGM) ஓர் கண்ணோட்டம்…!



23வது CHOGM இலங்கையின் கொழும்பு மாநகரில் பல்வேறு நாடுகளின் பங்குபற்றுதலுடன் வம்பர் 15 -17ம் திகதி வரை நடைபெறவுள்ளது. அந்தவகையில்,  பொதுநலவாய அமைப்பு மற்றும் CHOGM தொடர்பிலான சுவையான தகவல்கள் உங்களுக்காக…!

Y பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த நாடுகள், பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றன. உலக சனத்தொகையில் 30% ஆனோர்  பொதுநலவாய அமைப்பு நாடுகளில் வசிக்கின்றனர்.  

Y பொதுநலவாய அமைப்பு 1931ம் ஆண்டு "பிரிட்டிஷ் பொதுநலவாய நாடுகள்" என்கின்ற நாமத்தில் உருவாக்கப்பட்டு 1946ம் ஆண்டு "பொதுநலவாய நாடுகள்" என பெயர் மாற்றம் பெற்றது.

Y பொதுநலவாய அமைப்பில் 54 நாடுகள் அங்கத்துவம் பெறுகின்றன. அரசியல் குழப்பநிலையின் காரணமாக பிஜி நாடு 2009ம் ஆண்டு பொதுநலவாய அமைப்பிலிருந்து இடை நிறுத்தப்பட்டது.




Y மார்ச் மாதத்து 2வது திங்கட்கிழமையன்று பொதுநலவாய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

Y பொதுநலவாய அமைப்பின் பிரதான தலைமைத்துவத்தினை வகிப்பது பிரித்தானிய மகாராணி 2ம் எலிசபெத் ஆவார்.



Y பிரித்தானிய மகாராணி 2ம் எலிசபெத் அவர்கள் முதன்முதலில் கலந்துகொண்ட CHOGM 1973ம் ஆண்டு கனடா, ஒட்டாவாவில் நடைபெற்றது. இதற்கு பின்னர் நடைபெற்ற அனைத்து CHOGMகளிலும் மகாராணி கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் தற்சமயம் இலங்கையில் நடைபெறுகின்ற 23வது CHOGM இல் மகாராணியின் சார்பாக, பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் அவர்களே பங்கேற்கின்றார்.



Yபொதுவாக 02 ஆண்டுகளுக்கொரு தடவை பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களது கூட்டம் (CHOGM) நடைபெறுகின்றது. 

1வது CHOGM 1971ம் ஆண்டு ஜனவரி மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது.  



தற்சமயம் நவம்பர் 15-17ம் திகதி வரை இலங்கையில் நடைபெறுவது 23வது CHOGM ஆகும்.

Y 24 வது CHOGM 2015ம் ஆண்டு  மொறீசியஸ் நாட்டில் நடைபெறவுள்ளது.

Y பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் மிகப்பெரிய நாடு கனடா, இதன்  நிலப்பரப்பு 10 மில்லியன் சதுரகிலோமீற்றர்கள் ஆகும்.

Y பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் சனத்தொகை கூடிய நாடு இந்தியா, சனத்தொகை 1.1 பில்லியன் ஆகும்.

Y பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் மிகச்சிறிய நாடு நவ்ரு, சனத்தொகை 13,000 ஆகும்.

Y பொதுநலவாய அமைப்பிலிருந்து எந்த நேரத்திலும் தனது உறுப்புரிமையை விலக்கிக் கொள்ளும் உரிமை அங்கத்துவ நாடுகளுக்கு உண்டு. 1949ம் ஆண்டு அயர்லாந்து குடியரசும், 2003ம் ஆண்டு சிம்பாப்வேயும் தமது  உறுப்புரிமையை விலக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Y பொதுநலவாய அமைப்பில் நவ்ரு தேசம் விசேட உறுப்புரிமை வகிக்கின்றது. இது CHOGM இல் கலந்துகொள்வதில்லை.

***

Saturday, November 9, 2013

உலக நகரங்கள் தொடர்பிலான சுவையான தகவல்கள்

வருடாந்தம் நவம்பர் மாதம் 8ம் திகதி உலக நகர திட்டமிடல் தினமாகக் கொண்டாடப்படுகின்றதுஎதிர்காலத்தினை மையமாகக் கொண்டு, நகர வடிவமைப்பில் திட்டமிடலின் அவசியத்தினை உணர்த்தும்முகமாக இத்தினமானது கொண்டாடப்படுகின்றது.

அந்தவகையில், உலக நகரங்கள் தொடர்பிலான சுவையான தகவல்கள் சில உங்களுக்காக…!

