Thursday, June 21, 2012

ஆங்கில மொழி இடமிருந்து வலமாக எழுதப்படும், வாசிக்கப்படுவதும் ஏன்???

ஒருவரின் அடையாளத்தினை வெளிக்காட்டுகின்ற பிரதானமானவொரு அங்கமாக மொழியினை நாம் குறிப்பிட்டுக் காட்டுவதுண்டு. அந்தவகையில் உலகில் சில மொழிகள் இடமிருந்து வலமாகவும், வேறுசில மொழிகள் வலமிருந்து இடமாக எழுதப்படுவதும், வாசிக்கப்படுவதும் நடைமுறையில் உள்ளது.

எமது தாய்மொழியான தமிழ்மொழியானது இடமிருந்து வலமாக எழுதப்படுவதுடன், வாசிக்கப்படுவதுமுண்டு. அதேபோல் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் போன்ற மொழிகளும் இடமிருந்து வலமாக எழுதப்படுவதுடன், வாசிக்கப்படுவதும் நாமறிந்ததே. புராதன கிரேக்க நாட்டவர்கள் தமது மொழியில் இடமிருந்து வலமாக எழுதுவதினை மிகவும் இலகுவானதாகவும், அனுபவரீதியான வழிமுறையாகவும் ஏற்றுக்கொண்டனர். இந்தப்போக்கே இன்றுவரை அனேகமான ஐரோப்பிய மொழிகளில் பின்பற்றப்படுகின்றது. ஏனெனில் எல்லா ஐரோப்பிய மொழிகளும் தமது மூலவேரினை கிரேக்க மற்றும் இலத்தீன் மொழியிலேயே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அரேபிய, பேர்சி, ஹீப்ரு மற்றும் உருது ஆகிய மொழிகள் வலமிருந்து இடமாக எழுதப்படுவதும், வாசிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் இந்த மொழிகளில் இலக்கங்களானது இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றது.

குறிப்பாக சீனர்களும், ஜப்பானியர்களும் கிடையாக அல்லது நிலைக்குத்தாகவே தமது மொழியினை எழுதுவர்.

*************************************************

இசைபோல உலகமெங்கும் நின் புகழ் பரவ வாழ்த்துக்கள்.........

இன்று 21ம்திகதி தனது 4வது பிறந்த நாளைக் கொண்டாடும் எங்கள் அன்பு மருமகள் "ஜயபிரதா" செல்லத்துக்குவாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் 21ம் திகதி உலக இசை தினமாகும். இசைபோல உலகமெங்கும் நின் புகழ் பரவ வாழ்த்துக்களை அன்பு மாமா தெரிவித்துக்கொள்கின்றேன்.........

Happy Birthday Wishes………….

***

Saturday, June 16, 2012

ஒலிம்பிக் வரலாற்றில் சுதந்திர இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர்…....

32வது ஒலிம்பிக் போட்டிகள் லண்டன் நகரில் தனது அத்தியாயத்தினைப் பதிப்பதற்கு இன்னும் 41 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அந்தவகையில், ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவானது இதுவரை மொத்தமாக 20 பதக்கங்களினை மாத்திரே வென்றுள்ளது. இதில் 9 தங்கப்பதக்கங்களும், 4 வெள்ளிப்பதக்கங்களும், 7 வெண்கலப்பதக்கங்களும் உள்ளடங்குகின்றன. 

சில சுவாரஷ்சியமான தகவல்கள்....

 ஒலிம்பிக் வரலாற்றில், காலனித்துவ இந்தியா சார்பாக முதல் பதக்கம் வென்ற வீரர் பெருமைக்குரியவர் நோர்மன் பிரிட்சார்ட் ஆவார்; இவர் 1900ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்போட்டியில் ஆடவருக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டி மற்றும் ஆடவருக்கான 200 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப்போட்டி ஆகியவற்றில் வெள்ளிப்பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 ஒலிம்பிக் வரலாற்றில், சுதந்திர இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர் காஷ்வா தாதாசாஹெப் ஜாதேவ் ஆவார். இவர் 1952ம் ஆண்டு ஹெல்சிங்கி ஒலிம்பிக்போட்டியில் ஆடவருக்கான மல்யுத்தப்போட்டியில் வெண்கலப்பதக்கத்தினைப் பெற்றுக்கொடுத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

