Wednesday, May 25, 2011
ஸ்ட்ரோபெரி பழங்களுக்கான அருங்காட்சியத்தினைக் கொண்ட நாடு……!!!
சுவாரஷ்சியமான பல்சுவைத்தகவல்களினைக் கொண்ட பதிவு உங்களுக்காக.......
ஒபெக் அமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஒரே தென் அமெரிக்க நாடு வெனிசுவேலா ஆகும்.
உலகிலுள்ள பிரதான ஆறுகளில், அதிகளவான நீரினை கடலுக்கு வெளியேற்றுகின்ற ஆறு அமேசன் நதியாகும்.
கலஹாரி பாலைவனத்தில் அதிகளவான பரப்பளவினைக் தன்னகத்தே கொண்டுள்ள நாடு பொட்ஸ்வானா ஆகும்.
குக் தீவுகளின் சிறப்பம்சம் யாது தெரியுமா ...... குக் தீவுகள் பெருமளவில் காடுகளினால் சூழப்பட்டுள்ளது.
பறவைகளினைப்போல் உங்களினால் சாப்பிடமுடியுமா?.... ஏன் தெரியுமா?.... அதிகளவான பறவைகள் தனது உடல் நிறையில் இரு மடங்குக்கும் அதிகமான நிறையில் உணவினை நாளாந்தம் உட்கொள்கின்றனவாம்.
1876ம் ஆண்டு உலகுக்கு தொலைபேசியினைக் அறிமுகப்படுத்தியவர் அலெக்ஸாண்டர் கிரஹம் பெல் என்பது நாம் அறிந்ததே... கிரஹம் பெல் தொலைபேசியினை அறிமுகப்படுத்திய முதல் மாதத்தில் ஆறு தொலைபேசிகள் மாத்திரமே விற்பனையாகியதாம்.
உலகப் பிரசித்தி பெற்ற பழங்களாக ஸ்ட்ரோபெரி பழங்கள் விளங்குகின்றன. ஸ்ட்ரோபெரி பழங்களுக்கான அருங்காட்சியத்தினைக் கொண்ட நாடு எது?.... பெல்ஜியம்
உலக சாதனை தகவல்களினை தன்னகத்தே உள்ளடக்கிய நூலாக கின்னஸ் புத்தகங்கள் விளங்குகின்றன. பொது நூலகங்களிலிருந்து அதிகமாக களவாடப்படுகின்ற நூலாகவும் கின்னஸ் புத்தகங்களே விளங்குகின்றனவாம்.
உலக சனத்தொகையில் 13 சதவீதமானோர் பாலைவனங்களினை அண்மித்த பிரதேசங்களிலேயே வாழ்க்கை நடாத்துகின்றனர்.
ஆண்களினைவிடவும் பெண்களே அதிகமான சுவை அரும்புக்களைக் கொண்டுள்ளனராம்.
***
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
உங்கள் அறிமுகத்துக்கு மிக்க நன்றிகள். உங்கள் பணி தொடர வாழ்த்துகின்றேன்.........
Post a Comment