Wednesday, May 23, 2012

பயண அனுபவம்..... புகைப்படப் பகிர்வு # 02..........

கடந்தவாரம், இலங்கையின் புராதன தலைநகரங்களில் ஒன்றாக விளங்கிய அனுராதபுரத்திற்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தவேளை இலங்கையின் புராதன பெளத்த விகாரைகளான ருவன்வெலிசாய, தூபாராம, அபயகிரி ஆகிய விகாரைகளை தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

அவை தொடர்பிலான புகைப்படப்பதிவு உங்களுக்காக………………


  • அபயகிரி விகாரை......

















***

Monday, May 21, 2012

பயண அனுபவம்..... புகைப்படப் பகிர்வு # 01..........


கடந்தவாரம், இலங்கையின் புராதன தலைநகரங்களில் ஒன்றாக விளங்கிய அனுராதபுரத்திற்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தவேளை இலங்கையின் புராதன பெளத்த விகாரைகளான ருவன்வெலிசாய, தூபாராம, அபயகிரி ஆகிய விகாரைகளை தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

அவை தொடர்பிலான புகைப்படப்பதிவு உங்களுக்காக………………

           Ø  ருவன்வெலிசாய விகாரை……








Ø  தூபாராம விகாரை……










புகைப்படப் பிடிப்பாளர் -கே.கே.லோகநாதன் ...
***

Sunday, May 13, 2012

மரங்கொத்திப் பறவைகளின் அதிசயம்........



மரங்கொத்திப் பறவைகள் தங்களுடைய அலகுகளினால் மரத்தைப் கொத்துவதைப் பார்த்திருப்போம். ஒரு மனிதன் ஆணியை சுவரில் அடிக்க எவ்வளவு பலத்தைப் உபயோகிப்பானோ, அவ்வளவு பலத்தைப் மரங்கொத்திப் பறவைகள் உபயோகித்து மரத்தை துளையிடுகின்றது. மரங்கொத்திப் பறவையின் தலை, மரத்தைக் கொத்துவதேற்றாற் போல் அமைந்து காணப்படுகின்றது. முதலாவதாக அவைகளின் மூளை கனமான மண்டை ஓட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக மரங்கொத்தி பறவையின் மண்டை ஓட்டின் அடிப்பாகத்தில் மெத்தை போல திசுக்கள் இருக்கின்றன. மரத்தைக் கொத்தும்போது உண்டாகும் மூன்றில் இரண்டு பாக அதிர்வுகளை இந்த மெத்தை போன்ற திசுக்கள் தாங்கிக்கொள்கின்றன. மற்றும் கழுத்தைச் சுற்றியுள்ள பலமான தசைகள் தாங்கிக்கொள்கின்றது. இரண்டு அல்லது மூன்று  நொடிகளில் 3843 முறை ஒரு மரத்தைக் கொத்துகிறது.

மரங்கொத்திகள் துளையிடுவதற்கு பெரும்பாலும் பைன்(Pine) மரத்தையே தேர்ந்தெடுக்கின்றன. அவ்வாறு தேர்ந்தெடுக்கும் மரத்திற்கு 100 வயதிற்கு மேற்பட்டதாக இருக்கும். ஏனெனில்  100 வயதிற்கு மேற்பட்ட பைன் மரங்களுக்கு ஒரு வியாதி ஏற்படுவதினால் அவற்றின் தடிப்பான மரப்பட்டை மிருதுவாகி விடுகின்றன. விஞ்ஞானிகளால் இது சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

பைன் மரத்தைப் மரக்கொத்திகள் தெர்ந்தெடுப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது. தங்கள் கூட்டை மரங்கொத்திகல் சிறு சிறு துவாரமிடுகின்றன. பைன் மரத்திலிருந்து வடியும் பிசின் அவற்றில் நிரம்பி சிறுகுளம் போலாகி விடுகின்றன. இந்தப் பிசின் குளங்கள் மரங்கொத்திப் பறவைகளின் மாபெரும் எதிரியான பாம்புகளிடமிருந்து பாதுகாப்பை அளிக்கின்றது.

Blog Widget by LinkWithin