 ஒலிம்பிக் வரலாற்றில், இந்தியா சார்பாக பதக்கம் வென்ற முதல்பெண்மணி என்ற பெருமைக்குரியவர் கர்ணம் மல்லேஸ்வரி; இவர் 2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்போட்டியில் 69கிலோகிராம் பளு தூக்கல் போட்டியில் வெண்கலப்பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 ஒலிம்பிக் வரலாற்றில், இந்தியா சார்பாக தங்கப்பதக்கம் வென்ற ஒரேயொருவர் என்ற பெருமைக்குரியவர் அபினவ் பிந்ரா; இவர் 2008ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 1996ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்போட்டியில் லியாண்டர் பயஸ் ஆடவருக்கான டென்னிஸ் போட்டியில் வெண்கலப்பதக்கத்தினைப் வெற்றிகொண்டார்.

 ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா சார்பாக குத்துச் சண்டைப்போட்டியில் வெண்கலப்பதக்கத்தினைப் பெற்றுக்கொடுத்தவர் விஜேந்தர் குமார்; இவர் 2008ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்போட்டியில் 75 கிலோகிராம் குத்துச்சண்டைப்பிரிவில் வெண்கலப்பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 ராஜ்யவர்தன் சிங் ரதோர் 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தினைப் வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா சார்பாக மல்யுத்தப்போட்டியில் ஜாதேவ்வினை தொடர்ந்து வெண்கலப்பதக்கத்தினைப் பெற்றுக்கொடுத்தவர் சுசில் குமார்; இவர் 2008ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்போட்டியில் 66 கிலோகிராம் மல்யுத்தப்பிரிவில் வெண்கலப்பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒலிம்பிக்கில் இந்தியா பதிவு தொடரும்........

***

Tuesday, June 5, 2012

வலையுலகில் மூன்றாண்டு பூர்த்தி.......



வலையுலகில் தடம்பதித்து இன்றைய நாளுடன் 3 வருடங்கள் பூர்த்தியடைந்து 4ம் ஆண்டில் கால்பதிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த வருடங்களைப் பார்க்கிலும் இந்த வருடம் அதிக வேலைப்பழு காரணமாக  குறைவான பதிவுகளே இட்டாலும் என் ஊடகப்பணியினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் மிகுந்த ஆர்வம் உடையவனாக இருப்பதில் ஆத்மதிருப்பதி கிடைக்கின்றது.




வலையுலகில் என்னுடைய வலைப்பூவுக்கு ஆதரவும், ஊக்கமும் அளித்த/அளித்துவருகின்ற பதிவர்கள், வாசகர்கள், திரட்டிகள், பத்திரிகைகள், இணையங்கள், சஞ்சிகைகள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.



வலையுலகில் மூன்று வெற்றிகரமான ஆண்டுகளைப் பூர்த்திசெய்து நான்காவது ஆண்டில் கால்பதிக்கும் இந்தத் தருணத்தில் என் வலைப்பதிவு ஆக்கங்களினை தொகுத்து புத்தகமொன்று வெளியிட வேண்டும் என்ற ஆசை என்னிடம் உள்ளது, வாய்ப்புக்கள் வருகின்றபோது என் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் என நம்புகின்றேன்.

மீண்டும் உத்வேகத்துடன் 4ம் ஆண்டில் கால்பதித்து தொடர்ந்து பதிவுலகில் உங்கள் ஆதரவுடன் சாதிக்கவேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

உங்கள் வாக்குகளினையும், பின்னூட்டங்களினையும் வழங்கி ஆதரவினையும், ஊக்கத்தினையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன். உங்கள் ஆதரவே என் வலைப்பதிவில் புதுப்புது தகவல்களினை பதிவிடுவதற்கு உந்துசக்தியளிக்கும்.


அன்புடன்...
கே.கே.லோகநாதன்

*** 

Monday, June 4, 2012

உலகப் புகழ்பெற்றவர்கள் வாழ்வில்………………..

உலகப் புகழ்பெற்ற சிலரின் வாழ்வில் நடைபெற்ற சுவாரஷ்சியமான சில சம்பவங்களின் தொகுப்பு………..

படித்ததில் பிடித்தது புதிய மெருகுடன் உங்களுக்காக…………  (பெரிதாக்கி வாசிக்கவும்....)



Ø  ஐன்ஸ்டீனின் நிதானம்……….



Ø  சிறுவனின் பதிலடி…………




Ø  சேர்ச்சிலும் கடைக்காரரும்……………..




Ø  திருமணம் பற்றி சோக்கிரடீஸ்……….



***
Blog Widget by LinkWithin