Y சனத்தொகையின் பிரகாரம், உலகில் மிகப் பெரிய நகரம், ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரம் ஆகும். 2012ம் ஆண்டு புள்ளிவிபரங்களின் பிரகாரம் 37.22 மில்லியன் மக்கள் டோக்கியோ நகரில் வசிக்கின்றனர்.


Y நிலப்பரப்பின் பிரகாரம், உலகில் மிகப் பெரிய நகரம், ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்  நகரம் ஆகும்.  8,683 சதுரகிலோமீற்றர் நியூயோர்க் நகரின் பரப்பளவாகும்.


Y உலகில் மக்கள் செறிவாக வசிக்கும் நகரங்களில் முதன்மை ஸ்தானத்தைப் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரம் வகிக்கின்றது. இங்கே 1 சதுர மைலுக்கு 1.11 இலட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

Y உலகில் மிக உயரமான  இடத்தில் அமைந்திருக்கும் நகரம், பெரு நாட்டின் லா ரின்கொனடா நகரம் ஆகும்.  இது கடல் மட்டத்திலிருந்து 5100 மீற்றர்கள்(16,700’) உயரத்தில் அமைந்துள்ளது.

Y உலகில் மிக தாழ்வான இடத்தில் அமைந்திருக்கும் நகரம் இஸ்ரேல் நாட்டின் ஜெரிஹோ நகரம் ஆகும்.  இது கடல் மட்டத்திலிருந்து 258 மீற்றர்கள் தாழ்வாக அமைந்துள்ளது.

Y 1 மில்லியன் சனத்தொகையினை கடந்த உலகின் முதலாவது நகரம், இத்தாலியின் ரோம் நகரம் ஆகும்.



Y உலகில் மிகப்பழமையான நகரமாக சிரியாவின் டமஸ்கஸ் நகரம் கருதப்படுகின்றது.

***

Saturday, October 5, 2013

அக்டோபர் 4 ⇨ உலக விலங்குகள் தினம்

இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர் பிரான்சிஸ் அசிசி என்பவரின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில் அக்டோபர் 4ம் திகதி உலக விலங்குகள் தினமாக கொண்டாடப்படுகின்றது. 1931 ஆம் ஆண்டு இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் வனவிலங்குகள் தினம் முதன்முதலாக கொண்டாடப்பட்டது, பின்னர் இது உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

விலங்குகளை பாதுகாப்பது மற்றும் அவற்றுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வினை உலக மக்களிடையே ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

அந்தவகையில், விலங்குகள் தொடர்பான சுவாரஷ்சியமான சில தகவல்கள் உங்களுக்காக…!

Y ஆபிரிக்க யானைகளின் காதுகள், ஆசிய யானைகளின் காதுகளைவிடவும் 
பெரிதானதாகும்.


Y இரவு நேரத்தில், மனிதர்களினை விடவும் 6 மடங்கு சிறப்பான பார்வைத் திறன் புலிகளுக்கு உண்டாம்.

Y சிங்கத்தின் கர்ஜனை ஓசை 5 மைல்களுக்கு அப்பாலும் கேட்கக்கூடியதாம்.


Y ஒட்டகச்சிவிங்கிகள் நின்றுகொண்டே குட்டிகளை பிரசவிக்கின்றன. குட்டிகள் பிறந்த அரைமணி நேரத்திலேயே நிற்கக் கற்றுக்கொள்வதுடன், பிறந்த பத்து மணி நேரத்திலேயே  தனது தாயுடன் நடக்கக் கற்றுக்கொள்கின்றது.   

Y உலகில் 210 வகையான ஆடு இனங்கள் உள்ளன.



Y 24 மணி நேரத்தில்நீர்யானை 250 லீற்றருக்கும்(56 கலன்கள்அதிகமான நீரினை அருந்துகின்றனவாம்ஆபிரிக்காவில் பல பேரைக் கொல்லும் முதன்மை வனவிலங்காக நீர்யானை விளங்குகின்றது.



Y காண்டாமிருகங்களின் கண்பார்வை சக்தி குறைவானதாயினும் அவற்றின் மோப்ப சக்தி மற்றும் கேட்கும் சக்தி அபாரமானதாகும்.



Y ஒட்டகங்களின் உடல் வெப்பநிலை பகல் வேளையில் அதிகரித்துச் சென்று, இரவு வேளையில் குளிர் நிலையினை அடைகின்றது.


***
(குறிப்பு è நேற்றைய தினமே இப்பதிவினை பதிவிட எண்ணியிருந்த போதிலும் முடியாமல் போய்விட்டது)

Blog Widget by LinkWithin