சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிரபல நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் மற்றும் மிர்கா வவ்ரினெக் தம்பதியினர் இரட்டைப் பெண் பெற்றோர்களாக மாறிவிட்டனர்.Charlene Riva மற்றும் Myla Rose ஆகிய இரட்டைப் பெண் குழந்தைகள் ஜூலை23 ,2009 அன்று சுவிட்சர்லாந்து நாட்டில் பிறந்ததாக ரொஜர் பெடரர் தனது இணையத்தளத்திலும் Facebook பக்கத்திலும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தாயும் குழந்தைகளும் நலமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற விம்பிள்டன் போட்டிகளை பார்வையிட மிர்கா வரவில்லை.ஆனாலும் மிகக்கடுமையாக 5 சுற்றுகள் வரை நடைபெற்ற ரொஜர் பெடரர் மற்றும் அண்டி ரொடிக் இடையிலான விம்பிள்டன் இறுதிப்போட்டியை மிர்கா அனுசரித்து அமர்ந்திருந்து பார்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 6வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வெற்றி கொண்டதுடன் சாதனைமிகு 15வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பெடரர் 2000ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் மிர்காவை சந்தித்து காதல் கொண்டதுடன் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் முடித்தமையும் குறிப்பிடத்தக்கது. ரொஜர் பெடரர் ஆகஸ்ட்10ம் திகதி மொன்றியலில் நடைபெறவுள்ள Rogers கிண்ண போட்டியிலும் அதனைத் தொடந்து ஆகஸ்ட்31ம் திகதி ஆரம்பமாகவுள்ள அமெரிக்க ஓபன் போட்டியில் தனது 6வது நேரடி பட்டத்தை எதிர்பார்த்தும் ஒரு தந்தையாக விளையாடவுள்ளார். தந்தையாகிய பின்னர் ரொஜர் பெடரரின் பெறுபேறுகள் எவ்வாறு அமைகின்றன என பொறுத்திருந்து பார்ப்போம்.........
***

2 comments:
நான் உங்கள் வலைப்பதிவை பார்த்திருக்கின்றேன், நீங்கள் எனக்கு உதவிசெய்ய முடியுமா?
என்ன வகையான உதவி நண்பரே ? என்னிடமும் உதவியா மகிழ்ச்சியாக இருக்கிறது.
நன்றிகள்
அன்புடன் லோகநாதன்
Post a Comment