Wednesday, August 7, 2013

தாயினதும், சேயினதும் உடல் நலனைக் காக்கும் தாய்ப்பால்...!

குழந்தைக்கு தாய்ப்பால் வழங்குவதன் அவசியத்தை உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம் (ஆகஸ்ட் 1 – 7), யுனிசெப்ஃ மற்றும் உலக சுகாதார அமைப்பின்   மூலமாக 1992ம் ஆண்டு தொடக்கம் உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதே உலக தாய்ப்பாலூட்டும் வாரம் கொண்டாடுவதன் நோக்கம்.

தாய்பாலூட்டுவது, குழந்தைகளை மட்டுமின்றி தாய்மார்களையும் பலவிதமான நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது என்கின்றது ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள்.


உலக தாய்ப்பால் வாரத்தினை முன்னிட்டு கடந்த ஒருவாரமாக எனது Facebook சமூகவலைத்தள பக்கத்தில் பிரசுரித்த சில தகவல்களினை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
#அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், தாய்ப்பாலூட்டுவதன் மூலம் பெண்களுக்கு கருப்பைப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் மூன்றில் இரண்டு பங்கு தடுக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். (மூலம் – IANS).

#ஐக்கிய அமெரிக்காவின் பிறவுண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், தாய்ப்பாலூட்டுதல் குழந்தைகளின் மூளை வளர்ச்சியினை மேம்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.

அத்துடன் மொழி, அறியும் ஆற்றல், உணர்ச்சி செயல்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய மூளையின் பாகங்களில் மேலதிக வளர்ச்சியினையும் ஏற்படுத்துகின்றது.     
  
#ஐக்கிய அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், தாய்ப்பாலூட்டுவதன் மூலம் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் தடுக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். (மூலம் –ANI)

#யுனிசெப் தகவல்களின் பிரகாரம், குழந்தைகளின் உயிர்களைக் காப்பதில் அதிக வினைத்திறன், மற்றும் செலவு குறைந்த வழிமுறை தாய்ப்பாலூட்டுதல் ஆகும்.
முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் ஊட்டப்பட்ட குழந்தை, தாய்ப்பால் ஊட்டப்படாத குழந்தையினைவிடவும் 14 மடங்குகள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பு உண்டு.

#ஐக்கிய இராச்சியத்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், தாய்ப்பாலூட்டுவதன் மூலம் வாழ்கையின் பிற்பகுதியில் பெண்களுக்கு ஞாபக மறதி (அல்சைமர்  நோய்) ஏற்படுவதற்கான அபாயம் மூன்றில் இரண்டு பங்கு தடுக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர்.   
* உலக சுகாதார அமையத்தின் தகவல்களின் பிரகாரம், குழந்தை பிறந்து 1 மணித்தியாலத்திற்குள்ளும், குழந்தை பிறந்து முதல், 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மாத்திரமும், அத்துடன் குழந்தை 2 வயதினை அடையும்வரை இணை உணவுகளுடன், தாய்ப்பால் ஊட்டிவருவதன் மூலம் வருடாந்தம் 220, 000 குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
ஆனால் உலகில்,  40% ஆன குழந்தைகளுக்கே முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் ஊட்டப்படுகின்றது என்கின்றது உலக சுகாதார அமையம்.
#ஆகஸ்ட் 1 – 7, 2013 ⇨ உலக தாய்ப்பாலூட்டும் வாரம்

***

Monday, July 29, 2013

ஜுலை 29 ⇨ சர்வதேச புலி தினம்

வருடாந்தம் ஜூலை மாதம் 29ம் திகதி சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்படுகின்றது. கடந்த நூறாண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையானது 97% இனால் வீழ்ச்சியடைந்துள்ளது. உலக வனவிலங்குகள் நிதியத்தின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் உலகிலுள்ள புலிகள் எண்ணிக்கை 3200 மட்டுமே ஆகும்.  புலிகளுக்கு மனிதர்களைத் தவிர வேறு எதிரிகள் கிடையாது. உலகில் தற்சமயம் 6 வகையான புலி இனங்களே எஞ்சியுள்ளதாம். மேலும் 3 இனங்கள் அழிவடைந்துவிட்டதாம்.  மனிதச் செயற்பாடுகளின் காரணமாக குறிப்பாக வேட்டையாடுதல், வாழிடங்களினை அழித்தல் போன்றவற்றால் புலிகள் உலகில் அருகிவருகின்ற விலங்கினங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு புலிகளைப் பாதுகாப்பதனை நோக்கமாகக் கொண்டு சர்வதேச புலி தினமானது கொண்டாடப்படுகின்றது.

