Wednesday, May 25, 2011

ஸ்ட்ரோபெரி பழங்களுக்கான அருங்காட்சியத்தினைக் கொண்ட நாடு……!!!


சுவாரஷ்சியமான பல்சுவைத்தகவல்களினைக் கொண்ட பதிவு உங்களுக்காக.......


 ஒபெக் அமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஒரே தென் அமெரிக்க நாடு வெனிசுவேலா ஆகும்.

 உலகிலுள்ள பிரதான ஆறுகளில், அதிகளவான நீரினை கடலுக்கு வெளியேற்றுகின்ற ஆறு அமேசன் நதியாகும்.

 கலஹாரி பாலைவனத்தில் அதிகளவான பரப்பளவினைக் தன்னகத்தே கொண்டுள்ள நாடு பொட்ஸ்வானா ஆகும்.

 குக் தீவுகளின் சிறப்பம்சம் யாது தெரியுமா ...... குக் தீவுகள் பெருமளவில் காடுகளினால் சூழப்பட்டுள்ளது.

 பறவைகளினைப்போல் உங்களினால் சாப்பிடமுடியுமா?.... ஏன் தெரியுமா?.... அதிகளவான பறவைகள் தனது உடல் நிறையில் இரு மடங்குக்கும் அதிகமான நிறையில் உணவினை நாளாந்தம் உட்கொள்கின்றனவாம்.

 1876ம் ஆண்டு உலகுக்கு தொலைபேசியினைக் அறிமுகப்படுத்தியவர் அலெக்ஸாண்டர் கிரஹம் பெல் என்பது நாம் அறிந்ததே... கிரஹம் பெல் தொலைபேசியினை அறிமுகப்படுத்திய முதல் மாதத்தில் ஆறு தொலைபேசிகள் மாத்திரமே விற்பனையாகியதாம்.

 உலகப் பிரசித்தி பெற்ற பழங்களாக ஸ்ட்ரோபெரி பழங்கள் விளங்குகின்றன. ஸ்ட்ரோபெரி பழங்களுக்கான அருங்காட்சியத்தினைக் கொண்ட நாடு எது?.... பெல்ஜியம்




 உலக சாதனை தகவல்களினை தன்னகத்தே உள்ளடக்கிய நூலாக கின்னஸ் புத்தகங்கள் விளங்குகின்றன. பொது நூலகங்களிலிருந்து அதிகமாக களவாடப்படுகின்ற நூலாகவும் கின்னஸ் புத்தகங்களே விளங்குகின்றனவாம்.

 உலக சனத்தொகையில் 13 சதவீதமானோர் பாலைவனங்களினை அண்மித்த பிரதேசங்களிலேயே வாழ்க்கை நடாத்துகின்றனர்.



 ஆண்களினைவிடவும் பெண்களே அதிகமான சுவை அரும்புக்களைக் கொண்டுள்ளனராம்.


***

Tuesday, May 24, 2011

கவனக்குறைவு கண்டுபிடிப்புக்கள்...... #02



கவனக்குறைவுகளால் அல்லது எதிர்பாராத சில நிகழ்வுகளினால் கூட பல நேரங்களில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்தவகையில், சமையல் சாதனமாகிய சூட்டடுப்பு(Microwave Oven) கண்டுபிடிக்கப்பட்டதும் இப்படித்தான்.


டாக்டர் பேர்சி ஸ்பென்சர்

பேர்சி ஸ்பென்சர் என்கின்ற ஆராய்ச்சியாளர்,2ம் உலக மகா யுத்த காலகட்டத்தில் மக்னேற்றோன்ஸ் குழாய்களின் உதவியுடன் ரேடார் தொகுதியின் செயல்பாட்டினை மேம்படுத்தும் நோக்குடன் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டார்.1946ம் ஆண்டு ஒரு நாள் மக்னேற்றோன்ஸ் குழாயுடன் பயணித்தபோது தனது பையினுள் காணப்பட்ட சொக்லெட் துண்டு உருகியிருப்பதனை அவதானித்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக தனது ஆராய்ச்சினை மேற்கொண்டு சூட்டடுப்பினைக் கண்டுபிடித்தார்.

***

Tuesday, May 17, 2011

பறவை உருவில் காணப்படுகின்ற வினோத தாவரங்கள்.....

 தென் ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் சுதேச தாவரங்களாகக் காணப்படுகின்ற "Strelitzia reginae" தாவர இனங்கள் பார்ப்பதற்கு பறவையின் தோற்றத்தில் காணப்படுகின்றன.





"சுவர்க்கத்தின் பறவைகள்"ன்றழைக்கப்படும் தாவரங்கள்



 ஓர்கிட் தாவரங்கள் மிகச்சிறிய விதைகளினைக் தன்னகத்தே கொண்டுள்ளன. 1.25 மில்லியனுக்கும் அதிகமான ஓர்கிட் விதைகளினை ஒன்றுசேர்க்கின்றபோது கிடைக்கும் நிறை எவ்வளவு தெரியுமா?..... 01கிராம்தான்




 இவ்வுலகிலுள்ள 200,000க்கும் மேற்பட்ட பூக்களின் வகைகளில் மிகச்சிறிய பூவாக "டக்வீட்"(Duckweed) பூவே விளங்குகின்றது. இதனை நுணுக்குக்காட்டியின்மூலம் மாத்திரமே பார்க்கமுடியும்.


