Monday, January 4, 2010

தனது 100வது போட்டியில் சதம் பெற்ற வீரர்கள்

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆகிய இரண்டிலும் தனது 100வது போட்டியில் சதம் பெற்ற ஒரே வீரர் கோர்டன் கிறினிட்ஜ் (மே.தீவுகள்)


கடந்த பதிவு என்னுடைய 100வது பதிவாகும் அந்த வகையில் அதனைச் சிறப்பிக்கும் முகமாக தான் விளையாடிய 100வது போட்டியில் சதம் பெற்ற பெருமைக்குரிய கிரிக்கெட் வீரர்கள் என்ற இந்தப் பதிவு உங்களுக்காக...............

கிரிக்கெட்டினைப் பொறுத்தவரை ஏராளமான சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஒரு வீரர் தான் விளையாடிய 100வது போட்டியில் சதம் பெறுவதென்பது ஒரு அபூர்வமான சாதனை என்றே கருத வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வீரர் 100 போட்டிகளை விளையாடுவதன்பது ஒரு இலகுவான விடயமல்ல. அந்த வகையில் தான் விளையாடிய 100வது டெஸ்ட் போட்டியில் சதம் பெற்ற கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான விபரம் இதோ..........

# 104 – கொலின் கெளவ்ட்ரி (இங்கிலாந்து எதிர் அவுஸ்ரேலியா), பேர்மிங்காம், 1968

# 145 – ஜாவிட் மியண்டாட் (பாகிஸ்தான் எதிர் இந்தியா), லாகூர், 1989-90

# 149 - கோர்டன் கிறினிட்ஜ் (மே.தீவுகள் எதிர் இங்கிலாந்து), சென் ஜோன்ஸ், 1989-90

# 105 – அலெக்ஸ் ஸ்டுவர்ட் (இங்கிலாந்து எதிர் மே.தீவுகள்), மன்செஸ்டர், 2000

# 184 – இன்சமாம் உல்-ஹக் (பாகிஸ்தான் எதிர் இந்தியா), பெங்களூர், 2004-05

# 120 - ரிக்கி பொண்டிங் (அவுஸ்ரேலியா எதிர் தென்னாபிரிக்கா), சிட்னி, 2005-06

# 143* - ரிக்கி பொண்டிங் (அவுஸ்ரேலியா எதிர் தென்னாபிரிக்கா), சிட்னி, 2005-06

*** தனது 100வது டெஸ்ட் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் பெற்ற ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர் ஆஸி அணியைச் சேர்ந்த ரிக்கி பொண்டிங்.


தான் விளையாடிய 100வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் பெற்ற கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான விபரம் இதோ..........

^^ 102* - கோர்டன் கிறினிட்ஜ் (மே.தீவுகள் எதிர் பாகிஸ்தான்), சார்ஜா, 1988-89

^^ 115 - கிறிஸ் கெயான்ஸ் (நியூசிலாந்து எதிர் இந்தியா),கிரிஸ்சேர்ச், 1998-99

^^ 129 –முஹம்மட் யூசுப் (யூசுப் யுகானா) (பாகிஸ்தான் எதிர் இலங்கை) , சார்ஜா, 2001-02

^^ 101 –குமார் சங்ககார(இலங்கை எதிர் அவுஸ்ரேலியா) ,கொழும்பு, 2003-04

^^ 132* –கிறிஸ் கெயில் (மே.தீவுகள் எதிர் இங்கிலாந்து),லோட்ஸ்,2004

^^ 100* –மார்கஸ் ரெஸ்கோதிக்(இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ்) த ஓவல் , 2005

^^ 115* –ராம் நரேஷ் சர்வான் (மே.தீவுகள் எதிர் இந்தியா), வெஸ்ரெயார், 2006-07


***

Sunday, January 3, 2010

நூறாவது பதிவு......



இன்று எனது நூறாவது பதிவுக்குரிய நாளாகும்.