அந்தவகையில், புலிகள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் சில…..!

# ஆசியாவினைப் பூர்வீகமாகக் கொண்ட புலிகளின் விஞ்ஞானப் பெயர் பாந்தெரா டைகிரிஸ்(Panthera Tigris)

# தரைவாழ் மாமிசப் பட்சிகளில் துருவக் கரடிகள், பிறவுண் கரடிகளை அடுத்து மிகப் பெரிய விலங்கினம் புலிகள் ஆகும்.


# புலிகள் நன்றாக நீந்தக்கூடியவையாகும். இவைகளால் 6 கிலோமீற்றர் தூரம்வரை நீந்த முடியுமாம்.


# புலிகளின் கர்ஜனை பலமானதாகும், இவற்றின் கர்ஜனை ஒலி 2 கிலோமீற்றருக்கு அப்பாலும் கேட்கக்கூடியதாகும். இவை பொதுவாக தனது சொந்த வாழிடப் பிரதேசத்தின் பாதுகாப்புக்காகவும், தனது துணையினை இனப்பெருக்கத்திற்காக அழைக்கவுமே கர்ஜிக்கின்றனவாம்.


# ஒவ்வொரு புலியினதும் உடம்பிலுள்ள வரிகள், ஏனைய புலிகளின் வரிகளை ஒத்ததன்றாகும். அவை ஒவ்வொன்றும் வித்தியாசமானவையாகும்.

# புலிகளின் பற்கள் மனிதர்களின் பற்களினை விடவும் 10 மடங்கு பெரியவையாகும்.


# புலிகள் ஏனைய விலங்குகளைப் போன்றல்லாமல் தனியாகவே வேட்டையாடச் செல்கின்றன. புலிகள் பொதுவாக இரவு நேரத்திலேயே வேட்டையாடுகின்றன. புலிகளின் வேட்டை முயற்சிகளில் 90% ஆனவை தோல்வியிலேயே முடிகின்றதாம். சில வேளைகளில் புலிகள் வேட்டைக்காக ஓரிரவில் 10 – 20 கிலோமீற்றர் தூரம்வரையும் பயணம் செய்கின்றனவாம்.  புலிகள் தனது இரையினை பின்புறமாகவோ அல்லது பக்கவாட்டாகவோ மாத்திரமே வேட்டையாடுகின்றனவாம், அவை ஒருபோதும் முன்புறமாகச் சென்று வேட்டையாடுவதில்லையாம். புலிகள் ஓரிரவில் 20 – 35 கிலோகிராம்  இறைச்சியினை உட்கொண்டாலும், அவை பொதுவாக ஓர் நாளில் 15 – 18 கிலோகிராம்  இறைச்சியினையே  உட்கொள்கின்றனவாம். சிலவேளைகளில் புலிகள் தனது இரையினை முழுமையாக தின்றுமுடிப்பதற்கு  2 – 3 நாட்களினை எடுத்துக்கொள்கின்றதாம்.


#  புலிகள் மணிக்கு 40 மைல்கள் வேகத்தில் ஓடக்கூடியவையாகும், அத்துடன் ஒரே பாய்ச்சலில் 16 அடிக்கு அப்பால் காற்றில் பயணிக்கக்கூடியவையாகும்.


# புலி இனங்களில் சைபீரியன் புலிகளே மிகப்பெரிய புலியினமாகும், அத்துடன் சுமாத்ரா புலிகளே உலகில் மிகச்சிறிய புலியினமாகும். உலகில் அதிக எண்ணிக்கையில் வங்காளப் புலிகளும் (2500), குறைந்த எண்ணிக்கை தென் சீனப் புலிகளும் காணப்படுகின்றனவாம் (60 - 80).

# இந்தியா, மியன்மார், பங்களாதேஷ், தென் கொரியா, வியட்னாம், மலேசியா ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு புலி ஆகும்.

# உலகில் அதிகம் பேருக்கு பிடித்தமான விலங்கினம் புலியாகும் என்கின்ற ஓர் கருத்துக்கணிப்பு .


ஓகே… என்னைப்போல யார்யாருக்கெல்லாம் புலி பிடிக்கும்.


***

Sunday, July 28, 2013

கிரிக்கெட் சாதனைகளைப் புதுப்பித்த விராட் கோஹ்லி…!

