உலகளாவியரீதியில் யானைகளினை பாதுகாப்பதன் அவசியம் தொடர்பாக மக்களிடையே
விழிப்புணர்வினை ஏற்படுத்தும்முகமாக உலக யானை தினம் கொண்டாடப்படுகின்றது.
உலகளாவியரீதியில் யானைகள் தத்தங்களுக்காகவும், ஏனைய செயற்பாடுகளுக்காகவும்
கொல்லப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன, மேலும் மனிதன் - யானை மோதல்களின் காரணமாகவும் யானைகள் கொல்லப்படும்
நிகழ்வுகளும் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன.
www.facebook.com/kkloganphotography
1980ம் ஆண்டளவில் ஆபிரிக்காவில் 1.2 மில்லியன் யானைகள் வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டிருந்தது, ஆனால் தற்சமயம் அண்ணளவாக 430,000 யானைகளே வாழ்வதாக கணிப்பிடப்படப்பட்டுள்ளது.
அந்தவகையில், யானைகள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக…!
- தரைவாழ் விலங்கினங்களில் மிகப்பெரிய விலங்கினமான யானைகளில் ஆபிரிக்க
யானைகள், ஆசிய யானைகள் என்ற இரண்டு வகையினங்கள் உண்டு. ஆசிய யானைகளை விடவும் ஆபிரிக்க
யானைகள் பெரியவையாகும்.
- ஆபிரிக்க
யானைகளில் ஆண், பெண் இரண்டு இனங்களுக்கும் கொம்புகள் உண்டு. ஆனால் ஆசிய யானைகளில் ஆண்
இனத்திற்கு மாத்திரமே கொம்பு உண்டு. யானைகள் தனது கொம்பினை நிலத்தினை தோண்டுவதற்கும்,
உணவினை கண்டறிவதற்கும் பயன்படுத்துகின்றன.
- தரைவாழ் உயிரினங்களில் மிகப்பெரிய மூளையினைக் கொண்டவையாக யானைகள்
விளக்குகின்றன. இதன் நிறை 5 கிலோகிராமிலும் அதிகமாகும்.
- யானைகள் பெரும்பாலும் நின்றுகொண்டே தூங்கும் தன்மை கொண்டவையாகும்.
யானை தூங்கும் போது அதன் எடை முழுவதையும் ஒவ்வொரு காலுக்கும்
மாற்றி மாற்றி வைத்துக்கொள்ளும்.
- விலங்கினங்களில் மிகநீண்ட கர்ப்ப காலத்தைக் கொண்ட விலங்கினம் யானை ஆகும். பெண் யானைகள் 22 மாதங்களின் பின் குட்டியினை பிரசவிக்கின்றது.
- யானையின் தும்பிக்கையில்
40,000 இற்கும் மேற்பட்ட தசைநார்கள் உண்டு.
- யானைகளுக்கு 24 பற்கள் உண்டு.
- யானைகள் தெளிவான
கண்பார்வையினைக் கொண்டிருக்காவிடினும், அவை மிகச்சிறந்த மோப்ப சக்தியினையும், கேட்டல்
சக்தியினையும் கொண்டவையாகும்.
- பாலூட்டிகளில்
துள்ளிக் குதிக்க முடியாத ஒரே உயிரினம் யானை ஆகும்.
- யானை ஒரே நேரத்தில் தனது தும்பிக்கையினால் 7.5 லீற்றர் நீரினை உறிஞ்சிக்கொள்ள முடியும்.
- ஐவரி கோஸ்ட், கென்யா, லாவோஸ், மொசாம்பிக், தாய்லாந்து ஆகிய நாடுகளின்
தேசிய விலங்கு யானை ஆகும்.
"லோகநாதனின் பகிர்வுகள்" பக்கத்தினை Facebookஇல்
தொடர…!
***