YouTube இணையத்தள வரலாற்றில் அதிக தடவைகள்
பார்வையிடப்பட்ட காணொளியாக
கங்ணம் நடன (Gangnam-Style) காணொளி (Video) சாதனை படைத்துள்ளது. தென்கொரியாவினைச் சேர்ந்த பிஷி
என்பவரே இந்த நடனத்தை பிரபல்யப்படுத்தியவர் ஆவார்.
கடந்த ஜூலை
மாதத்திலிருந்து நவம்பர் 24ம் திகதி வரை
806.28 மில்லியன் பார்வையாளர்கள் Gangnam-Style காணொளியை YouTube இணையத்தில் பார்வையிட்டுள்ளனர்.
இதற்கு
முன்னர் அதிகமானோர் பார்வையிட்ட காணொளியாக கனடிய இளமை நட்சத்திரம் Justin Bieber அவர்களின்
பேபி (Baby) என்கின்ற
காணொளியாகும். YouTube
இணையத்தில் Baby காணொளியை
803 மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.
MTV ஐரோப்பிய இசை
விருது விழாவில் மிகச்சிறந்த காணொளிக்கான விருதினை Gangnam-Style காணொளி பெற்றுக்கொண்டமை
குறிப்பிடத்தக்கதாகும்.
YouTube வரலாற்றில் அதிக Liked பெற்ற காணொளியாக Gangnam-Style விளங்குகின்றது. இது 5.4 மில்லியன் Liked பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்தில்
பதிவாகியுள்ளது.
YouTube வரலாற்றில்
அதிக தடவைகள் பார்வையிடப்பட்ட ஏனைய காணொளி வருமாறு;
3. ஜெனிபர் லோபெஸ் – ஒன் த ஃப்ளோர் (On the Floor) – 624 மில்லியன் பார்வையாளர்கள்
4. எமினெம் ரிஹானா – லவ் த வே யு லைய் (Love the Way You Lie) - 516 மில்லியன் பார்வையாளர்கள்
5. LMFAO – பார்ட்டி ரொக்
அன்தெம் (Party Rock Anthem) - 502 மில்லியன் பார்வையாளர்கள்
6. ஷக்கிரா- வகா வகா (Waka Waka) – 500 மில்லியன் பார்வையாளர்கள்
***
3 comments:
அறிந்தேன்... மிக்க நன்றி நண்பரே...
மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
தினபதிவு திரட்டியில் இன்று அட்ராசக்க -சி.பி. செந்தில்குமார் சிறப்பு பேட்டி
http://www.dinapathivu.com/
தினபதிவு திரட்டி
நன்றிகள் சகோ...
Post a Comment