2005ம் ஆண்டிலிருந்து, செப்டம்பர் மாத இறுதி ஞாயிற்றுக் கிழமையானது
உலக ஆறுகள் தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
உலகளாவியரீதியில் ஆறுகள், காலநிலை மாற்றங்கள், மாசடைதல் செயற்பாடுகள், மற்றும் கைத்தொழில் அபிவிருத்திகளின் காரணமாக பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளன. எனவே இவை தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதுடன், ஆற்று வளங்களினைப் பாதுகாப்பதன் அவசியம் தொடர்பாக மக்களின் கவனத்தினை ஈர்ப்பதே உலக ஆறுகள் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கமாகும்.
உலகளாவியரீதியில் ஆறுகள், காலநிலை மாற்றங்கள், மாசடைதல் செயற்பாடுகள், மற்றும் கைத்தொழில் அபிவிருத்திகளின் காரணமாக பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளன. எனவே இவை தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதுடன், ஆற்று வளங்களினைப் பாதுகாப்பதன் அவசியம் தொடர்பாக மக்களின் கவனத்தினை ஈர்ப்பதே உலக ஆறுகள் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கமாகும்.
அந்தவகையில், ஆறுகள் தொடர்பிலான சுவையான தகவல்கள் உங்களுக்காக…!
Y
உலகில் 1000 மைல்களினை விடவும் நீளமான 75 ஆறுகள் உள்ளன.
Y
உலகில் அதிக எண்ணிக்கையான நகரங்கள்
நதிகளை அண்டியே அமைந்துள்ளன. குறிப்பாக, உலகில் அதிக எண்ணிக்கையிலான
தலைநகரங்கள் அமைந்துள்ள நதிக்கரை டன்யூப் ஆகும். அவையாவன, ஆஸ்திரியா ⇨ வியன்னா, ஹங்கேரி ⇨ புடாபெஸ்ட், சேர்பியா ⇨ பெல்கிரேட், ஸ்லோவாக்கியா ⇨ பிராட்டிஸ்லாவா ஆகியனவாகும்.
வொல்கா நதியினை அடுத்து ஐரோப்பாவின் இரண்டாவது
மிகப்பெரிய நதி டன்யூப் ஆகும்.
Y உலகிலுள்ள பிரதான ஆறுகளில், அதிகளவான நீரினை கடலுக்கு வெளியேற்றுகின்ற பிரதான ஆறு அமேசன் நதியாகும். வெளியேற்றும் நீரானது உலகில் அதனை அடுத்துள்ள ஆறு பெரிய ஆறுகள் வெளியேற்றும் நீரின் அளவினை விடவும் அதிகமாகும். அமேசன் நதியாது, மழைக்காலங்களில் வினாடிக்கு சராசரியாக 300,000 கன மீட்டர் நீரை வெளியேற்றுகிறது. உலகில் உள்ள ஆறுகள் கடலில் கொண்டு சேர்க்கும் நீரில் 20% வகிபாகத்தினை அமேசன் நதி வகிக்கின்றது.
Y
ஆபிரிக்காவில்
2வது மிக நீளமான நதியாகவும்(2700 கிமீ), உலகில் 9வது மிக நீளமான நதியாகவும் விளங்கும் கொங்கோ நதியே உலகில் மிக ஆழமான நதியாகும். இதன் ஆழம் சராசரியாக 250 மீற்றர்(820 அடிகள்). மேலும், அமேசன் நதியினையடுத்து, அதிகளவான நீரினை கடலுக்கு வெளியேற்றுகின்ற நதி கொங்கோ நதியாகும்.
Y
உலகில் மிக நீளமான நதி நைல் நதி ஆகும். பெரும்பாலும் பிரதான ஆறுகள் தெற்கு, மேற்கு, அல்லது கிழக்கு நோக்கியே பாய்கின்றன, ஆனால் நைல் நதியானது தெற்கிலிருந்து வடக்கு நோக்கியே பாய்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Y
சீனாவின் துயரம் என்றழைக்கப்படுகின்ற மஞ்சள் நதியில் ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கின் காரணமாக 20ம் நூற்றாண்டிற்கு பிற்பாடு இன்றுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனராம்.
உலகிலுள்ள பிரதான கண்டங்களும், அவற்றிலுள்ள மிகப்பெரிய ஆறுகளும் வருமாறு;
è
ஆபிரிக்கா ⇨ நைல் நதி (6,650 கிமீ)
è
அவுஸ்திரேலியா
⇨ டார்லிங் நதி (3,720கிமீ)