Tuesday, May 28, 2013

மே மாதம் 28ம் திகதி ⊷ உலக பசி தினம்

ஒவ்வொரு வருடமும் மே மாதம் 28ம் திகதி உலக பசி தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 

உலகில் பசியினால் வாடுவோர் தொடர்பிலான தகவல்கள் சில…!


உலக மக்களில் 900 மில்லியன் முதல் 1 பில்லியன் வரையிலானோர் பசி, பட்டினியின் பிடியில் வாழ்வதாக ஐ.நா அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதாவது உலக மக்களில்(13.1 சதவீதமானோர்) எட்டுப் பேரில் ஒருவர் பசி, பட்டினியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாளொன்றில் உள்ளெடுக்க வேண்டியதென பரிந்துரைக்கப்பட்டுள்ள 2100 கலோரியினை விடவும் குறைவான போசணையினை உட்கொள்கின்றனர்.



எயிட்ஸ், மலேரியா, சயரோகம் ஆகியவை காரணமாக வருடாந்தம் இறப்போரினை விடவும் பசி, பட்டினியின் காரணமாக இறப்போரே அதிகமாகும்.  உலகில் நாளாந்தம் 25000+ பேர் பசி, பட்டினி, வறுமையின் காரணமாக இறக்கின்றனர்.

2010ம் ஆண்டு பசி, பட்டினியின் காரணமாக 7.6 மில்லியன் குழந்தைகள் அதாவது நாளொன்றுக்கு 20,000+ குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகில் பசியின் பிடியில் வாழ்வோரில் 98 சதவீதமானோர் குறைஅபிவிருத்தி நாடுகளிலேயே வாழ்கின்றனர். உலகில், பசியானது தாயிலிருந்து மகவுக்கு கடத்தப்படுகின்ற வழிமுறை தொடர்கின்றது. வருடாந்தம் 17 மில்லியன் குழந்தைகள் நிறை குறைந்து பிறக்கின்றனர், ஏனெனில் தாய்மார் போசணைக்குறைப்பாடு கொண்டவர்களாக காணப்படுகின்றமையாலாகும்.

அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாடுகளில், 15 குழந்தைகளில் ஒன்று பசியின் காரணமாகவே உயிரிழக்கின்றது.

உலகில் பசியின் பிடியில் வாழ்வோரில் 62.4 சதவீதமானோர் ஆசியா/தென் பசுபிக் நாடுகளிலேயே வாழ்கின்றனர்.

ஆசியா மற்றும் ஆபிரிக்க குழந்தைகளில் 20 சதவீதமானோர் தமது வயதிற்கேற்ற உடல் நிறையினை கொண்டிருக்கவில்லை.

2012ம் ஆண்டுக்கான உலக பசி சுட்டெண்ணின்(Global Hunger Index) பிரகாரம் பசி, பட்டினியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளாவன;
1) புரூண்டி                                  37.1                          
2) எதித்திரியா                             34.4
3) ஹெய்ட்டி                               30.8                         
4) எதியோப்பியா                        28.7
5) சாட்                                       28.3                          
6) கிழக்கு தீமோர்                       27.3
7) மத்திய ஆபிரிக்க குடியரசு       27.3          
8) கொமொரஸ்                          25.8
9) சியராலியோன்                      24.7                         
10) யெமன்                               24.3

15) இந்தியா                               22.9                        
43) இலங்கை                           14.4



***

Saturday, May 4, 2013

நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடும் இந்திய சினிமா….!


மே 03, 2013 அன்று இந்தியச் சினிமா தனது நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடியது.  அந்தவகையில் இந்தியச் சினிமாவுடன் தொடர்புடைய சுவாரஷ்சியமான தகவல்கள் சில உங்களுக்காக….!

மே 03, 1913 அன்று இந்திய சினிமாவின் முதல் முழு நீளத் திரைப்படமான "ராஜா ஹரிச்சந்திரா" வெளியாகியது. இந்திய திரைப்படத் துறையின் தந்தையென அழைக்கப்படும் தாதாசாஹேப் பால்கேயின் இயக்கத்தில் வெளியாகிய இத்திரைப்படமானது பேசாப் படமென்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியச் சினிமாவின் முதல் பேசும் திரைப்படம் "ஆலம் ஆரா" ஆகும், இத்திரைப்படம் அர்டேஷிரா மார்வன் இராணி அவர்களின் இயக்கத்தில் மார்ச் 14, 1931 இல் வெளியாகியது.

இந்தியச் சினிமாவின் முதல் வர்ணத் திரைப்படம் "கிசன் கன்யா" ஆகும், இத்திரைப்படம் மோடி கிட்வானி அவர்களின் இயக்கத்தில் 1937 இல் வெளியாகியது.


இந்தியச் சினிமாவில் அதிக பாடல்களைக் கொண்ட திரைப்படம் "இந்திர சபா" ஆகும், 71 பாடல்களைக் கொண்ட இத்திரைப்படம் ஜே. மதன் அவர்களின் இயக்கத்தில் 1932 இல் வெளியாகியது.

இந்தியச் சினிமாவின் மிக நீளமான திரைப்படம் "எல்ஓசி : கார்கில்" ஆகும், இத்திரைப்படம்  04 மணித்தியாலங்கள் 25 நிமிடங்கள் நீளமானதாம்.

இந்தியச் சினிமாவின் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் "தில்வாலே துல்ஹனியா லே ஜயங்கே" ஆகும், அக்டோபர் 20, 1955 வெளியாகிய இத்திரைப்படம் 700 வாரங்களைக் கடந்து ஓடியதாம்.

இந்தியச் சினிமாவில், முதன்முதலில் (1920) சினிமா சுவரொட்டிகள் மூலம் தனது திரைப்படத்தினை விளம்பரப்படுத்தியவர் பாவுராவ் பெயிண்டர் ஆவார். இவர் "வத்சலா ஹரன்" என்கின்ற தன்னுடைய திரைப்படத்திற்காகவே சினிமா சுவரொட்டிகளை வெளியிட்டார்.

இந்தியச் சினிமாவில், முதன்முதலில் (1920) சினிமா சுவரொட்டிகள் மூலம் தனது திரைப்படத்தினை விளம்பரப்படுத்தியவர் பாவுராவ் பெயிண்டர் ஆவார். இவர் "வத்சலா ஹரன்" என்கின்ற தன்னுடைய திரைப்படத்திற்காகவே சினிமா சுவரொட்டிகளை வெளியிட்டார்.

இந்தியச் சினிமா வரலாற்றில், சர்வதேச திரைப்பட விழாவில் (வெனிஸ்) திரையிடப்பட்ட (1937) முதல் திரைப்படம் "சண்ட் துகரம்" ஆகும்.

***
Blog Widget by LinkWithin