Friday, March 5, 2010

உலகினை தாக்கிய அதிசக்தி வாய்ந்த பூகம்பங்கள்





கடந்த 27ம் திகதி தென் அமெரிக்காவின் சிலி நாட்டினை 8.8 ரிச்டர் அளவில் தாக்கிய அதிசக்திவாய்ந்த பூகம்பத்தின் காரணமாக 700க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். சிலி நாட்டினை தாக்கிய பூகம்பத்தின் காரணமாக 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சிலி, ஜப்பான், ஹவாய் தீவுகள், ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகளினை பூகம்பத்தினை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமிப் பேரலைகள் தாக்கி சேதங்களை ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.



இந்தப் பூகம்ப மையமானது சிலியின் தலைநகர் சண்டியாகோவிலிருந்து 350 கிலோமீற்றர் தொலைவில் பசுபிக்பெருங்கடலில் மையம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சிலியில் ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த பூகம்பத்தின் காரணமாக பூமியின் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை கடந்த ஜனவரி மாதம் ஹெய்ட்டி நாட்டினை 7.0 ரிச்டர் அளவில் தாக்கிய பூகம்பத்தின் காரணமாக 250,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டமையும் இங்கே நினைவுகூரத்தக்கதாகும்.

உலகினை தாக்கிய அதிசக்தி வாய்ந்த [ரிச்டர் அளவின் பிரகாரம்] பூகம்பங்கள் தொடர்பான விபரங்கள் வருமாறு..........
1) மே22, 1960ம் ஆண்டு சிலி நாட்டின், வல்டிவா பிராந்தியத்தினை தாக்கிய 9.5 ரிச்டர் அளவிலான பூகம்பம்

2) டிசம்பர்26, 2004ம் ஆண்டு இந்துசமுத்திர பிராந்தியத்தினை தாக்கிய சுனாமி பேரலைக்கு காரணமான இந்தோனேசியாவின் வடசுமாத்திராவின் ஆழ்கடலில் ஏற்பட்ட 9.3 ரிச்டர் அளவிலான பூகம்பம்

3) மார்ச் 27, 1964ம் ஆண்டு அமெரிக்காவின் அலெஸ்காவினை தாக்கிய 9.2 ரிச்டர் அளவிலான பூகம்பம்

4) நவம்பர்4, 1952ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் கம்சட்காவினை தாக்கிய 9.0 ரிச்டர் அளவிலான பூகம்பம்

5) ஜனவரி26, 1700ம் ஆண்டு சஸ்கடியா வலயத்தினை தாக்கிய ~9.0 ரிச்டர் அளவிலான பூகம்பம்

6) ஜனவரி31, 1906ம் ஆண்டு கொலம்பியா-ஈக்குவடோரினை 8.8 ரிச்டர் அளவிலான பூகம்பம்

7) பெப்ரவரி 27,2010ம் ஆண்டு சிலியினை தாக்கிய 8.8 ரிச்டர் அளவிலான பூகம்பம்

8) பெப்ரவரி 4,1965ம் ஆண்டு அமெரிக்காவின் அலெஸ்கா, ரட் தீவுகளினை தாக்கிய 8.7 ரிச்டர் அளவிலான பூகம்பம்

9) நவம்பர்25, 1833ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமாத்திராவினை தாக்கிய 8.8-9.2 ரிச்டர் அளவிலான பூகம்பம்

10) நவம்பர்1, 1833ம் ஆண்டு போர்த்துக்கல் ராஜ்ஜியத்தின் லிஸ்பனை தாக்கிய ~8.7 ரிச்டர் அளவிலான பூகம்பம்


பூகம்பங்கள் தொடர்பான என்னுடைய முந்தைய பதிவு -உலகினை உலுக்கிய பூமியதிர்ச்சிகள்

***

Tuesday, March 2, 2010

ஒருநாள் போட்டியொன்றில் அதிக நான்கு ஓட்டங்களைப் பெற்றவர்கள்


கடந்த 24ம் திகதி குவாலியரில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான 2வது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் 200 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்து சர்வதேச ஒருநாள் போட்டியொன்றில் தனிநபர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் என்ற சாதனையைப் படைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 147பந்துகளை எதிர்கொண்டு 25 நான்கு ஓட்டங்கள் , 3 சிக்ஸர்கள் அடங்கலாக 200 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்தார். அந்தவகையில் ஒருநாள் போட்டியொன்றில் அதிக நான்கு ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் முதலிடத்தினை சச்சின் டெண்டுல்கர் பெற்றுக்கொண்டார். இந்த சாதனை முன்னர் சனத் ஜயசூரிய வசமிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். சனத், 2006 ஜூலை 4ம் திகதி அம்ஸ்ரல்வீனில் நெதர்லாந்து அணிக்கெதிராக 24 நான்கு ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒருநாள் போட்டியொன்றில் 20க்கும் அதிகமான நான்கு ஓட்டங்களைப் பெற்றவர்கள் தொடர்பான விபரங்கள்....

