12வது உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜெர்மனி, பெர்லினில் 15/08/2009 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த 16ம் திகதி நடைபெற்ற ஆண்களுக்கான 100m இறுதிப்போட்டியில் ஜமைக்கா நாட்டை சேர்ந்த ஒலிம்பிக் உலகசாதனை வீரர் உசைன்போல்ட் 9.58செக்கன்களில் ஓடிமுடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். கடந்த 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் 100m ஓட்டப்போட்டியில் 9.69 செக்கன்களில் படைக்கப்பட்ட தன்னுடைய சாதனைமிகுந்த ஓட்டப்பெறுதியை முறியடித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
உலக சாம்பியன்ஷிப் 100mபோட்டியில் அமெரிக்க முன்னணி வீரர் டைசன் கே இரண்டாம் இடத்தையும் (9.71s),முன்னாள் உலக சாதனை வீரர் அசபா பவல் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர் மூன்றாம் இடத்தையும்(9.84s) பெற்றனர்.
100m, 150m, 200m ஆகிய உலக சாதனைகளையும் உசைன் போல்ட் தம்வசம் வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த உலகத்தில் மிக வேகமான மனிதர் என்றால் அது உசைன் போல்ட் தான் எனலாம்.
இந்த உலக சாதனை பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகலாம்.....! பொறுத்திருந்து பார்ப்போம் ........!
இந்த உலக சாதனை பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகலாம்.....! பொறுத்திருந்து பார்ப்போம் ........!
No comments:
Post a Comment