சுற்றுலா இந்திய அணிக்கும், சிம்பாப்வே அணிக்குமிடையிலான 1வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் (24 ஜூலை) இந்திய அணியின் விராட் கோஹ்லியின் அதிரடிச் சதத்தின் உதவியுடன் இந்திய அணி 239 ஓட்ட இலக்கினை 6 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது.


தனது 109வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய விராட் கோஹ்லி பல்வேறு சாதனைகளினை படைத்தமை குறிப்பிடத்தக்கதாகும். அவையாவன;

QY சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் வேகமாக 15 சதங்களைக் கடந்த சாதனை; இந்த வரிசையில் முன்னிலை வகிப்போர்…!
> விராட் கோஹ்லி ⊶ இந்தியா ⇨ 106 இன்னிங்ஸ்
> சயீட் அன்வர் ⊶ பாகிஸ்தான் ⇨ 143 இன்னிங்ஸ்
> சவ்ரவ் கங்குலி ⊶ இந்தியா ⇨ 144 இன்னிங்ஸ்
> கிறிஸ் கெய்ல் ⊶ மே.தீவுகள் ⇨147 இன்னிங்ஸ்
> ஹெர்சல் கிப்ஸ் ⊶ தென்னாபிரிக்கா ⇨ 161 இன்னிங்ஸ்
> டெஸ்மன் கெய்ன்ஸ் ⊶ மே.தீவுகள் ⇨ 166 இன்னிங்ஸ்
> ரிக்கி பொண்டிங் ⊶ ஆஸி ⇨ 180 இன்னிங்ஸ்

> சச்சின் டெண்டுல்கர் ⊶ இந்தியா ⇨ 182 இன்னிங்ஸ்

குறிப்பு ⇨ தற்சமயம் இந்த சாதனையினை முறியடிக்ககூடிய வாய்ப்பு உள்ள வீரர் தென்னாபிரிக்காவின் ஹாசிம் அம்லா, இதுவரையும் 74 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 11 சதங்களை பூர்த்தி செய்துள்ளார்.


QY சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் வேகமாக 15 சதங்களைக் கடந்த சாதனை; இந்த வரிசையில் முன்னிலை வகிப்போர்…!
° விராட் கோஹ்லி ⊶ இந்தியா ⇨ 24 ஆண்டுகள் 261 நாட்கள்
° சச்சின் டெண்டுல்கர் ⊶ இந்தியா ⇨ 25 ஆண்டுகள்
° கிறிஸ் கெய்ல் ⊶ மே.தீவுகள் ⇨ 27 ஆண்டுகள் 42 நாட்கள்
° சவ்ரவ் கங்குலி ⊶ இந்தியா ⇨ 28 ஆண்டுகள் 99 நாட்கள்
° ரிக்கி பொண்டிங் ⊶ ஆஸி ⇨ 28 ஆண்டுகள் 329 நாட்கள்
° சயீட் அன்வர் ⊶  பாகிஸ்தான் ⇨ 29 ஆண்டுகள் 134 நாட்கள்

° ஹெர்சல் கிப்ஸ் ⊶ தென்னாபிரிக்கா ⇨ 30 ஆண்டுகள் 354 நாட்கள்


QY சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வேகமாக 15 சதங்களைக் கடக்க குறைந்த ஆண்டுகளை எடுத்துக்கொண்ட சாதனை; இந்த வரிசையில் முன்னிலை வகிப்போர்…!
è விராட் கோஹ்லி ⊶ இந்தியா ⇨ 4 ஆண்டுகள் 340 நாட்கள்
è கிறிஸ் கெய்ல் ⊶ மே.தீவுகள் ⇨ 7 ஆண்டுகள் 52 நாட்கள்
è சச்சின் டெண்டுல்கர் ⊶ இந்தியா ⇨ 8 ஆண்டுகள்127 நாட்கள்
è ஹெர்சல் கிப்ஸ் ⊶ தென்னாபிரிக்கா ⇨ 8 ஆண்டுகள் 131 நாட்கள்
è ரிக்கி பொண்டிங் ⊶ ஆஸி ⇨ 8 ஆண்டுகள் 270 நாட்கள்
è சவ்ரவ் கங்குலி ⊶ இந்தியா ⇨ 8 ஆண்டுகள் 278 நாட்கள்

è சயீட் அன்வர் ⊶ பாகிஸ்தான் ⇨ 9 ஆண்டுகள் 17 நாட்கள்

***
Blog Widget by LinkWithin