11வது
உலகக்கிண்ண சுற்றுத்தொடரில் "B" குழுவிற்கான இன்றைய ஆட்டம் மே.தீவுகள் மற்றும்
சிம்பாப்வே அணிகளுக்கிடையே அவுஸ்திரேலியாவின் கென்பராவில் நடைபெற்றது.நாணயச்சுழற்சியில்
வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி50 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்
இழப்பிற்கு 372 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
மே.தீவுகள்
அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல் 147 பந்துகளில் 16 ஆறு ஓட்டங்கள்,
10 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக215 ஓட்டங்களினையும், மார்லன் சாமுவேல்ஸ் ஆட்டமிழக்காமல்
156 பந்துகளில் 03 ஆறு ஓட்டங்கள், 11 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக
133 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பதிலுக்கு
துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணிக்கு மழை காரணமாக 48 ஓவர்களில் 363 ஓட்டங்கள் வெற்றி
இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.ஆனால், 44.3 ஓவர்களில் சிம்பாப்வே அணி சகல விக்கட்களையும்
இழந்து 289 ஓட்டங்களை மாத்திரம் பெற்று டக்வேத் லூயிஸ் முறையில் 73 ஓட்டங்களினால் தோல்வியைத்
தழுவியது.
பல்வேறு
சாதனைகள் புதுப்பிக்கப்பட்ட இப்போட்டியில் நிகழ்த்தப்பட்ட சுவாரஷ்சியமான சில சாதனைகள்
வருமாறு;
கிறிஸ்
கெய்ல் பெற்ற 215 ஓட்டங்களே உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் பெறப்பட்ட முதலாவது
இரட்டைச் சதம் என்ற சாதனைக்குரியதாகும்.
இதற்கு
முன்னர், உலகக்கிண்ணப் போட்டியொன்றில் பெறப்பட்ட மிகச்சிறந்த தனிநபர் ஓட்டப்பெறுதி,1996ம்
ஆண்டு தென்னாபிரிக்க அணியின் கெரி கேர்ஸ்டன்,
ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கெதிராக ஆட்டமிழக்காமல் பெற்ற 188 ஓட்டங்களாகும்.
உலகக்கிண்ண
கிரிக்கெட் – அதிகூடிய தனிநபர் ஓட்டப்பெறுதிகளின் விபரம்;
கிறிஸ் கெய்ல்
215 மே.தீவுகள் V சிம்பாப்வே, 2015
கபில் தேவ்
175* இந்தியா V சிம்பாப்வே, 1983
கெரி கேர்ஸ்டன்
188* தென்னாபிரிக்கா V ஐக்கிய அரபு இராச்சியம், 1996
சவ்ரவ் கங்குலி
183* இந்தியா V இலங்கை, 1999
விவ் ரிச்சர்ட்ஸ்
181 மே.தீவுகள் V இலங்கை, 1987
விரேந்தர் சேவாக்
175 இந்தியா V பங்களாதேஷ், 2011
கிறிஸ்
கெய்ல் பெற்ற 215 ஓட்டங்கள், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றில் மே.தீவுகள்
வீரரொருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் என்ற சாதனைக்குரியதாகும்.இதற்கு முன்னர், சேர்
விவ் ரிச்சர்ட்ஸ் 1984ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக பெற்ற 189 ஓட்டங்களே சாதனையாகவிருந்தது.
மேலும்
இப்போட்டியில் கிறிஸ் கெய்ல் பெற்ற இரட்டைச் சதமானது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி
வரலாற்றில் பெறப்பட்ட 5வது இரட்டைச் சதம் என்பதுடன் இந்தியரல்லாத ஒருவர் பெற்ற முதலாவது
இரட்டைச் சதம் மற்றும் இந்திய மண்ணிற்கு வெளியே பெறப்பட்ட முதலாவது இரட்டைச் சதம் ஆகும்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டைச்சதம் அடித்தோர் விபரம்;
- சச்சின் டெண்டுல்கர்
200* (147) இந்தியா V தென்னாபிரிக்கா, 2010
- விரேந்தர் சேவாக்
219 (149) இந்தியா V மே.தீவுகள், 2011
- ரோஹிட் ஷர்மா
209 (158) இந்தியா V ஆஸி, 2013
- ரோஹிட் ஷர்மா
264 (173) இந்தியா V இலங்கை, 2014
- கிறிஸ் கெய்ல்
215 (147) மே.தீவுகள் V சிம்பாப்வே, 2015
கிறிஸ்
கெய்ல் 138 பந்துகளில் தனது இரட்டைச் சதத்தினை பூர்த்தி செய்தமை குறிப்பிடத்தக்கது.இதன்மூலம்,
அதிவேக இரட்டைச் சதம் பெற்ற வீரர் என்ற சாதனையினை அவர் படைத்தார்.இதற்கு முன்னர், இந்திய
அணியின் விரேந்தர் சேவாக் 140 பந்துகளில் இரட்டைச் சதம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப்போட்டியில்
மே.தீவுகள் அணி பெற்ற 372 ஓட்டங்களானது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவ்வணி
பெற்ற அதிகூடிய மொத்த ஓட்டங்களாகும்.
