Friday, August 8, 2014

ஆகஸ்ட் 8ம் திகதி – உலக பூனை தினம்


உலகளாவியரீதியில் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி உலக பூனை தினமாக கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில், பூனைகள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக…!


  • உலகில் 40 வகையான பூனை இனங்களில் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட பூனைகள் உலகில் வாழ்கின்றன.
  • ஆய்வுத் தடயங்களின் பிரகாரம், உலகில் கி.மு 3600 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வீட்டுப் பூனைகள் வாழ்ந்துவருகின்றன என கண்டறியப்பட்டுள்ளது.
  • பூனைகள் மணித்தியாலத்திற்கு 30 மைல்கள் வேகத்தில் ஓடக்கூடியவையாகும்.
  • பூனைகளுக்கு சுவை அரும்புகள் இல்லை.
  • பூனைகள் 100 இற்கும் மேற்பட்ட வித்தியாசமான சத்தங்களை எழுப்பக்கூடியவையாகும்.
  • சராசரியாக பூனை ஒரு நாளில் 16-18 மணித்தியாலங்கள் உறங்குகின்றன.
  • மனிதர்களின் கைரேகையினைப் போன்றே பூனைகளின் மூக்கு ரேகைகள் தனித்துவமானவையாகும்.
  •  பூனையின் காதில் அவற்றின் இயக்கத்தினை கட்டுப்படுத்தும் 32 தசை நார்கள் உண்டு. இதனால், பூனைகள் தமது காதினை 180° வரையும் அசைக்கக்கூடியதுடன், அவை தனது இரண்டு காதுகளையும் தனித்தனியாக அசைக்கக்கூடிய ஆற்றலினையும் கொண்டவையாகும்.
  •  பூனைகளின் மோப்ப சக்தி மனிதர்களை விடவும் 14 மடங்குகள் அதிகமானதாகும்.
  • விண்வெளிக்குச் சென்ற முதலாவது பூனை Félicette (“Astrocat”) ஆகும். பிரான்ஸ் நாட்டினால் 1963ம் ஆண்டு அக்டோபர் 13ம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்தப் பெண் பூனை தனது விண்வெளிப் பயணத்தின் முடிவில் உயிருடன் பூமியினை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


இங்கே சுவாரஷ்சியமான விடயம் என்னவென்றால் Félix என்கின்ற பாரிஸ் நகர தெருப்பூனையே விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண் பூனை தப்பிச்சென்றமையினால் கடைசி நிமிடத்தில் Félicette என்கின்ற பெண் பூனைக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
  • 32 மாடிகள் (320மீற்றர்கள்) உயரத்திலிருந்து பூனைகள் கொங்கிறீட் தரையில் விழுந்தாலும் அவை பெரும்பாலும் உயிர்பிழைத்து விடுகின்றன.


"லோகநாதனின் பகிர்வுகள்" பக்கத்தினை Facebook இல் தொடர…!

 ***

No comments:

Blog Widget by LinkWithin