Saturday, November 3, 2012

அமெரிக்காவினை புரட்டியெடுத்த சாண்டி சூறாவளி…!


Ø  அக்டோபர் மாதம் 22ம் நாள் ஜமைக்கா பிராந்தியத்தில் தோற்றம்பெற்ற சாண்டி சூறாவளி அக்டோபர் மாத  இறுதி நாட்களில் ஐக்கிய அமெரிக்காவினை தாக்கி பலத்த சேதாரங்களினை ஏற்படுத்தியது. சாண்டி சூறாவளியின் காரணமாக இதுவரை 100 இற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.



Ø  சாண்டி சூறாவளியின் காரணமாக, 12000 இற்கும் அதிகமான விமானப்பறப்புக்கள் தடைப்பட்டதோடு, நியூயோர்க் விமான நிலையமானது 2 நாட்கள் மூடப்பட்டது.



Ø  சாண்டி சூறாவளியின் காரணமாக, வரலாற்றில் 2வது சந்தர்ப்பமாக நியூயோர்க் பங்குச்சந்தையானது தொடர்ச்சியாக 2 நாட்கள் முடங்கிப்போயிருந்தது. இதற்கு முன்னர் 1888ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் ஏற்பட்ட காலநிலை தொடர்பிலான  நிலைவரங்களினால் நியூயோர்க் பங்குச்சந்தையானது தொடர்ச்சியாக 2 நாட்கள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



Ø  சாண்டி சூறாவளியின் காரணமாக, 88 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டனர்.


 Ø  108 வருட வரலாற்றில், நியூயோர்க் சுரங்கப்பாதைகளில் மிகமோசமான சேதங்கள் சாண்டி சூறாவளியின் காரணமாக ஏற்பட்டன.



1900ம் ஆண்டிலிருந்து இற்றைவரையான காலப்பகுதியில் அமெரிக்காவினை தாக்கி பாரியளவிலான பொருளாதார இழப்பினை ஏற்படுத்திய அட்லாண்டா சூறாவளிகள் வருமாறு...

Ø  கத்ரினா  2005ம் ஆண்டு 108 பில்லியன் அமெரிக்க டொலர்கள்
Ø  சாண்டி  2012ம் ஆண்டு 50+ பில்லியன் அ.டொலர்கள்
Ø  ஐக் 2008ம் ஆண்டு 29.5 பில்லியன் அ.டொலர்கள்
Ø  அன்ட்ரூ 1992ம் ஆண்டு 26.5 பில்லியன் அ.டொலர்கள்
Ø  வில்மா 2005ம் ஆண்டு 21 பில்லியன் அ.டொலர்கள்
Ø  ஈவன் 2004ம் ஆண்டு 18.8 பில்லியன் அ.டொலர்கள்
Ø  சார்லி 2004ம் ஆண்டு 15.1 பில்லியன் அ.டொலர்கள்
Ø  ரீட்டா 2005ம் ஆண்டு 12 பில்லியன் அ.டொலர்கள்
Ø  பிரான்செஸ் 2004ம் ஆண்டு 9.5 பில்லியன் அ.டொலர்கள்
Ø  அலிசென் 2001ம் ஆண்டு  9 பில்லியன் அ.டொலர்கள்
Ø  ஜீன்னே 2004ம் ஆண்டு  7.7 பில்லியன் அ.டொலர்கள்



***

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இயற்கைக்கு முன்னால் நாம் என்ன செய்ய முடியும்...? ...ம்... சாண்டி அதிக சண்டித்தனம் செய்து விட்டது...

ஆத்மா said...

சாண்டியின் பாதிப்புப் படங்கள் + தகவல்கள் பகிர்வுக்கு நன்றி சகோ

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...


நன்றிகள் சகோ.....

Blog Widget by LinkWithin