  • சச்சின் டெண்டுல்கர் 200*(147), 25- 4’s , இந்தியா v தென்னாபிரிக்கா, குவாலியூர்,2010
  • சனத் ஜயசூரிய 157(104), 24- 4’s, இலங்கை v நெதர்லாந்து , அம்ஸ்ரல்வீன், 2006/07
  • சயீட் அன்வர் 194(146), 22- 4’s, பாகிஸ்தான் v இந்தியா,சென்னை, 1997/98
  • ஹேர்சல் கிப்ஸ் 175(111), 21- 4’s, தென்னாபிரிக்கா v அவுஸ்ரேலியா,ஜோகனர்ஸ்பேர்க், 2006/07
  • விவ்வியன் ரிச்சர்ட்ஸ் 189*,21- 4’s, மே.தீவுகள் v இங்கிலாந்து,மன்செஸ்டர்,1984/85
  • பிரைன் லாரா 153(143), 21- 4’s, மே.தீவுகள் v பாகிஸ்தான், சார்ஜா,1993/94
  • சனத் ஜயசூரிய 152(99), 20- 4’s, இலங்கை v இங்கிலாந்து ,லீட்ஸ்,2006/07
  • சிவ். சந்திரபோல் 150(136), 20- 4’s, மே.தீவுகள் v தென்னாபிரிக்கா,கிழக்குலண்டன், 1999
  • சச்சின் டெண்டுல்கர் 186*(150), 20- 4’s , இந்தியா v நியூசிலாந்து, ஹைதராபாத்,1999/00
  • திலகரத்ன டில்சான் 160(124),20- 4’s ,இலங்கை v இந்தியா,ராஜ்கோட்.2009/10
***

Monday, March 1, 2010

உங்கள் உணர்வுகளினை நிறங்களால் நிரப்புங்கள்..



நீல வெளிச்சமானது நீண்ட காலமாக எதிர்மறையான விடயத்துடன் தொடர்புபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் பிரகாரம், நீல நிறமானது தன்னம்பிக்கையினையும், சந்தோச மட்டத்தினையும் உயர்த்திவிடுவதற்கு துணைபுரிகின்றது எனத் கண்டறிந்துள்ளனர். சசெக்ஸ் பல்கலைக்கழத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நிறங்களினையும், ஒளியினையும் வெளிக்காட்டி ஆய்வுகளினை சிலரிடம் மேற்கொண்டனர். அந்த ஆய்வின் பிரகாரம், நீல நிறமும், பச்சை நிறமும் ஆண்களிடம் சந்தோச உணர்வினை ஏற்படுத்துகின்றதாம், அதேவேளை நீலம், ஊதா, மற்றும் செம்மஞ்சள்[ஒரேஞ்ச்] ஆகிய நிறங்கள் பெண்களிடம் சந்தோச உணர்வினை ஏற்படுத்துகின்றதாம். மேலும் நீல நிறமும், சிவப்பு நிறமும் ஆண்களிடையே தன்னம்பிகை மட்டத்தினை மேம்படுத்துகின்றதாம், அதேவேளை நீல நிறமும், ஊதா நிறமும் பெண்களிடையே சிறந்த மதிப்பினை ஏற்படுத்துகின்றதாம்.

இந்த ஆய்வின் பிரகாரம், பிரகாசமான நிறங்கள் பொதுவாக நன்மையான விடயங்களினை வெளிக்காட்டுகின்றதாம்.


###########################################################


நிறங்கள் என்றவுடன் ஓவியங்கள் நம்முடைய நினைவுக்கு வரும். அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிக்காசோவின் கைவண்ணத்தில் உருவாகிய ஓவியங்களில் ஒன்று உங்களுக்காக பார்த்து ரசியுங்கள்...........

***

Blog Widget by LinkWithin