நான் பதிவுலகுக்குள் நுழைந்தது எப்படி என இன்று நினைத்துப் பார்க்கின்றேன். நான் பதிவுலகுக்குள் நுழைந்தது ஒரு தற்செயலான நிகழ்வே ஆகும். ஏனெனில் ஆரம்பத்தில் பதிவுலகம் என்றால் என்னவென்றே அறிந்திருக்கவில்லை. ஆனாலும் நான் வாசித்த கணனி சஞ்சிகைகளில் பதிவுலகம் என்ற சொற்றொடரினை வாசித்தது இப்பொழுது என் நினைவுக்கு வருகின்றது. நான் முதன்முதலில் வாசித்த பதிவு யாதெனில் நம்ம நண்பர் வெற்றி FM முகாமையாளர் லோஷன் அண்ணாவினுடைய பதிவினைத் தான். அப்படி வாசிக்க முயற்சித்தது ஏனெனில் இசை உலகம் - ஒக்டோபர் 16-31, 2008 , என்னும் இதழில் வெளியாகியிருந்த லோஷன் அண்ணாவினுடைய செவ்வியில் அண்ணாவின் வலைப்பூ முகவரியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்படியாக 2009ம் ஆண்டு ஜூன் மாதம் பதிவுலகத்துக்குள் நுழைய அதிர்ஷ்டவசமாக வாய்ப்புக் கிடைத்தது. நமக்கென்று சொந்தமாக ஒரு பதிவினை ஆரம்பிப்பது எவ்வாறென கூகிளில் தேடி சில விடயங்களைப் பெற்றுக்கொண்டு ஒரு வலைப்பூ முகவரியினை உருவாக்கிக் கொண்டேன். அந்தவகையில் அவ்வலைப்பூவில் என்ன பதிவை இடலாம் என யோசித்த போது பத்திரிகைகளில் வெளியாகிய என்னுடைய ஆக்கங்களினை இடலாம் எனலாம் யோசித்து “உலகில் உறைபனி உருகும் அபாயம்” என்னும் பத்திரிகை ஆக்கத்தினை என்னுடைய முதல் பதிவாக பதிவிட்டேன். ஆரம்பத்தில் பதிவிட்ட போது எந்தவிதமான அறிமுகத்தினையும் வெளியிடவில்லை. காரணம் எனக்கு அந்தவேளை தமிழ் தட்டச்சு தெரியாது. பின்னர் கூகிள் தமிழ் தட்டச்சு வசதியினை அறிந்துகொண்டு பதிவு தொடர்பாக சிறியதொரு அறிமுகத்தினை இட்டேன். இட்ட பதிவினை எவ்வாறு திரட்டிகளில் இணைப்பது என்பது தொடர்பாக திணறினேன். காரணம் HTML தொடர்பில் ஒன்றும் அறிந்திருக்காத காரணத்தினால், பின்னர் ஒரு சில நாட்களுக்குப் பின்னர் ஒருவாறாக அறிந்துகொண்டு தமிழிஷ் திரட்டியில் இணைத்துக்கொண்டு பதிவிட்டேன். (ஆரம்பத்தில் திரட்டிகளில் என் பதிவினை இணைத்த விதம் தற்சமயம் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றது...) இப்படியாக ஆரம்பத்தில் கூகிள் தமிழ் தட்டச்சு வசதியினை பயன்படுத்தி சில பதிவுகளினை இட்டேன். பின்னர் இணையத்தில் தேடி “அழகி” என்ற மென்பொருளின் வசதியினை பயன்படுத்தியும் தற்சமயம் “NHM Writer ” மென்பொருளின் வசதியினை பயன்படுத்தி பதிவிடுகின்றேன். இவ்வாறு என்னுடைய பதிவிடல் சென்றுகொண்டிருக்கின்றது. மேலும் யுனிகோர்ட் தொடர்பில் நிலவிய குழப்பங்கள் எல்லாம் சரியாகிவிட்டது.
பதிவுலகம் தொடர்பான தொழில்நுட்பங்கள் தொடர்பில் ஓரளவே அறிந்துகொண்டுள்ளேன். பதிவுலகம் தொடர்பாக மேலும் கற்பதற்கு என்னுடைய தேடல்கள், முயற்சிகளினை இன்றும் தொடர்கின்றேன்.
பதிவுலகத்தில் நான் நுழைந்தது என்னுடைய எழுத்துப்பணிக்கான ஆர்வத்துக்கு மேலும்மேலும் தீனி போடுகின்றது. மேலும் என்னால் முடிந்தளவு பல்சுவைகளில் இன்று பதிவுகளினை இட்டுவருகின்றேன் என நினைக்கின்றேன்.
என் வலைப்பூவுக்கு தொடர்ந்து ஆக்கமும், ஊக்கமும் அளித்துவருகின்ற பதிவுலக வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் இதயம் கணிந்த நன்றிகள். மேலும் என் பதிவினை சுமந்து சென்று உலகம் முழுவதும் சேர்க்கும் தளங்கள் அனைத்துக்கும் என் நன்றிகள்.

நண்பர்களே நீங்கள் வழங்கிய, வழங்கிவருகின்ற ஆதரவானது என்னை மென்மேலும் பதிவுலகில் எழுதுவதற்கு உந்துசக்தியாக இருக்கின்றது. இந்தப் பதிவுலகில், நண்பர்களே உங்கள் ஆதரவினை தொடர்ந்தும் வேண்டி நிற்கின்றேன்.


##########################



***

Saturday, January 2, 2010

உலக வெப்பமயமாதலும் முருகைக் கற்களுக்கான பாதிப்புக்களும்



உலகமானது இன்று வெப்பமயமாதலின் காரணமாக பல்வேறு வகைகளில் பாதிப்புக்களினை எதிர்நோக்கிய வண்ணம் பயணித்துக்கொண்டியங்குகின்றது. இதற்கு முந்தியதொரு பதிவில் “உலக வெப்பமயமாதலும் தாவரங்களுக்கானபாதிப்புக்களும்” என்னும் தலைப்பில் உலக வெப்பமயமாதலின் பாதிப்பினை வாசித்திருப்பீர்கள்.

அந்தவகையில் “உலக வெப்பமயமாதலும் முருகைக் கற்களுக்கான பாதிப்புக்களும்” என்ற இக்கட்டுரையினை பெரிதாக்கி வாசிக்கவும் நண்பர்களே........




(நன்றி-வீரகேசரி வாரவெளியீடு 26.07.2009)

***
Blog Widget by LinkWithin