***

Monday, May 16, 2011

கலண்டரின் தனது பெயரினையும், தனது அன்னையின் பெயரினையும் சேர்த்துக்கொண்ட ஜனாதிபதி.......



துர்க்மெனிஸ்தான் நாட்டினை ஆட்சிசெய்த ஜனாதிபதி சபர்முராட் நியாஸோவ் (19 பெப்ரவரி 1940 - 21 டிசம்பர் 2006) உலகத்தில் ஆட்சிசெய்த சர்வாதிகாரிகளில் சிறப்பிடம் பெறுகின்றார். இவரின் ஆட்சிக்காலத்தில் துர்க்மெனிஸ்தான் நாட்டில் எந்தவிதமான தேவாலயங்களும் காணப்படவில்லை. ஏனெனில் இவரின் கட்டளையின் பிரகாரம் தேவாலயங்கள் அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

ஒவ்வொருவருடமும் தனது ஜனாதிபதி பதவியினை இராஜினாமா செய்துகொள்வாராம், ஆனாலும் அந்நாட்டின் காங்கிரஸ் சபையானது இவரிற்கு ஆட்சியதிகாரத்தினை தொடர்வதற்கு அனுமதிவழங்குமாம். கலண்டரில் ஜனவரி மாதத்திற்குப் பதிலாக இவர் தனது பெயரான "துர்க்மென்வாஷி"யினை இட்டுக்கொண்டதுடன், ஏப்ரல் மாதத்திற்குப் பதிலாக தனது அன்னையாரின் பெயரினை இணைத்துக்கொண்டார். இவர் தன்னைத்தானே துர்க்மெனிஸ்தான் தேசத்தின் தந்தையாக பிரகடனப்படுத்திக்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் .


*****-------*******--------------**********

படுதோல்வியினைத் தழுவிய கருணாநிதி.....



தமிழக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஜெயலலிதா தலைமையிலான அ.திமு.க ஆட்சியதிகாரத்தினை கைப்பற்றிக்கொண்டது. கலைஞர் தலைமையிலான தி.மு.க படுதோல்வியினை தழுவிக்கொண்டது.

ஜெயா தமிழக முதல்வராக இன்று பதவி ஏற்கின்றார் .


***

வாசித்துவிட்டீர்களா.....?

தமது தங்கப் பதக்கங்களுக்கு பாதுகாப்புத் தேடிய நோபல் பரிசு வெற்றியாளர்கள்........

***

Wednesday, May 11, 2011

தமது தங்கப் பதக்கங்களுக்கு பாதுகாப்புத் தேடிய நோபல் பரிசு வெற்றியாளர்கள்........

2ம் உலக மகா யுத்த காலகட்டத்தில் ஜேர்மனி தேசத்தினை ஹிட்லர் தலைமையிலான நாசிப் படையினர் ஆட்சி செய்தபோது ஹிடலரின் தொல்லைகளினால் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் தமது நோபல் பரிசுப் பதக்கங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கருதி ஜேர்மனியினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மக்ஸ் வொன் லோவ், மற்றும் ஜேம்ஸ் பிரான்ங் ஆகியோர் தமது நோபல் பரிசுப் பதக்கங்களினை ஹிட்லரின் நாசிப் படையினருக்குப் பயந்து சட்டவிரோதமாக டென்மார்க் நாட்டினைச் சேர்ந்த பெளதிகவியலாளர் நீல்ஸ் பொஹ்ர் அவர்களிடம் கையளித்தனர்.

மக்ஸ் வொன் லோவ்



ஆனால் 2ம் உலக மகா யுத்த காலகட்டத்தில் ஜேர்மனியானது, டென்மார்க் நாட்டினை ஆக்கிரமித்து தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தபோது மக்ஸ் வொன் லோவ், மற்றும் ஜேம்ஸ் பிரான்ங் ஆகியோரின் நோபல் பரிசுப் பதக்கங்களினை ஜேர்மனிய நாசிப் படையினரிடமிருந்து பாதுகாப்பதற்கு நீல்ஸ் பொஹ்ர் தீவிர கரிசனை காட்டினார். தனது ஆய்வுகூடத்தில் பணியாற்றிய ஹங்கேரி நாட்டினைச் சேர்ந்த ஜோர்ஜ் டி ஹெவிஸ் அவர்களின் ஆலோசனைக்கமைய நோபல் பரிசு தங்கப் பதக்கங்களினை Aqua regia அமிலத்திராவகத்தில் கரைக்க முடிவெடுத்தார். (Aqua regia திராவகம் என்பது தங்கத்தைக் கரைக்கப் பயன்படுத்தப்படும் நைதரிக்கமிலம் + ஐதரோகுளோரிக் அமிலம் ஆகிய அடர் அமிலங்களின் கலவை ஆகும்)

