வனங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தவும்
மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் மார்ச் மாதம் 21ம்
திகதி உலக வன நாளாக கொண்டாடப்படுகின்றது.
அந்தவகையில், உலக வன வளங்கள் தொடர்பிலான சுவையான
தகவல்கள்…!
a உலகில் 4 பில்லியன் ஹெக்டேயர்கள்
நிலப்பரப்பிற்கு
காடுகள் காணப்படுகின்றன.
அதாவது, புவி மேற்பரப்பில்
31% வகிபாகத்திற்கு காடுகள் சூழ்ந்துள்ளன.
a உலகில் அதிக பரப்பளவில்
வன வளத்தைக்
கொண்ட கண்டம் தென் அமெரிக்க கண்டம் ஆகும். தனது நிலப் பரப்பில் அரைவாசிக்கும்
அதிகமான பங்கிற்கு இங்கே காடுகள் காணப்படுகின்றன.
a உலகில் குறைந்த பரப்பளவில்
வன வளத்தைக்
கொண்ட கண்டம் ஆசியாக் கண்டம் ஆகும். தனது நிலப் பரப்பில் 20% பங்கிற்கு இங்கே காடுகள் காணப்படுகின்றன.
a உலகில் அதிகளவில் வன வளங்களைக் கொண்ட நாடுகளாவன; ரஷ்யா, பிரேசில், கனடா, ஐக்கிய அமெரிக்கா, சீனா ஆகியனவாகும்.
உலகில் அரைவாசிக்கும்
அதிகமான காடுகள் இந்த நாடுகளிலேயே
காணப்படுகின்றன.
a உலக வனங்களில் 20% ஆனவை ரஷ்யாவிலேயே
காணப்படுகின்றன.
a புவி மேற்பரப்பில்
6% ஆன வகிபாகத்திற்கே ஈரவலயக் காடுகள் சூழ்ந்துள்ளன.
ஆனால், உலகிலுள்ள தாவர மற்றும் விலங்கினங்களில்
அரைவாசிக்கும்
அதிகமானவை ஈரவலயக் காடுகளிலேயே காணப்படுகின்றன.
a அந்தாட்டிக்கா
கண்டம் தவிர்ந்த ஏனைய அனைத்து கண்டங்களிலும்
ஈரவலயக் காடுகள் காணப்படுகின்றன.
a தென் அமெரிக்க ஈரவலயக் காடுகளில் 2,000 இற்கும் அதிகமான வண்ணத்துப்பூச்சி
இனங்கள் காணப்படுகின்றனவாம்.
a மத்திய ஆபிரிக்க ஈரவலயக் காடுகளில் 8,000 இற்கும் அதிகமான தாவர இனங்கள் காணப்படுகின்றனவாம்.
a உலகில் ஒவ்வொரு செக்கனுக்கும்,
கால்பந்தாட்ட
மைதானத்தின்
அளவான ஈரவலயக் காடுகள் அழிக்கப்படுகின்றன.
a உலகில் வருடாந்தம்
36 மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பிலான
இயற்கை காடுகள் அழிக்கப்படுகின்றன.
இது இங்கிலாந்து
நாட்டின் பரப்பளவினை
விடவும் பெரிதாகும்.
a காகிதாதி உற்பத்திற்காக
உலகில் 50% ஆன மரங்கள் அழிக்கப்படுகின்றன.
(World Resource Institute)
a உலகில் 80% இற்கும் அதிகமான காட்டுத் தீ மனிதனாலேயே
உருவாக்கப்படுகின்றன.
a உலகத்திற்கு
தேவையான 20% ஆன ஒட்சிசன் அமேசன் ஈரவலயக் காடுகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது.
a உலகில் 1.5 பில்லியனுக்கும்
அதிகமான மக்கள் தமது வாழ்வாரத்திற்கு
காடுகளிலேயே
தங்கியுள்ளனர்.
a உலகில் 300 மில்லியனுக்கும்
அதிகமான மக்கள் காடுகளிலே வாழ்கின்றனர்.
a உலக சனத்தொகையில்
மூன்றிலொரு
பங்கினர் தமது எரிபொருள் தேவையினை விறகுகள் மூலமே பூர்த்தி செய்துகொள்கின்றனர்.
***
2 comments:
ஒவ்வொரு வரியும் ஒவ்வொருவரும் உணர வேண்டிய கருத்துகளுடன் தகவலுக்கும் நன்றி...
நன்றிகள் சகோ…!
Post a Comment