சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையே காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மொத்தமாக 08 சதங்கள் பெறப்பட்டன. இலங்கை அணி தமது 1வது இன்னிங்ஸ்சில் 4 விக்கட் இழப்பிற்கு 570 ஓட்டங்களைப் பெற்ற வேளை தமது இன்னிஸ்சினை இடைநிறுத்திக் கொண்டது. இலங்கை அணியின் சார்பில் குமார் சங்கக்கார 142, லகிரு திரிமான்னே 155*, தினேஷ் சந்திமால் 116* ஓட்டங்களினையும் பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு தமது 1வது இன்னிங்ஸ்சில் களமிறங்கிய
பங்களாதேஷ் அணி 638 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணியின் சார்பில்
முஹம்மட் அஷ்ரப்புல் 190, முஷ்ஃபிகுர் ரஹீம் 200, நசிர் ஹொஸ்சைன் 100
ஓட்டங்களினையும் பெற்றுக்கொண்டனர்.
தமது 2வது இன்னிங்ஸ்சில் பதிலுக்கு
துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 4 விக்கட் இழப்பிற்கு 335 ஓட்டங்களைப் பெற்ற வேளை
தமது இன்னிஸ்சினை இடைநிறுத்திக் கொண்டது. இலங்கை அணியின் சார்பில் குமார்
சங்கக்கார 105,திலகரத்ன டில்ஷான் 126 ஓட்டங்களினையும் பெற்றுக்கொண்டனர்.
சத மழை பொழிந்த இந்த டெஸ்ட் போட்டியில்
மொத்தமாக 8 சதங்கள் பெறப்பட்டன. இதன் மூலம் 8 வருட கால சாதனை புதுப்பிக்கப்பட்டது.
இதற்கு முன்னர், 2005ம் ஆண்டு சென்.ஜோன்ஸ் அன்ரிகுவாவில் நடைபெற்ற மே.தீவுகள்,
தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் 8 சதங்கள் பெறப்பட்டமை
குறிப்பிடத்தக்கதாகும். தென்னாபிரிக்க சார்பில் டி வில்லியர்ஸ் 114, கிரேம் ஸ்மித்
126, ஜக்ஸ் கலிஸ் 147, அஷ்வெல் பிரின்ஸ் 131 ஓட்டங்களைப் பெற்ற அதேவேளை மே.தீவுகள்
சார்பில் கிறிஸ் கெய்ல் 317, ராம் நரேஷ் சர்வான் 127, சிவ்நரேய்ன் சந்திரபோல் 127,
நர்சிங் டியோநரேய்ன் 107 ஓட்டங்களினையும் பெற்றுக்கொண்டனர்.
வரலாற்றில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியொன்றில்
அதிக சதங்கள் பெறப்பட்ட நிகழ்வுகள் வ்ருமாறு;
♣ 08
சதங்கள் – இலங்கை எதிர் பங்களாதேஷ்,
காலி, 2012/13, வெற்றிதோல்வியற்ற முடிவு
♣ 08
சதங்கள் – மே.தீவுகள் எதிர்
தென்னாபிரிக்கா, சென்.ஜோன்ஸ் அன்ரிகுவா, 2005, வெற்றிதோல்வியற்ற முடிவு
♣ 07
சதங்கள் – இங்கிலாந்து எதிர்
அவுஸ்திரேலியா, நொட்டிங்ஹாம், 1938, வெற்றிதோல்வியற்ற முடிவு
♣ 07
சதங்கள் – மே.தீவுகள் எதிர்
அவுஸ்திரேலியா, கிங்ஸ்ரன், 1955, ஆஸி வெற்றி
♣ 07
சதங்கள் – தென்னாபிரிக்கா எதிர்
மே.தீவுகள், கேப் டவுன், 2003/04, வெற்றிதோல்வியற்ற முடிவு
♣ 07
சதங்கள் – மே.தீவுகள் எதிர்
இங்கிலாந்து, போர்ட் ஒப் ஸ்பெய்ன், 2008/09, வெற்றிதோல்வியற்ற முடிவு
♣ 07
சதங்கள் – இந்தியா எதிர்
தென்னாபிரிக்கா, கொல்கத்தா, 2009/10, இந்தியா இன்னிங்ஸ் & 57 ஓட்டங்களால் வெற்றி
♣ 07
சதங்கள் – இந்தியா எதிர் இலங்கை, அஹ்மதாபாத்,
2009/10, வெற்றிதோல்வியற்ற முடிவு
***