- 372-2 V சிம்பாப்வே,
கென்பரா, 2015
- 363-4 V நியூசிலாந்து,
ஹமில்டன், 2014
- 360-4 V இலங்கை,
கராச்சி, 1987
- 347-6 V சிம்பாப்வே,
புலவாயோ, 2003
- 339-4 V பாகிஸ்தான்,
அடிலெய்ட், 2005
மேலும்,
அவுஸ்திரேலிய மண்ணில் அணியொன்று பெற்ற அதிகூடிய மொத்த ஓட்டங்களாகவும் இந்த 372 ஓட்டங்கள்
விளங்குகின்றது.இதற்கு முன்னர், 2006ம் ஆண்டு இலங்கை அணிக்கெதிராக ஆஸி அணி பெற்ற
368-5 ஓட்டங்களே சாதனையாகவிருந்தது.
மே.தீவுகளின்
கிறிஸ் கெய்ல் மற்றும் மார்லன் சாமுவேல்ஸ் ஆகியோர் 2வது விக்கெட் இணைப்பாட்டமாகப் பெற்ற
சாதனைமிகு 372வது ஓட்டங்கள் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் மற்றும் உலகக்கிண்ண கிரிக்கெட்
ஆகியவற்றில் எந்தவொரு விக்கட்டிற்குமான மிகச்சிறந்த இணைப்பாட்ட ஓட்டப்பெறுதி ஆகும்.
ஒருநாள்
சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்த்தப்பட்ட அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டப்பெறுதிகளின் விபரம்;
- கிறிஸ் கெய்ல்,
மார்லன் சாம்வேல்ஸ் ->372 ஓட்டங்கள், 2வது விக்கெட், மே.தீவுகள் V சிம்பாப்வே, கென்பரா,
2015 (11வது உலகக்கிண்ணம்)
- சச்சின் டெண்டுல்கர்,
ராகுல் ராவிட் ->331 ஓட்டங்கள், 2வது விக்கெட், இந்தியா V நியூசிலாந்து, ஹைதராபாத்,
1999
- சவ்ரவ் கங்குலி,
ராகுல் ராவிட் -> 318 ஓட்டங்கள், 2வது விக்கெட், இந்தியா V இலங்கை, ரவுன்ரன்,
1999 (8வது உலகக்கிண்ணம்)
- உப்புல் தரங்க,
சனத் ஜயசூரிய -> 286 ஓட்டங்கள், 1வது விக்கெட், இலங்கை V இங்கிலாந்து, லீட்ஸ்,
2006
- உப்புல் தரங்க,
திலகரட்ன டில்சான் -> 282 ஓட்டங்கள், 1வது விக்கெட், இலங்கை V சிம்பாப்வே, பல்லேகல,
2011
கிறிஸ்
கெய்ல் இப்போட்டியில் 16 ஆறு ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தென்னாபிரிக்க
மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியில் தென்னாபிரிக்க வீரர் டேவிட் மில்லர்
அடித்த 09 ஆறு ஓட்டங்கள் சாதனையினை முறியடித்து, உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில்
அதிக ஆறு ஓட்டங்களை பெற்ற வீரர் என்கின்ற சாதனையினை அவர் தனதாக்கியதுடன், ஒருநாள் சர்வதேச
கிரிக்கெட் போட்டியொன்றில் அதிக ஆறு ஓட்டங்களை பெற்ற ரோஹிட் ஷர்மா, ஏபி டி வில்லியர்ஸ்
ஆகியோரின் சாதனையினையும் கெய்ல் சமன் செய்தார்.
v
கிறிஸ்
கெய்ல் -> 16 மே.தீவுகள் V சிம்பாப்வே, கென்பரா, 2015
v
ரோஹிட்
ஷர்மா-> 16 இந்தியா V ஆஸி, 2013
v
ஏபி
டி வில்லியர்ஸ் -> 16 தென்னாபிரிக்கா V மே.தீவுகள், 2015
இதேவேளை,
கிறிஸ் கெய்ல் விளாசிய 16 ஆறு ஓட்டங்களின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 400 ஆறு ஓட்டங்களை
(229-ODIs, 98-Tests, 87-T20s) கடந்த 2வது வீரர் என்ற சாதனையினை அவர் படைத்தார்.பாகிஸ்தான்
அணியின் சஹீட் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டில்அதிக ஆறு ஓட்டங்களை விளாசிய முதன்மை வீரராக
விளங்குகின்றார்.
சர்வதேச
கிரிக்கெட் அரங்கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில்
இரட்டைச் சதம், இருபதுக்கு இருபது போட்டியில் சதம் பெற்ற ஒரே வீரர் என்ற சாதனையினை
கிறிஸ் கெய்ல் நிலைநாட்டியுள்ளார்.
சர்வதேச
ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் மற்றும் சதம் பெறப்பட்ட ஒரேபோட்டி இப்போட்டி
ஆகும்.
***