வருடாந்தம் நவம்பர்
மாதம் 8ம் திகதி
உலக நகர திட்டமிடல்
தினமாகக் கொண்டாடப்படுகின்றது. எதிர்காலத்தினை மையமாகக் கொண்டு, நகர வடிவமைப்பில்
திட்டமிடலின் அவசியத்தினை உணர்த்தும்முகமாக இத்தினமானது கொண்டாடப்படுகின்றது.
அந்தவகையில், உலக
நகரங்கள் தொடர்பிலான சுவையான
தகவல்கள் சில உங்களுக்காக…!
Y சனத்தொகையின்
பிரகாரம், உலகில் மிகப் பெரிய நகரம், ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரம் ஆகும். 2012ம் ஆண்டு புள்ளிவிபரங்களின் பிரகாரம் 37.22 மில்லியன்
மக்கள் டோக்கியோ நகரில் வசிக்கின்றனர்.
Y நிலப்பரப்பின் பிரகாரம், உலகில் மிகப் பெரிய நகரம், ஐக்கிய
அமெரிக்காவின் நியூயோர்க்
நகரம் ஆகும். 8,683 சதுரகிலோமீற்றர் நியூயோர்க்
நகரின் பரப்பளவாகும்.
Y உலகில் மக்கள் செறிவாக வசிக்கும் நகரங்களில்
முதன்மை ஸ்தானத்தைப் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரம் வகிக்கின்றது. இங்கே 1
சதுர மைலுக்கு 1.11 இலட்சம் மக்கள்
வசிக்கின்றனர்.
Y உலகில் மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் நகரம், பெரு நாட்டின்
லா ரின்கொனடா நகரம் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து
5100
மீற்றர்கள்(16,700’)
உயரத்தில் அமைந்துள்ளது.
Y உலகில் மிக தாழ்வான இடத்தில் அமைந்திருக்கும்
நகரம் இஸ்ரேல் நாட்டின் ஜெரிஹோ நகரம் ஆகும்.
இது கடல் மட்டத்திலிருந்து 258
மீற்றர்கள் தாழ்வாக அமைந்துள்ளது.
Y 1
மில்லியன் சனத்தொகையினை கடந்த உலகின் முதலாவது நகரம், இத்தாலியின் ரோம் நகரம் ஆகும்.
Y உலகில் மிகப்பழமையான நகரமாக சிரியாவின்
டமஸ்கஸ் நகரம் கருதப்படுகின்றது.
***
No comments:
Post a Comment