உலகில்
மிக உயரமான சிகரமான
எவரெஸ்ட் சிகரத்தில் (8848 மீற்றர்கள்
- 29029’) மனிதன் கால்
பதித்து இன்றோடு 61 வருடங்கள்
பூர்த்தியாகின்றன.
அந்தவகையில், எவரெஸ்ட்
சிகரம் தொடர்பிலான சுவாரஷ்சியமான
சில தகவல்களை உங்களுடன்
பகிர்ந்துகொள்கின்றேன்.
Y
எவரெஸ்ட் சிகரத்தில் முதன்முதலாக
ஏறியவர்கள் என்ற
பெருமைக்குரியவர்கள் நியூசிலாந்து
நாட்டினைச் சேர்ந்த
எட்மண்ட் ஹிலாரி மற்றும்
நேபாள நாட்டின் டென்சிங்
நோர்கேய் ஆகியோராவர். 1953ம்
ஆண்டு மே மாதம்
29ம் திகதி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
Ó
எவரெஸ்ட் சிகரத்தில்
ஏறிய மிக வயதான நபர், ஜப்பான் நாட்டினைச்
சேர்ந்த 80 வயதான யுசிரோ மியுரா. (2013 மே 29)
Y எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மிக வயது குறைந்த நபர், ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த 13 வயதான ஜோர்டான் ரோமிரோ. (2010 மே மாதம்
22)
Y எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மிக வயது குறைந்த பெண், இந்தியாவினைச் சேர்ந்த 13 வயதான மலவத்
பூர்ணா. (2014 மே 24)
Ó
எவரெஸ்ட் சிகரத்தில்
அதிக நேரத்தினை (21 மணித்தியாலங்கள்)
செலவழித்த சாதனையினை நேபாள நாட்டினைச்
சேர்ந்த பாபு சிரி ஷெர்பா 1999ம் ஆண்டு நிகழ்த்தினார்.
Y
எவரெஸ்ட் சிகரத்தில்
திருமணம் புரிந்த முதல் ஜோடி மொனி முலெபட்டி மற்றும் பெம் டொர்ஜீ ஷெர்பா ஆகியோராவர்.
2004ம் ஆண்டு நிகழ்ந்த இத்திருமணத்திற்கான
ஏற்பாடுகளை
அவர்களுடன்
எவரெஸ்ட் சிகரத்தில்
ஏறிய சக
மலையேறிகளுக்கு கூடத் தெரியாத வண்ணம் அவர்கள் இத்திட்டத்தினை இரகசியமாக வைத்திருந்தமை
குறிப்பிடத்தக்கதாகும்.
Y எவரெஸ்ட்
சிகரத்தினை முதன்முதலாக
அடைந்த பெண் என்ற
பெருமைக்குரியவர் ஜப்பான்
நாட்டினைச் சேர்ந்த
ஜுன்கோ தபெய் ஆவார்.
(1975ம் மே மாதம் 16)
Ó தந்தையினை
போன்று எவரெஸ்ட் சிகரத்தினை
முதன்முதலாக அடைந்த
மகன் என்ற பெருமைக்குரியவர் எட்மண்ட் ஹிலாரியின்
மகனான பீற்றர் ஹிலாரி
ஆவார் (1990 மே 10)
Ó எவரெஸ்ட்
சிகரத்தில் முதன்முதலாக
அடைந்த ஏறிய தந்தை
மற்றும் மகன் என்ற
பெருமைக்குரியவர்கள் ஜீன் ஜீன் நோயல் ரொசி மற்றும் ஜீன் நோயல் ரோச் மற்றும் ரோச் பெர்ரண்ட் அகா கா
சிவுலோன் ஆகியோராவர். (1990 அக்டோபர் 7)
Y எவரெஸ்ட்
சிகரத்தினை முதன்முதலாக
அடைந்த தாய் மற்றும்
மகள் என்ற பெருமைக்குரியவர்கள் அவுஸ்திரேலியாவினைச் சேர்ந்த
செரில் மற்றும் நிக்கி
வார்ட் ஆகியோராவர். (1990 மே 24)
தொடரும்…!
No comments:
Post a Comment