அமெரிக்காவின் பென்சில்வேனியா,இந்தியானா மற்றும் ஒஹையோ ஆகிய மாநிலங்களில் சுமார் 2லட்சம் அமிஷ் மக்கள் வசித்து வருகின்றனர். சுவிஸ்சர்லாந்து மற்றும் ஜெர்மன் வம்சாவளியை சேர்ந்த அமிஷ் மக்கள் மின்சாரம் மற்றும் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதில்லை. விவசாய நிலம் உழுவதற்கும் , போக்குவரத்துக்கும் பெரும்பாலும் குதிரைகளையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நூற்றாண்டில் இப்படியும் மக்கள் உள்ளனரா என்று வியப்பாக இருந்தாலும் , அவர்களது செயல்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் அற்புதமாகவும் ஆச்சரியமாகத்தான் உள்ளன எனலாம். எளிமையான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்கும் அமிஷ் மக்களை பழமைவாதிகள் என்று தொடர்ந்து கூறுவது சரியாக இருக்காது எனலாம்.
அறிவியல் அமோக வளர்ச்சியடைந்து புகை கக்கும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்ததோடு சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது.இதனால் தற்சமயம் உலக மக்கள் அனைவரும் அமிஷ் மக்களைப் போன்றே வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது கவனிக்கத்தக்கது.
அமெரிக்க மாநிலங்களில் அனைத்து வகையான வரிகளையும் செலுத்தி வரும் அமிஷ் மக்கள் எந்த சலுகைக்காகவும் விண்ணப்பம் கொடுக்கும் வழக்கம் இல்லை.
தாக்கப்பட்டாலும் பதிலடித்தாக்குதல் நடத்தக்கூடாது என்று நம்பும் அமிஷ் மக்கள் 2ம் உலகப்போரின் போது பலமுறை கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றால் நம்பமுடிகின்றதா?...........
***