Wednesday, January 14, 2015

உழவுக்கு வந்தனம் செய்வோம்...!


  • உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் 
    தொழுதுண்டு பின்செல் பவர்.

    என்று உழவுத் தொழிலின் மகிமையினை போற்றுகின்றார் திருவள்ளுவர்.

    ஆம்…!
    உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் - யாவரும் உண்ணும் வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே, தமக்குரியராய் வாழ்கின்றவர்; மற்றெல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர் - மற்றையாரெல்லாம் பிறரைத் தொழுது, அதனால் தாம் உண்டு அவரைப் பின்செல்கின்றவர். ['மற்று' என்பது வழக்குப்பற்றி வந்தது. தாமும் மக்கட்பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி அவர் பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பது கருத்து) - பரிமேலழகர் உரை
    அந்தவகையில், நெற் பயிர்ச்செய்கை தொடர்பிலான சில சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக…!

  • உலகில் நெற்செய்கையானது கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்பட்டு வருகின்றது.


  • நெல்லின் குடும்பப் பெயர்  ஒறைசா சற்றைவா ஆகும்.  
  •  உலகில், பயிரிடக்கூடிய 14000 இற்கும் மேற்பட்ட நெல்லினங்கள் இருப்பினும், சில குறிப்பிட்ட இனங்களே(100+) தொடர்ந்து நிலைத்திருக்கின்றனவாம்.
  •  பாரம்பரிய முறையில் 1ஹெக்டெயரில் நெல் விதைப்பினை மேற்கொள்வதற்காக ஒரு விவசாயி, 80 கிலோமீற்றருக்கும் அதிகமாக தூரம் மாட்டுடன் நடக்கின்றானாம்.
  •  1கிலோகிராம் நெல்லினை உற்பத்தி செய்வதற்கு 5000 லீற்றர் நீர் தேவைப்படுகின்றதாம்.
  •  உலகில் மில்லியன் கணக்கான ஏழை மக்கள், தமது வருமானத்தில் 50 – 75 சதவீதத்தினை அரிசியின் நுகர்வில் செலவிடுகின்றனர்.

  • பெருமளவான ஆசிய மொழிகளில் உணவு, அரிசி ஆசிய சொற்கள் ஒரேமாதிரியான அர்த்தம் கொண்டவையாகும். ( +ம் :- சீன மொழியில் அரிசி, உணவு ஆகிய இரண்டும் குறிப்பது ஒரே சொல்லாகும்)
  •  திருமண நிகழ்வுகளின்போது புதுமணத் தம்பதியினரை அரிசியினால் ஆசிர்வதிப்பது குழந்தைப் பாக்கியம், அதிர்ஷ்டம், செல்வம் ஆகியவற்றுக்கான அடையாளமாகும்.

  •  அண்மைய ஆய்வுகளின் பிரகாரம், உலக வெப்பமயமாதலின் காரணத்தினால் அரிசி உற்பத்தியானது வீழ்ச்சியடைந்து செல்வதாக குறிப்பிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
  •  சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவகம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைந்துள்ளது. இது 1959ம் ஆண்டு, டிசம்பர் 9ம் நாள் ஆரம்பிக்கப்பட்டது.

***

நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைத் திருநாள் வாழ்த்துக்கள்!


பொங்கலோ பொங்கல்…!

தை பிறந்தால் வழி பிறக்கும்…!

***

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் சகோ…

Blog Widget by LinkWithin