நோபல் பரிசுப் பதக்கங்கள் மறைத்துவைக்கப்பட்ட அமிலத்திராவகப் போத்தலானது, ஏனைய அமிலத் திராவகப் போத்தல்களோடு போத்தலாக அலுமாரித்தட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜேம்ஸ் பிரான்ங்



2ம் உலக மகா யுத்தத்தின் பின்னர், அமிலத் திராவகத்தில் கரைந்திருந்த நோபல் பரிசு தங்கப் பதக்கங்கள் நோபல் பரிசு அமையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு மாற்றீடாக நோபல் பரிசு அமையம், மாதிரிப் பதக்கங்களினை மக்ஸ் வொன் லோவ் மற்றும் ஜேம்ஸ் பிரான்ங் ஆகியோருக்கு வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மக்ஸ் வொன் லோவ் 1914ம் ஆண்டு பெளதிகவியல் துறையில் நோபல் பரிசினை வெற்றி கொண்டவர் என்பதுடன் ஜேம்ஸ் பிரான்ங் 1925ம் ஆண்டு பெளதிகவியல் துறையில் நோபல் பரிசினை வெற்றி கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நீல்ஸ் பொஹ்ர் 1922ம் ஆண்டு பெளதிகவியல் துறையில் நோபல் பரிசினை வெற்றி கொண்டவர் என்பதுடன் ஜோர்ஜ் டி ஹெவிஸ் 1943ம் ஆண்டு இரசாயனவியல் துறையில் நோபல் பரிசினை வெற்றி கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

***

Friday, May 6, 2011

கவனக்குறைவு கண்டுபிடிப்புக்கள்...... # 01




கவனக்குறைவுகளால் அல்லது எதிர்பாராத சில நிகழ்வுகளினால் கூட பல நேரங்களில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்திருக்கின்றன. உலகத்திலுள்ள மில்லியன்கணக்கானோரின் உயிரினைப் பாதுகாத்த உயிர்காக்கும் மருந்தான பென்சிலின் மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டதும் இப்படித்தான்.

அலெக்ஸாண்டர் பிளெமிங்கிடம் உதவியாளராக ஒரு பெண்மணி வேலை பார்த்து வந்தார். ஒருநாள் அந்தப் பெண்மணி ஞாபக மறதியில் ஆய்வு கூடத்தில் வைத்திருந்த உணவை மூடிவைக்க மறந்து சென்றுவிட்டார். மறுநாள் இந்த உணவில் பக்ரீரியா நன்றாக வளர்ந்திருப்பது தெரியவந்தது. இந்த பக்ரீரியாவை ஆராய்ந்துதான் அலெக்ஸாண்டர் பிளெமிங், நுண்ணுயிர்களை அழிக்கவும், நோய்த்தொற்றுக்களைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்படும் மருந்து வகையான பென்சிலின் மருந்தினைக் கண்டுபிடித்தார்.


***

Monday, May 2, 2011

உலகில் மிக நீளமான கிராமத்தின் பெயர்.......



உலகில் மிக நீளமான கிராமத்தின் பெயர் Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwyll llantysiliogogogoch ஆகும். இந்தக் கிராமமானது வேல்ஸ்சில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் கிராமத்தின் பெயரானது 3வது மிக நீளமான புவியியல் பெயராகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


++++++++++++++--------------------------++++++++

விடை பெற்றது "டிஸ்கவரி" விண்கலம்



ஐக்கிய அமெரிக்காவின் "டிஸ்கவரி" விண்கலம் தனது இறுதி விண்வெளிப் பயணத்தினை கடந்த மார்ச் 9ம் திகதியுடன் நிறைவுசெய்து கொண்டது. 1984ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் திகதி தனது முதல் விண்வெளிப் பயணத்தினை மேற்கொண்ட அட்லாண்டிஸ் விண்கலம் 39 விண்வெளிப் பயணங்களையும், 148,221,675 மைல்களுக்கும் அதிகமான தூரம் பயணம் செய்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அதிகமான விண்வெளிப் பயணங்களை மேற்கொண்ட விண்கலமாக "டிஸ்கவரி" விண்கலம் வரலாற்றில் விளங்குகின்றது.

விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஹபிள் தொலைநோக்கியினை விண்வெளிக்கு எடுத்துச்சென்றதும் இந்த "டிஸ்கவரி" விண்கலமே ஆகும்.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவு; விடை பெற்றது "அட்லாண்டிஸ்" விண்கலம்

------------------+++++++++++++++++++++++---------

விசேட செய்தி........



அல் ஹைடா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் பலியானதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சற்றுமுன் வெள்ளை மாளிகையிலிருந்து அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தலை நகர் இஸ்லாமாபாத்துக்கு வெளியே உள்ள மாளிகை ஒன்றின்மீது நடத்தப்பட்ட அதிரடித்தாக்குதலிலேயே பின் லேடன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது. பின் லேடனின் உடலினையும் அமெரிக்கப்படையினர் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது... 2001 செப்டம்பர் 11ல் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டமையினை தொடர்ந்து ஒசாமா பின்லேடன் அமெரிக்காவினால் மிகவும் தேடப்படும் ஒருவராக விளங்கினார்.

***
Blog Widget by LinkWithin