உலகில்,பொதுவாக இரும்பினாலான சைக்கிள்களே பாவனையிலுள்ளன என்பது நாம் அறிந்த தகவலே. ஆனால் மூங்கில் சைக்கிள்கள் ஆபிரிக்க நாடொன்றில் மிகப்பிரபல்யம் பெற்றுவருகின்றன என்பது ஆச்சரியமான தகவலாகும். ஆம்.... அந்த ஆபிரிக்க நாடு எது தெரியுமா?.... கானா தேசம்தான்...
இரும்பு சைக்கிள்களிலே பயணம்செய்து பழக்கப்பட்ட நமக்கு மூங்கில் சைக்கிள்களில் பயணம்செய்வது ஒரு புதுவித அனுபவம்தான்.
++++++++++++++++-----------++++++++++++++++--
கார்கள் தொடர்பிலான சுவையான தகவல்கள்
1886ம் ஆண்டு ஜனவரி மாதம், 29ம் திகதி உலகத்தையே மாற்றியமைத்த நாளாகக் கருதப்படுகிறது. 125 வருடங்களுக்கு முன் ஜேர்மனி நாட்டினைச் சேர்ந்த கார்ள் பென்ஸ் உலகின் முதல் மோட்டார் வாகனத்தைப் புதிதாக கண்டுபிடித்ததற்கான தனது பட்டயத்தை இத்தினத்திலேயே சமர்ப்பித்தார்.

உலகில் மோட்டார் வாகன தயாரிப்பு தொழிற்துறையில் ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த ஹென்ரி போர்ட் சிறப்பிடம் வகிக்கின்றார். ஹென்ரி போர்ட், ஆரம்ப காலங்களில் Model T Fords மோட்டார் வாகனங்கள் அதிகளவில் கறுப்பு நிறங்களிலேயே உற்பத்தி செய்யப்பட்டது. ஏனெனில் அந்த காலகட்டத்தில் கிடைத்த வர்ணங்களில் கறுப்பு நிறமே மிகவிரைவில் உலரும் தன்மையினை கொண்டிருந்ததனாலாகும்.
***
2 comments:
மூங்கில் சைக்கிள் ஈசியா உடைஞ்சுடுமே, எளிதா நெருப்பு பிடிச்சுக்கும். கார் கண்டுபிடிச்சதாலதான் நாம இன்னைக்கு நமது சுற்றுப் புற சூழலை நன்ஜாக்கிவிட்டு வழி தெரியாமல் அழுகிறோம்.
நண்பரே நன்றிகள் .......
Post a Comment