Tuesday, September 24, 2013

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் தேரோட்டம் - புகைப்படப் பகிர்வு

மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை அருள்மிகு திருத்தான்தோன்-- றீஸ்வரர் தேவஸ்தான  வருடாந்த தேரோட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22/09/2013) மாலைவேளை இடம்பெற்றது.

கல் நந்தி எழுந்த புல்லுண்டு சாணமிட்டு வெள்ளையர்களை புறமுதுகு காட்டி ஓடவைத்த வரலாற்றுப் பெருமை மிக்க கிழக்கிலே தேரோடும் ஆலயமாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் விளங்குகின்றது .

வெள்ளையர்களால் ஈழத்தில் இந்து ஆலயங்கள் உடைத்துத் தரமட்டமாக்கப்பட்ட போது இவ் ஆலயத்தையும் விட்டு வைக்க விரும்பாத வெள்ளையர்கள் ஆலயத்தை உடைக்க வந்தார்கள். குருக்களுடன் வெள்ளையர்களுக்கு இடம்பெற்ற விவாதத்தில் இந்த கல் நந்தி புல்லுண்ணும் என்ற குருக்களின் கூற்றை நிரூபிக்க ஆலயத்தின் கல் நந்தி எழுந்து காலால் மண்ணை எற்றி தனுப்போட்டு கொடுக்கப்பட்ட புல்லை உண்டு வெள்ளையர்களை மெய்மறக்க வைத்து புறமுதுகு காட்டி ஓடவைத்த வரலாற்றுப்பெருமை இவ் ஆலயத்துக்கு உண்டு.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இத்தேரோட்ட  
நிகழ்வில் அடியேனுக்கு முதன்முறையாக கலந்துகொள்ள---வாய்ப்புக் கிடைத்தது மறக்கமுடியாத நிகழ்வாகும்.








***

Monday, August 26, 2013

ஆகஸ்ட் 26 ⇨ உலக நாய் தினம்


உலகில் மனிதர்களால் அதிகளவில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்ற விலங்கினங்களில் பூனையினை அடுத்து நாய்களே இடம்பெறுகின்றன.  அந்தவகையில் நாய்கள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள் உங்களுக்காக…!

Yமனிதனுடன் பன்னெடுங்காலம் காலம் முதல் பல்வேறு யுகங்களைக் கடந்து வாழ்கின்ற ஒரே உயிரினம் நாய் ஆகும். இவை மனிதர்களுடன் 14,000  ஆண்டுகளாக வசித்துவருகின்றனவாம்.


Yஉலகில் எல்லா வகையான சீதோஷ்ண நிலைகளிலும் வசிக்ககூடிய ஒரே உயிரினம் நாய் மட்டுமேயாகும்.

Yஉலகம்முழுவதும் 700 இற்கும் மேற்பட்ட தூய நாய் இனங்கள் காணப்படுகின்றன.

Yநாய்க்குட்டிகள் பிறக்கின்றபோது கண்பார்வையற்றவையாகவும், காது 
கேளாதவையாகவும், பற்களற்றவையாகவும் இருக்கின்றன.


Yநாய்களின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு அண்ணளவாக 70 – 120 தடவைகளாகும்.

Yநாய்களின் சாதாரண உடல் வெப்பநிலை 100.5 ºF – 102.5 ºF (38.06ºC – 39.17ºC)

Yவளர்ந்த நாய்கள் பொதுவாக 42 பற்களைக் கொண்டுள்ளன,  அத்துடன் குட்டிகளுக்கு 28 பற்கள் மட்டுமே உண்டு.

 Yநாய்கள் அண்ணளவாக 1700 சுவை அரும்புகளை மட்டுமே கொண்டுள்ளன, ஆனால் மனிதன் 9000 இற்கும் மேற்பட்ட சுவை அரும்புகளைக் கொண்டுள்ளான்.


Yமனிதனை விடவும் நாய்களின் கேட்கும் சக்தி 10 மடங்கு அதிகமாகும்.

Y மனிதனை விடவும் நாய்களின் வாசனை உணர்வு 1000 மடங்கு சிறப்பானதாகும். மனிதர்கள்  5 மில்லியன் வாசனையை உணர்கின்ற கலங்களைக் கொண்டுள்ள, அதேவேளை நாய்கள் 220 மில்லியன் வாசனையை உணர்கின்ற கலங்களைக் கொண்டுள்ளான். அதேபோல் வாசனை உணர்கின்ற மனித மூளையின் பாகத்தினை விடவும் நாயின் மூளையின் பங்கு 4 மடங்கு பெரியதாகும்.


Y உலகில் அதிக எண்ணிக்கையான நாய்கள் அமெரிக்காவிலேயே வாழ்கின்றனவாம்.

Y விண்வெளிக்கு முதல்முதலில் சென்ற உயிரினம் "லைக்கா" என்கின்ற பெண் நாய் ஆகும். 1957ம் ஆண்டு நவம்பர் 2ம் நாள் ஸ்புட்னிக் II விண்கலத்தில் ரஷ்யாவினால் விண்ணுக்கு அனுப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


Y மனிதர்களைப் போலவே நாய்களும் கனவு காண்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.



நண்பர்களே, உங்களில் யார்யாரெல்லாம் நாயினை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்க்கின்றீர்கள்?...

 ***
Blog Widget by LinkWithin