Showing posts with label உலக மகளிர் தினம். Show all posts
Showing posts with label உலக மகளிர் தினம். Show all posts

Friday, March 8, 2013

வரலாற்றில் பெண்மணிகளுக்கு கிடைத்த சில அங்கீகாரங்கள்...


     மார்ச் 08 திகதியானது உலகளாவியரீதியில் சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகின்றது. சர்வதேச மகளிர் தினமானது 1909ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டுவருகின்றது.



·        பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து ஆகும்.(1893ம் ஆண்டு)

·        ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற முதல் பெண்மணி பிரிட்டனைச் சேர்ந்த சார்லொட் கூப்பர், இவர் 1900ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

·        பெண்கள் முதன்முதலில் தடகள மற்றும் சுவட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது 1928ம் ஆண்டு அம்ஸ்ரெர்டாம் ஒலிம்பிக் போட்டியிலாகும்.

·        பெண்களுக்கான மருத்துவப் பாடசாலையினை நிறுவிய முதல் நாடு ஜப்பான் ஆகும். 1900ம் ஆண்டு யோஷிகா யயோய் என்பவரால் நிறுவப்பட்டது.

·        விண்வெளிக்கு பயணம் செய்த முதல் பெண்மணி ரஷ்யாவினைச் சேர்ந்த வெலன்டினா தெரெஷ்கோவா ஆவார். (1963ம் ஆண்டு)



·        முஸ்லிம் நாடொன்றில் தலைமைத்துவத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட முதல் பெண்மணி பெனாசீர் பூட்டோ ஆவார். இவர் 1988ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக மக்களால் தெரிவுசெய்யப்பட்டார்.


·        பெண்கள் பட்டப்படிப்பினை மேற்கொள்ள அனுமதி வழங்கிய முதல் ஐரோப்பிய பல்கலைக்கழகம் சூரிச் பல்கலைக்கழகம் ஆகும்.(1865ம் ஆண்டு)

·        ஐக்கிய அமெரிக்க தபால் துறை வரலாற்றில் தபால் முத்திரையில் உருவப் படம் பொறிக்கப்பட்ட முதல் பெண்மணி என்கின்ற பெருமையினைப் பெறுபவர் ஸ்பெய்ன் மகாராணி இசபெல்லா ஆவார்.(1893ம் ஆண்டு)
     கிறிஸ்தோபர் கொலம்பஸ்சின் நாடுகாண் பயணத்திற்கு வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை இவரையே சாரும்.

·        எவரெஸ்ட் சிகரத்தினை அடைந்த முதல் பெண்மணி ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த ஜுன்கோ தஃபெய் ஆவார்.(1975ம் ஆண்டு)



·        ஐக்கிய நாடுகள் சபையானது 1975ம் ஆண்டினை சர்வதேச பெண்கள் ஆண்டாக பிரகடனப்படுத்தியது.

·        தற்போது உலகில் 17 நாடுகளில் பெண்கள் ஜனாதிபதிகளாகவும், பிரதம மந்திரிகளாகவும் ஆட்சிபீடத்தில் இருக்கின்றனர். 
    அந்த நாடுகளாவன;  ஜேர்மனி, லைபீரியா, ஆர்ஜென்ரீனா, பங்களாதேஷ், ஐஸ்லாந்து, லுத்துவேனியா, கொஸ்டாரிக்கா, டிரினாட் & ரொபாக்கோ, அவுஸ்திரேலியா, ஸ்லோவாக்கியா, பிரேசில், கொசோவா, தாய்லாந்து, டென்மார்க், ஜமைக்கா, மலாவி, தெ கொரியா


***
Blog Widget by LinkWithin