மார்ச் 08 திகதியானது உலகளாவியரீதியில் சர்வதேச மகளிர்
தினமாக கொண்டாடப்படுகின்றது. சர்வதேச மகளிர் தினமானது 1909ம் ஆண்டு முதல்
கொண்டாடப்பட்டுவருகின்றது.
·
பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து
ஆகும்.(1893ம் ஆண்டு)
·
ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற முதல் பெண்மணி பிரிட்டனைச்
சேர்ந்த சார்லொட் கூப்பர், இவர் 1900ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில்
டென்னிஸ் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
·
பெண்கள் முதன்முதலில் தடகள மற்றும் சுவட்டு நிகழ்ச்சிகளில்
கலந்துகொண்டது 1928ம் ஆண்டு அம்ஸ்ரெர்டாம் ஒலிம்பிக் போட்டியிலாகும்.
·
பெண்களுக்கான மருத்துவப் பாடசாலையினை நிறுவிய முதல் நாடு
ஜப்பான் ஆகும். 1900ம் ஆண்டு யோஷிகா யயோய் என்பவரால் நிறுவப்பட்டது.
·
விண்வெளிக்கு பயணம் செய்த முதல் பெண்மணி ரஷ்யாவினைச்
சேர்ந்த வெலன்டினா தெரெஷ்கோவா ஆவார். (1963ம் ஆண்டு)
·
முஸ்லிம் நாடொன்றில் தலைமைத்துவத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட
முதல் பெண்மணி பெனாசீர் பூட்டோ ஆவார். இவர் 1988ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின்
பிரதமராக மக்களால் தெரிவுசெய்யப்பட்டார்.
·
பெண்கள் பட்டப்படிப்பினை மேற்கொள்ள அனுமதி வழங்கிய முதல்
ஐரோப்பிய பல்கலைக்கழகம் சூரிச் பல்கலைக்கழகம் ஆகும்.(1865ம் ஆண்டு)
·
ஐக்கிய அமெரிக்க தபால் துறை வரலாற்றில் தபால் முத்திரையில்
உருவப் படம் பொறிக்கப்பட்ட முதல் பெண்மணி என்கின்ற பெருமையினைப் பெறுபவர் ஸ்பெய்ன்
மகாராணி இசபெல்லா ஆவார்.(1893ம் ஆண்டு)
கிறிஸ்தோபர் கொலம்பஸ்சின் நாடுகாண் பயணத்திற்கு
வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை இவரையே சாரும்.
·
எவரெஸ்ட் சிகரத்தினை அடைந்த முதல் பெண்மணி ஜப்பான்
நாட்டினைச் சேர்ந்த ஜுன்கோ தஃபெய் ஆவார்.(1975ம் ஆண்டு)
·
ஐக்கிய நாடுகள் சபையானது 1975ம் ஆண்டினை சர்வதேச பெண்கள்
ஆண்டாக பிரகடனப்படுத்தியது.
·
தற்போது உலகில் 17 நாடுகளில் பெண்கள் ஜனாதிபதிகளாகவும்,
பிரதம மந்திரிகளாகவும் ஆட்சிபீடத்தில் இருக்கின்றனர்.
அந்த நாடுகளாவன;
ஜேர்மனி, லைபீரியா, ஆர்ஜென்ரீனா, பங்களாதேஷ், ஐஸ்லாந்து, லுத்துவேனியா,
கொஸ்டாரிக்கா, டிரினாட் & ரொபாக்கோ, அவுஸ்திரேலியா, ஸ்லோவாக்கியா, பிரேசில்,
கொசோவா, தாய்லாந்து, டென்மார்க், ஜமைக்கா, மலாவி, தெ கொரியா
***
2 comments:
சிறப்பிற்கு சிறப்பு சேர்த்தமைக்கு நன்றி...
இன்று மட்டுமல்ல... என்றுமே போற்றப்பட வேண்டியவர்கள்...
நன்றிகள் சகோ.....
Post a Comment