Sunday, May 30, 2010

உயிர் எடுக்கும் புகையிலை .........




ஒவ்வொரு வருடமும் மே மாதம் 31ம் திகதி உலக புகையிலை தடை தினமாகும். அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது .

என்னுடைய ஆக்கத்தினை பிரசுரித்த ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்கு நன்றிகள் .

நண்பர்களே இக்கட்டுரையினை பெரிதாக்கி வாசிக்கவும் ...



[ நன்றி - ஞாயிறு தினக்குரல் 30.05.2010]

***

Friday, May 28, 2010

தாயகத்தில் உலகக் கிண்ணம் வெல்லாத ஒரே அணி

உலகக் கிண்ண உதைபந்தாட்டம் தொடர்பான சுவையான தகவல்கள் ...........



 உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில், ஐரோப்பிய கண்டத்துக்கு வெளியே இதுவரை எந்தவொரு ஐரோப்பிய நாடும் சாம்பியனாகவில்லையாம்.

 இதுவரை 18 தடவைகள் நடைபெற்றுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் 6 நாடுகள் மாத்திரமே தாயகத்தில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

 உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில், இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற நாடுகளில் பிரேசில் நாடும் மாத்திரமே தாயகத்தில் சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 இதுவரை 18 தடவைகள் நடைபெற்றுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் அதிகளவான அரையிறுதிப் போட்டிகளில் [11 தடவைகள்] விளையாடிய நாடு ஜேர்மனி.~ 1934, 1954, 1958, 1966, 1970, 1974, 1982, 1986, 1990 வரை மே.ஜேர்மனி, 2002 & 2006 - ஒன்றிணைந்த ஜேர்மனியாகவும் பங்குபற்றியுள்ளன.

 இதுவரை 18 தடவைகள் நடைபெற்றுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் அதிகளவான இறுதிப் போட்டிகளில் [7 தடவைகள்~ 1950, 1958, 1962, 1970, 1994,1998 & 2002] விளையாடிய நாடு பிரேசில் & ஜேர்மனி (1954,1966,1974,1982,1986,1990~ மே.ஜேர்மனி,2002~ஒன்றிணைந்த ஜேர்மனி). இதில் பிரேசில் 5தடவைகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.~ 1958, 1962, 1970, 1994 & 2002.

 1958ம் ஆண்டு நடைபெற்ற கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் பெரிய பிரித்தானியாவின் அங்கத்துவ நாடுகளான இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து ஆகிய 4 நாடுகளும் பங்குபற்றின.


***

Wednesday, May 26, 2010

ATM மூலம் இனி தங்கமும் பெறலாம்

இதுவரை காலமும் ATM மூலம் பணம் பெறுவதனையே நாம் மேற்கொண்டு வந்தோம்/ அறிந்திருந்தோம்.

ATM மூலம் தங்கம் பெறும் இயந்திரமானது அபுதாபியிலுள்ள உயர்மட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றான அபுதாபி எமிரேட்ஸ் பலேஸ் ஹோட்டல் இந்தச் சேவையினை மே12, 2010 தொடக்கம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த ATM இயந்திரம் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒருமுறை தங்கச் சந்தை விலைகளினை கணனி முறை மூலம் இற்றைப்படுத்துகின்றதாம்.




இந்த ATM இயந்திரம் மூலம் 24கரட் கொண்ட 1கிராம், 5கிராம், 10கிராம் நிறையுடைய தங்கங்களை கட்டிகளாகவோ அல்லது நாணயங்களாகவோ பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தங்கம் பெறும் இந்த ATM இயந்திரமானது ஜேர்மன் தொழில்முயற்சியாளர் தோமஸ் கீஸ்ஸ்லெர் [TG Gold-Super-Markt நிறுவன இயக்குனர்] என்பவரின் கண்டுபிடிப்பாகும்.



ATM மூலம் தங்கம் பெறும் இயந்திரமானது 2009ம் ஆண்டு முதன்முதலில் ஜேர்மனியில் பரீட்சிக்கப்பட்டாலும், தோமஸ் அவர்கள் ATM மூலம் தங்கம் பெறும் இயந்திரத்தினை உத்தியோகபூர்வமாக ஸ்தாபிப்பதற்கு அபுதாபியினை தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் யாதெனில் தங்கத்துக்கு அங்கே அதிகரித்த கேள்வி நிலவிகின்றமையாலாகும்.



அடடா.....அபுதாபி சென்றால் ATM மூலம் தங்கம் பெறலாமே.... நீங்கள் தயாரா?..........

***
ATM தொடர்பான இன்னுமொரு செய்தி..........



உலகுக்கு ATM[The second first ATM] இயந்திரத்தினை அறிமுகப்படுத்தி வங்கிகளில் பணம் பெறுவதனை இலகுபடுத்திய ஜோன் ஷெப்பேர்ட் பர்ரோன் அவர்கள் தனது 84வது வயதில் ஸ்கொட்லாந்தில் அண்மையில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வங்கி வாடிக்கையாளர்களே ATM இயந்திரத்தில் உங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஜோன் ஷெப்பேர்ட் பர்ரோன் அவர்களை நினைவில்கொள்ளுங்கள்.

***
Blog Widget by LinkWithin