32வது ஒலிம்பிக் போட்டிகள் லண்டன் நகரில் தனது அத்தியாயத்தினைப் பதிப்பதற்கு இன்னும் 41 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அந்தவகையில், ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவானது இதுவரை மொத்தமாக 20 பதக்கங்களினை மாத்திரே வென்றுள்ளது. இதில் 9 தங்கப்பதக்கங்களும், 4 வெள்ளிப்பதக்கங்களும், 7 வெண்கலப்பதக்கங்களும் உள்ளடங்குகின்றன.
சில சுவாரஷ்சியமான தகவல்கள்....
ஒலிம்பிக் வரலாற்றில், காலனித்துவ இந்தியா சார்பாக முதல் பதக்கம் வென்ற வீரர் பெருமைக்குரியவர் நோர்மன் பிரிட்சார்ட் ஆவார்; இவர் 1900ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்போட்டியில் ஆடவருக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டி மற்றும் ஆடவருக்கான 200 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப்போட்டி ஆகியவற்றில் வெள்ளிப்பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஒலிம்பிக் வரலாற்றில், சுதந்திர இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர் காஷ்வா தாதாசாஹெப் ஜாதேவ் ஆவார். இவர் 1952ம் ஆண்டு ஹெல்சிங்கி ஒலிம்பிக்போட்டியில் ஆடவருக்கான மல்யுத்தப்போட்டியில் வெண்கலப்பதக்கத்தினைப் பெற்றுக்கொடுத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
ஒலிம்பிக் வரலாற்றில், இந்தியா சார்பாக பதக்கம் வென்ற முதல்பெண்மணி என்ற பெருமைக்குரியவர் கர்ணம் மல்லேஸ்வரி; இவர் 2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்போட்டியில் 69கிலோகிராம் பளு தூக்கல் போட்டியில் வெண்கலப்பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஒலிம்பிக் வரலாற்றில், இந்தியா சார்பாக தங்கப்பதக்கம் வென்ற ஒரேயொருவர் என்ற பெருமைக்குரியவர் அபினவ் பிந்ரா; இவர் 2008ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
1996ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்போட்டியில் லியாண்டர் பயஸ் ஆடவருக்கான டென்னிஸ் போட்டியில் வெண்கலப்பதக்கத்தினைப் வெற்றிகொண்டார்.
ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா சார்பாக குத்துச் சண்டைப்போட்டியில் வெண்கலப்பதக்கத்தினைப் பெற்றுக்கொடுத்தவர் விஜேந்தர் குமார்; இவர் 2008ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்போட்டியில் 75 கிலோகிராம் குத்துச்சண்டைப்பிரிவில் வெண்கலப்பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ராஜ்யவர்தன் சிங் ரதோர் 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தினைப் வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா சார்பாக மல்யுத்தப்போட்டியில் ஜாதேவ்வினை தொடர்ந்து வெண்கலப்பதக்கத்தினைப் பெற்றுக்கொடுத்தவர் சுசில் குமார்; இவர் 2008ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்போட்டியில் 66 கிலோகிராம் மல்யுத்தப்பிரிவில் வெண்கலப்பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஒலிம்பிக்கில் இந்தியா பதிவு தொடரும்........
***
2 comments:
பகிர்வுக்கு நன்றி நண்பா.!
நன்றி சகோ...
Post a Comment