Thursday, March 5, 2015

உலகக்கிண்ண சாதனைகளை புதுப்பித்த ஆஸி அணி…!


11வது உலகக்கிண்ண சுற்றுத்தொடரில் "A" குழுவிற்கான  நேற்றைய நாள் ஆட்டம் (மார்ச் 4, 2015) அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பினை தெரிவுசெய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட் இழப்பிற்கு சாதனைமிகு 417 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவுஸ்திரேலிய அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் 133 பந்துகளில் 5 ஆறு ஓட்டங்கள், 19 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 178 ஓட்டங்களினையும், ஸ்மித் 95 ஓட்டங்களினையும், மெக்ஸ்வெல் 39 பந்துகளில் 7 ஆறு ஓட்டங்கள், 6 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 88 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 37.3 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 142 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சாதனைமிகு 275 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது. பந்துவீச்சில் மிச்செல் ஜோன்சன் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கட்களை வீழ்த்தினார்.

பல்வேறு சாதனைகள் புதுப்பிக்கப்பட்ட இப்போட்டியில் நிகழ்த்தப்பட்ட சுவாரஷ்சியமான சில சாதனைகள் வருமாறு;
*அவுஸ்திரேலிய அணி பெற்ற 417 ஓட்டங்களே உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் அணியொன்று பெற்ற அதிகூடிய மொத்த ஓட்டங்கள் என்ற சாதனைக்குரியதாகும்.
இதற்கு முன்னர், 2007ம் ஆண்டு இந்திய அணி, பெர்முடா  அணிக்கெதிராக பெற்ற 413 ஓட்டங்களே சாதனையாக பதிவாகியிருந்தது.

உலகக்கிண்ண கிரிக்கெட் – அணியொன்று பெற்ற அதிகூடிய மொத்த ஓட்டங்களின் விபரம்;
  • அவுஸ்திரேலியா  417/6 V ஆப்கானிஸ்தான், 2015
  • இந்தியா 413/5 V பெர்முடா, 2007
  • தென்னாபிரிக்கா 411/4 V அயர்லாந்து, 2015
  • தென்னாபிரிக்கா 408/5 V மே.தீவுகள், 2015
  • இலங்கை 398/5 V கென்யா, 1996

* வோர்னர் பெற்ற 178 ஓட்டங்கள், உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் ஆஸி அணியின் வீரரொருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் என்ற சாதனைக்குரியதாகும். இதற்கு முன்னர், ஷேன் வொட்சன் 2007ம் ஆண்டு மே.தீவுகள் அணிக்கெதிராக பெற்ற 158 ஓட்டங்களே சாதனையாகவிருந்தது. மேலும், அவுஸ்திரேலிய மண்ணில் அவ்வணி வீரரொருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் என்ற சாதனையினையும் வோர்னர் தனதாக்கினார். இதற்கு முன்னர், மார்க் வோ 2001ம்ஆண்டு மே.தீவுகள் அணிக்கெதிராகப் பெற்ற 171 ஓட்டங்களே சாதனையாகவிருந்தது.

* ஆஸி அணி 275 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற வெற்றியின் மூலம், உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிகூடிய ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணியாக ஆஸி சாதனை படைத்தது.
உலகக்கிண்ண கிரிக்கெட் – அதிகூடிய ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளின் விபரம்;
  • 275 ஓட்டங்கள், ஆஸி V ஆப்கானிஸ்தான், 2015
  • 257 ஓட்டங்கள், இந்தியா V பெர்முடா, 2007
  • 257 ஓட்டங்கள், தென்னாபிரிக்கா V மே.தீவுகள், 2015
  • 256 ஓட்டங்கள், ஆஸி V நமீபியா, 2003
  • 243 ஓட்டங்கள், இலங்கை V பெர்முடா, 2007
  • 231 ஓட்டங்கள், தென்னாபிரிக்கா V நெதர்லாந்து, 2011

* ஆஸி அணியின் வோர்னர், ஸ்மித் ஜோடி 2வது விக்கட் இணைப்பாட்டமாக பெற்ற சாதனைமிகு 260 ஓட்டங்கள் மூலம் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸி அணியின் சார்பாக எந்தவொரு விக்கட்டிற்குமான மிகச்சிறந்த இணைப்பாட்ட ஓட்டப்பெறுதி ஆகும். இதற்குமுன்னர், 2009ம் ஆண்டு ரிக்கி பொண்டிங், ஷேன் வொட்சன் ஜோடி இங்கிலாந்து அணிக்கெதிராகப் பெற்ற 252* ஓட்டங்களே சாதனையாகவிருந்தது.


* ஆப்கானிஸ்தான் அணியின் தவ்லாத் ஸத்ரான் 10 ஓவர்களில் 101 ஓட்டங்களை வாரி வழங்கினார். இதன்மூலம், உலகக்கிண்ண கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர் ஒருவர் 100+ ஓட்டங்களை வழங்கிய 3வது சந்தர்ப்பம் இதுவாகும்.

  •  மார்டின் ச்நேட்டேன், 12-1-105-2, நியூசிலாந்து V இங்கிலாந்து, 1983
  • ஜேசன் ஹோல்டர், 10-2-104-1, மே.தீவுகள் V தென்னாபிரிக்கா, 2015
  • தவ்லாத் ஸத்ரான், 10-1-101-2, ஆப்கானிஸ்தான் V ஆஸி, 2015

* ஆஸி அணியின் கிளென் மெக்ஸ்வெல் 18 பந்துகளில் அரைச்சதத்தினை பூர்த்தி செய்தார். இதுஉலகக்கிண்ணப் போட்டிகளில் பெறப்பட்ட 3வது அதிக வேக அரைச்சதம் ஆகும்.

***

No comments:

Blog Widget by LinkWithin